கட்டட வடிவமைப்புத்துறையில் பலருக்கும் வடிவமைப்புக்களை செய்திருந்தாலும் இன்னும் செய்துகொண்டிருந்தாலும் நமக்கானது நிச்சயம் வித்தியாசமானதாக புத்தாக்கமானதாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக எதிர்காலத்தில் என்னவனுடன் வாழப்போகும் வீடு எம்முடைய குழந்தைகள் தவழப்போகும் வீடு என எனக்குள் நிறை;த கற்பனை இருக்கின்றது. தற்போது எத்தனை வீடுகள் சொந்தமானதாக இருந்தாலும் என்னவனும் நானும் இணைந்து கட்டப்போகும் இல்லம் இருவரும் பார்த்துப்பார்த்து நிர்மாணிக்க வேண்டும் என்பது என்னுடைய பேரவா. அதேபோன்று தொழில்ரீதியாக நாம் தொடங்கவுள்ள நிர்மாணங்களும் அ;வதறு இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காகவே என்ன தொனிப்பொருளினை எடுத்துக்கொள்ளலாம் என சிந்தித்த போது தட்டுப்பட்டதொரு விடயம் "ஐந்திணை"
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளையும் ஒருங்கிணைத்து நான் வடிவமைத்துள்ளது தான் "Ainthinai Eco Habitat".
- குறிஞ்சி குடில்
- முல்லை மண்டபம்
- மருத நில மாளிகை
- நெய்தல் நீல இல்லம்
- பாலை பரப்பு
குறிஞ்சி நிலம் (மலைப்பகுதி)
வாழ்வு: வேட்டை, காட்டு வாழ்க்கை
உணவு:
- காட்டு விலங்குகளின் இறைச்சி (மான், காட்டு பன்றி)
- தேன்
- கிழங்கு வகைகள்
- காட்டு பழங்கள்
இயற்கையில் கிடைக்கும் உணவுகளை நேரடியாக பயன்படுத்தினர். அதிகமாக வேட்டையாடி உணவுபெற்றனர்.
முல்லை நிலம் (காடு/மேய்ச்சல் நிலம்)
வாழ்வு: இடம்பெயரும் மாடு மேய்ப்பவர்கள்
உணவு:
- பால், தயிர், நெய்
- இறைச்சி
- கம்பு, சோளம் போன்ற தானியங்கள்
பால்வள உணவு முக்கியம். மெதுவான வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவு
மருதம் நிலம் (வயல்வெளி)
வாழ்வு: விவசாயம்
உணவு:
- அரிசி (முக்கிய உணவு)
- காய்கறிகள்
- பருப்பு வகைகள்
- மீன் மற்றும் இறைச்சி
நாகரிகமான மற்றும் செழிப்பான உணவுமுறை. பலவகை சமையல் முறைகள் இருந்தன.
நெய்தல் நிலம் (கடற்கரை)
வாழ்வு: மீன்பிடி
உணவு:
- மீன், நண்டு, இறால்
- உப்பு
- உலர்ந்த மீன்
- கடல் உணவுகள்
கடல்சார் உணவுகள் அதிகம். உப்புச் சேர்க்கை முக்கியம்.
பாலை நிலம் (வறண்ட நிலம்)
வாழ்வு: பயணம், போரியல்
உணவு:
- உலர்ந்த உணவுகள்
- வறுத்த தானியங்கள்
- எடுத்துச் செல்லக்கூடிய உணவு
கடின சூழலுக்கேற்ற எளிய உணவு. நீண்ட பயணங்களுக்கு ஏற்ற உணவு
இவ்வாறு நிலத்தன்மைகேற்ப வாழ்வியல், அந்த வாழ்வியல் சார் உணவு என வாழ்ந்தவர்கள் எம் முன்னோர்கள். மேலும் குறிப்புகளில் உணவில் சேர்க்ப்படுகின்ற காரம் அல்லது உறைப்பு குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. எமது அறுசுவைகளிலும் இது அடங்குவது அனைவரும் அறிந்ததே.சங்ககாலத்தில் மிளகாய் (chili) இல்லை. காரத்திற்கு மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உப்பு, புளி போன்றவை சுவைக்காக பயன்படுத்தப்பட்டன. இது உணவின் இயற்கை சுவையை அதிகமாக வைத்தது என குறிப்புகள் உள. மொத்தத்தில், சங்ககால உணவு என்பது
“இயற்கை + நிலம் + வாழ்க்கைமுறை” என்ற மூன்றின் இணைப்பாக இருந்தது.
இதன் அடிப்படையில் வாகரை உணவகத்தில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. கட்டடங்களும் வடிவமைப்பும் வெறும் கல் , மண்ணாலானவை அல்ல. இவை எம் மண் சார்ந்தவை, எம் கலாசாரம் சார்ந்தவை எம் வாழ்வியல் சார்ந்தவை. என்னுடைய அடுத்த இலக்கு மருதம் நிலம் சார்ந்தது. இதற்காக வயல்பரப்பிற்கிடையிலானதொரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. விரைவில் யாழ் நோக்கி கனவுகளுடன் நகர இருக்கின்றேன்;. இன்னும் கட்டடம் சார் எம் வாழ்வியலை நாம் பேசிக்கொள்வோம்.



No comments:
Post a Comment