உறுத்தல்களுடன் சிலநாள்
ஊரறியா வலிகளுடன் சிலநாள்
எட்டதா உயரங்களில் சிலநாள்
ஏற்றம் கொண்டவர்களுடன் சிலநாள்
ஐயங்களுடன் சிலநாள்
ஒவ்வாமைகளுடன் சிலநாள்
ஓய்தல் இன்றி சிலநாள்
ஓளடதங்களுடன் சிலநாள்
(அ) ஃது எதுவுமின்றி சிலநாள்
ஊரறியா வலிகளுடன் சிலநாள்
எட்டதா உயரங்களில் சிலநாள்
ஏற்றம் கொண்டவர்களுடன் சிலநாள்
ஐயங்களுடன் சிலநாள்
ஒவ்வாமைகளுடன் சிலநாள்
ஓய்தல் இன்றி சிலநாள்
ஓளடதங்களுடன் சிலநாள்
(அ) ஃது எதுவுமின்றி சிலநாள்
தீக்குளித்தல்களுக்கு மத்தியில்
பொறுமையோடு சிலநாள்......
தாண்டவம் சிலநாள்சக்தி லாஸ்யம் சிலநாள்
கோபப்பட்டு சிலநாள்
பாவப்பட்டு சிலநாள்
சொற்களோடு சிலநாள்
சொற்களற்று சிலநாள்
பக்தியுடன் சிலநாள்
புத்தியோடு சிலநாள்
பூடகமாக சிலநாள்
இருப்பின் அடையாளமாக சிலநாள்
இருண்மையில் சிலநாள்
எப்படியும்
நாளை காலை
விடியும் தானே
ஆனால் அவள் மட்டும்
சதா சாந்தமாக
இருப்பது எப்படி சதாசிவா?

No comments:
Post a Comment