Monday, May 28, 2012

என் ஒரு தலைக்காதல்



காவியங்களாகின்றன -சில காதல்கள்
வரலாறாகின்றன - சில காதல்கள்
அழியா படைப்புகளாகின்றன – சில காதல்கள்


பந்த பாசங்களை  பகைக்கின்றது
சாதி மதங்களை இணைக்கிறது
பத்தினிகளை  படிதாண்ட வைக்கிறது – ஏன்
தற்கொலைகளில்  கூட முடிகிறது - இந்த காதல்

ஒருவனை ஞானியாக்குகிறது
ஒருவனை கவிஞனாக்குகிறது
குடிகாரனாக்குகிறது...
கொலைகாரனாக்குகின்றது....

ஆனால்....
முகம் பார்க்காத
பதவி கேட்காத
பணம் தேடாத – இதுரை
சொல்வதற்கு கூட தைரியம் தராத
மனதில் பூட்டி வைத்த - என்
ஒரு தலைக்காதல் மட்டும் - என்னை
தலையசைக்க வைத்துள்ளது
திருமணத்திற்கு....  - என்னவன்
இன்னொருத்திக்கு சொந்தமானவன் - என
அறிந்த போது..

மீண்டும் குழந்தை ஆகிட வேண்டும்......

புத்தக சுமையில்லை
ஆசிரியரின் பிரம்படிகளிலில்லை
வீட்டு வேலைகளுக்கான நெருக்கல்கள் இல்லை
குழந்தையாகவே இருந்திட்டால்...

வீதியில் விடலைகளின்
பார்வையை சந்திக்க தேவையில்லை
பரீட்சை பெறுபேற்று பயமில்லை
முகத்தில் தோன்றும் பரு பற்றிய கவலையில்லை
தினமும் கண்ணாடி முன் காட்சி தர தேவையில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்..

பருவமாற்றத்திற்கான விளக்கங்கள் தேவையில்லை
அடக்கம் பற்றி அம்மாவின் நச்சரிப்பில்லை
வேவு பார்க்கும் அண்ணாவிடம் அச்சமில்லை
அப்பாவின் முறைப்புகளுமில்லை – நான்
குழந்தையாகவே இருந்திட்டால்..

சேலை கட்டும் உபத்திரவமில்லை
வேலை தேடும் கட்டாயமில்லை
காதல் கடிதங்களுக்கு பதில் போட தேவையில்லை
கணவனாக வரப் போகிறவன் பற்றிய கனவில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்...

சீதனப் பிரச்சினைகளில்லை
பிரசவ வலியில்லை
மாமியார் கொடுமையில்லை
பிறந்திட்ட பிள்ளைகளுக்கான பத்தியங்களில்லை
குழந்தையாகவே இருந்திட்டால்.....

மதமில்லை
இனமில்லை
வஞ்சகமில்லை
பயமில்லை...குழந்தைகளுக்கு


இறைவா!
யான் யாசிப்பதெல்லாம்
மீண்டும் பிறவிபெற்றால்
வளராத வரம் வேண்டும்!
கள்ளமில்லா சிரிப்புடன்
பகை மறந்து வாழும் - என்
குழந்தைப் பருவமே போதும்
நீ அருளிட்டால் - உனக்கு
தந்திடுவேன் - என்
இனிய மழலை முத்தங்கள்......

அதிகம் வாசிக்கபட்டவை