Sunday, November 17, 2013

அஸ்வர் எம்பியும் ஆவேஷப்பேச்சும்…… 15.11.2013


ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த வேளை பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வர் எம்பி அவர்கள் திடீரென கடுப்பாகி கத்தத்தொடங்கினார்….

வடக்கின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறீர்கள்…. ஏன் சனல் 4 கூட இது தொடர்பான ஆவணப்படங்களை வெளியிடுகிறது… ஏன் முஸ்லீம்கள் பற்றி பேசக்கூடாது? முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இரவோடிரவாக வெளியேற்றினார்கள். அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை… கிழக்கில் பல முஸ்லீம்களை வெட்டிச்சாய்த்தார்கள் அவர்கள் பற்றி ஏன் காட்சிப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் சிலர் தான் இதை பின்னிருந்து இயக்குகிறார்கள்… இந்த மனித உரிமை பற்றி யார் கேட்கிறார்கள்?..... இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எல்லாவித சுதந்திரமும் இருக்கிறது……..” என்பதாக அமைந்திருந்தது. (இன்னும் இருக்கிறது அதை ஒலிவடிவில் இணைத்துள்ளேன்..ஆனால் இந்த ஒலிப்பதிவு ஊடக அமர்வுக்கு முன் கொடுத்த பேட்டியில் கிடைத்தது. இதே விடயத்தினை தான் ஆவேசமாக ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார்)
இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன் “புலிகள் ஏன் உங்களை வெளியேற்றினார்கள்?” சும்மா ஒருவரை துரத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லையென்றால் உங்களுடன் தனிப்பட்ட விரோதங்கள் ஏதும் இருந்ததா? அதற்காக விடுதலைப்புலிகள் செய்தது முற்றுமுழுதாக சரியென வாதிடவும் நான் தயாரில்லை….

நீங்கள் முதலில் பக்கத்திலைக்கு பாயசம் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் இனத்திற்காக நீங்கள் தான் போராட வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பேசும் நீங்கள் அவர் புலம்பெயர காரணமாயிருந்த அழுத்தங்கள் குறித்து சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் இடம்பெயர்ந்த உங்களுக்கு இவ்வளவு வலியிருக்கும் போது மண்ணை விட்டு தம் உறவுகளை விட்டு போய்விட்ட தமிழர்கள் குறித்தும், அவர்கள் கேட்கும் நீதி குறித்தும் விமர்சிக்க முடிகிறது பெரும் ஆச்சர்யமே. தமிழர்கள் முஸ்லீம்கள் குறித்து பேசாமை பற்றி குறிப்பிடும் நீங்கள் ஏன் தமிழர்களுக்காக நீதி கேட்கக்கூடாது???

சனல்4 இன் ஆவணப்படங்கள் குறித்தும் அவர்கள் தமிழர்கள் பிரச்சினை  மட்டும் பேசியதாக குற்றம் சாட்டுவதும் குறித்து குறிப்பிடும் நீங்கள் சனல்4 எதை காட்டியது என்று அமர்ந்து பார்த்தீர்களா? “ அதில் குற்றமறியாத சிறுவனை கொன்றது குறித்தும் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியது குறித்தும் காட்டப்பட்டது உங்கள் கண்ணுக்கு காட்சியாகவில்லையா?”

புலிகள் உங்களை வெளியேற்றினார்கள் என்று சொல்லும் நீங்கள் புலிகள் எப்போதாவது தனிப்பட்ட ரீதியில் சிறுவர்களை கொன்றார்கள் என்றோ அல்லது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினார்கள் என்றோ ஆதாரத்துடன் நிரூபிப்பீர்களா?

இதை தமிழ் முஸ்லீம் என பிரித்துப்பார்க்காமல் சிறுபான்மையினருக்கான பிரச்சினை என்ற ரீதியில் நோக்கில் நல்லது.

தமிழர் போராட்டம் பற்றி விமர்சிக்கும் போது ஒன்றை மட்டும் நினைவில் இருத்த வேண்டும். சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழர் மீதிருந்த பயம் தான் தமிழர்களின் இனவழிப்புக்கு வழிகோலியது. அதே பயம் அடுத்த சிறுபான்மை முஸ்லீம்களிடம் திரும்பும் போது பல இசைப்பிரியாக்கள் பல பாலசந்திரன்கள் முஸ்லீம் சமூகத்தில் தோன்றலாம்.  அப்போது சனல்4 மட்டுமல்ல சனல்1,2,3….. கூட ஆவணங்கள் தயாரிக்கும் இது குறித்து.....

பாடசாலைக்காலங்களில் சில மாணவர்கள் தமக்கு மாணவர் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக சில “சின்னப்புள்ளத்தனமான” வேலைகளை செய்வதுண்டு. அப்படித்தானுங்கோ நமது சில அரச தலைவர்களும்….. சில வேளை தம்மை மறந்து சின்னப்புள்ளத்தனமாக நடப்பதுண்டு. அதைப் போன்று தானிருக்கிறது இவரது செய்கையும்…. இவரது ஆவேசப்பேச்சை பார்த்து ஊடகவியலாளர் சந்திப்பின் அன்றைய தின ஒருங்கிணைப்பாளர் உக்கு அவர்கள்Please learn civil manners….” என்று சொல்லுமளவுக்கு கீழ்தரமாக அமைந்திருந்தது. இது ஒன்றே போதும் இலங்கை தலைவர்களை மட்டுக்கட்டுவதற்கு……

CHOGM இன் சோகங்கள் தொடரும்....................







Thursday, November 14, 2013

இன்றைய பொதுநலவாய மாநாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்........





வினா – கடந்தகால போர்க்குற்றங்கள் மற்றும் இது தொடர்பிலான புலம்பெயர்ந்தவர்களது கருத்து பற்றி?
விடை – புலம்பெயர்ந்தவர்கள் விரும்பினால் வந்துபார்க்கலாம்.யுத்தம் முடிவுற்று மிகக்குறுகிய காலத்துக்குள் நாம் பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். உங்களுக்கு தெரியுமா? தெற்கில் 2009 இற்கு முன் திடீர் திடீரென குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பல சவங்கள் வீதியில் போடப்பட்டன. வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. நாம் அப்போது புலிகளுடன் பேசத் தயாராகவிருந்தோம். ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

வினா
- இந்தியப்பிரதமர் வருகை தரவில்லையே… எவ்வாறு உணர்கின்றீர்கள்?
விடை – மஹிந்த வாயை திறக்க முன் கமலேஷ் சர்மா…..) ஒருவர் பங்குபற்றவில்லை என்பதால் அவர் அவ்விடயத்தினை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.
மஹிந்த – வெளிவிவகார அமைச்சர் எம்முடன் தானே இருக்கின்றார்.எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது.

வினா – பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ள நீங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கவுள்ளீர்கள்?
விடை – எனது சொந்த விருப்பின் பெயரில் செயற்பட முடியாது. உறுப்பினர்களின் அனுமதியுடன் தான் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

வினா – மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி?
விடை – கடந்த காலங்களின் சில அவலங்களை சுட்டிக்காட்டி அனுதாபங்களை ஏற்படுத்துகின்ற புலி ஆதரவாளர்களின் பேச்சுக்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. எமது அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் உடனும் கலந்துரையாட வேண்டும். அனைத்துக்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. எமது நாட்டிற்கென்று சில விதிகள் உண்டு. சட்டங்கள் உண்டு. அவற்றின் படி தான் செயற்பட முடியும். யார் பிழை செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனையுண்டு.
கமலேஷ் சர்மா – பலவித மீளிணக்க செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எதையும் திருத்தியமைக்க சில கால இடைவெளி தேவை

வினா – பொதுநலவாய நிகழ்வின் ஒரு பகுதியாக சார்ஸ் இளவரசருடன் கைகுலுக்கவுள்ளீர்கள். இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான சுதந்திர விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
மஹிந்த - ????
கமலேஷ்சர்மா – எல்லாவற்றிற்கும் சில வரைமுறைகள் உண்டு. (மீண்டும் கவனிக்குக…. கமலேஷ் மஹிந்தவை பேசவிடவில்லை) ……….. இப்படியே ஜனாதிபதியுடனான வினாக்களுக்கு கமலேஷ் இன் சமாளிப்புக்கள் தொடந்தன…. இறுதியில் சூடாகிவிட்ட இலங்கையின் தலைவர்…..)
மஹிந்த – எமத தலைமைத்துவத்தில் சில நடைமுறைகள் உண்டு. LLRC என்றதொன்று உண்டு. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எங்கும் போய் பாருங்கள். ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்ள முடியும். மற்றது எமது நாட்டில் கைகுலுக்குவதில்லை. “ஆயுபோவன்” தான் சொல்வோம்”

இலங்கை அதிபரிடம் கேட்பதற்கு என்னிடமும் சில வினாக்கள் உண்டு. இதற்கு இன்று போல் கமலேஷ் சர்மா பாய்ந்தோடி வந்து பதில் சொன்னாலும் பரவாயில்லை…….
  1. புலம்பெயர்ந்தவர்களை வந்து பார்க்க சொல்கிறீர்கள். வரலாம் தான் ஆனால் அவர்கள் உயிருக்கு இலங்கையில் அதுவும் உங்கள் ஆட்சியில் உத்தரவாதமுண்டா?
  2.  இலங்கையில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் கணக்கும் இருப்பவர்கள் கணக்கும் வேறுபடுகிறது. யாரும் சாகவும் இல்லை என்கிறீர்கள்…காணாமல் போகவும் இல்லை என்கிறீர்கள். ஒருவேளை இவ்வாறு வருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் மாயமாகிவிடமாட்டார்களா?
  3. இவர்கள் எல்லாம் (ஒன்றிரண்டு தருணந்தப்பிகள் தவிர) புலம்பெயர்ந்து போனதற்கு காரணம் யார்? உங்களுக்கு இதில் பங்கில்லையா?
  4. நீதி கேட்பதற்கு இலங்கையில் உரிமை கூட இல்லை. அப்படியிருக்கும் போது வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒன்றெண்டால் யாரிடம் நீதி கேட்பது?
  5. 2009 ற்கு முன் வன்முறைகள் இடம்பெற்றன. உண்மைதான். ஆனால் யாரால்? யாருக்கு?
  6. தெற்கு சவங்கள் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. வடக்கு சவங்கள் பற்றி சொல்லவேயில்லையே?
  7. தெற்கு குண்டுவெடிப்புகளை நீங்குள் பட்டியலிடுங்கள். வடக்கில் நிகழ்த்திய அட்டூழியங்களை நாங்கள் பட்டியலிடுகின்றோம். எவை அதிகம் என்று பார்ப்போமா?
  8. புலிகளுடன் பேச நீங்கள் தயாராக இருந்தீர்கள் சரி. ஆனால் அவர்கள் சொன்னதை கேட்க தயாராகவிருந்தீர்களா?
  9. புலிகளின் ஆயுதபோராட்டத்தினை சுட்டிக்காட்டி குறைகாணும் நீங்கள் அதன் பின்னிருந்த சிங்கள பேரினவாதிகளின் கபடங்கள் பற்றி சிந்தித்ததுண்டா?
  10. மன்மோகனின் கடிதம் பற்றி வாய் திறக்க முற்பட்ட நீங்கள் மௌனமாகிவிட்டது ஏன்?
  11. வெளிவிவகார அமைச்சர் உங்களுடன் இருப்பதில் உங்களுக்கு திருப்தி. சரி….. ஆனால் அவர் பிரதமரின் வருகைக்கு ஈடாவாரா?
  12. பொதுநலவாய தலைவராக முடிவெடுக்க பலரின் தீர்மானங்களை எதிர்பார்க்கும் நீங்கள் ஏன் நாட்டின் தலைவராக உங்கள் குடும்பத்தவர்களின் முடிவை முன்வைக்கின்றீர்கள்?
  13. பொதுநலவாய அமைப்பிற்கும் அதன் அங்கத்தவர்களின் முடிவுக்கும் முக்கியமளிக்கும் நீங்கள் நாட்டின் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழர்களின் முடிவுகளை மட்டும் பாரபட்சமாக எடுப்பதேன்?
  14.  “புலி ஆதரவாளர்கள்” என்ற பதத்தின் விரிவாக்கம் உங்கள் பார்வையில் “தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அனைவருமா”?
  15.  “யார் செய்தாலும் தண்டணை உண்டு” நல்லது. சட்டம் அதன் ஓட்டை படித்தவர் தாங்கள் என்பதை அதில் மட்டும் காட்டுகிறீர்கள். ஆனால் இந்த போர்க்குற்றவாளிகள் யார்? ஏன் இன்னும் சட்டம் இவர்களை தண்டிக்கவில்லை? குற்றவாளி நீங்களாகவோ அல்லது உங்களை சார்ந்தவர்களாகவோ இருந்தால்?
  16. திருத்தியமைக்க காலம் தேவை தான்? ஆனால் எதை? வீதிகளையும் கட்டடங்களையுமா? எடுத்த காணிகளை எப்போ கொடுக்கப் போகின்றீர்கள்?
  17.  “LLRC” உண்டு தான். இதில் எத்தனை பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன? (பொதுநலவாய நிகழ்வில் நான் அவதானித்த மட்டில் தேசியகீதம் சிங்களத்தில் தான் பாடப்பட்டது. “ஆயுபோவன்” என்று தான் பதாதைகள் காணப்பட்டன. இந்த சின்ன விடங்களிலேயே “LLRC” இன் வாடை கூட இல்லையே?)
  18. இறுதி வினா…. ஊடகவியலாளர்களுக்கான இம் அமர்வில் நாம் உங்களிடம் கேள்வி கேட்டால் ஏன் கமலேஷ் சர்மா பதிலளிக்கின்றார்?

உங்கள் இறுதி பஞ்ச் டயலொக்கில் கூட சமாளிப்பு தான் தெரிகிறது. சாமர்த்தியம் தெரியவில்லையே…..தமிழர்களும் கைகூப்பி தான் வணக்கம் சொல்வார்கள்.சார்ல்ஸ் இன் கைபிடிக்காததும் நன்றே…தமிழீழதலைவனின் தலைமகன் பெயரும் இது தான். நீங்கள் சொன்னது போல் கைகூப்ப தான் உங்களால் முடியும்…..

அதிகம் வாசிக்கபட்டவை