Showing posts with label அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து!. Show all posts
Showing posts with label அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து!. Show all posts

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……09

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

Feb 14th - Valentine’sDay: Celebration of love and companionship 

பக்கம்: 1760

வணக்கம் நாட்குறிப்பே,
அம்மாவுடன் பேசிய பின்னர் இடைப்பட்ட இந்த நாட்கள் மிகவும் கனமானவை. என் அம்மாவிடம் நான் சொன்னவற்றினை அவர் ஜூரணிக்க நேரம் தேவைப்படும் என்பது எனக்குத்தெரியும். இது அதற்கான காலம். அம்மாவும் நானும் சொற்பமாகத் தான் பேசிக்கொள்கின்றோம். ஆனால் எனக்குப் பொருத்தமற்ற வாழ்வை நான் நிராகரித்திருப்பதும் நான் விரும்புவதாக அவரிடம் சொல்லியிருக்கின்றதுமான இரண்டுமே ஒரு தாயினால் அவ்வளவு எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரிந்திருக்கின்றது. அம்மா இறுதியாக என்னிடம் சொல்லியது இ;ன்றும் எதிரொலித்துக்கொண்டுதானிக்கின்றது. எதற்கும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் மகள் என அம்மா சொல்லியிருப்பதிலும் நியாயமில்லாமலில்லை. ஆனாலும் அம்மா என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பளித்திருந்த அந்த நேர்மை நான் இதுவரை சந்தித்தவர்களிடம் கண்டதில்லை. 


பக்கம்: 1775

என் நாட்குறிப்பே,
எனக்கு ஓவென்று அழவேண்டும் போலிருக்கின்றது. நீ அஃறிணை. உனக்கு உணர்வுகள் புரியுமா? நேற்று நான் இதேநேரம் இருந்த மனநிலைக்கும் இன்றுள்ளதற்கும் இடையேயான தூரம் மிக மிக நீண்டது. நேற்று நாட்டில் முதன்முதல் வழங்கப்பட்ட விருதொன்றினை பெற்றிருந்தேன். இடம்பெற்ற இடமும் இரு தினங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டிருந்தது. விருது வாங்க போவதாக சொன்ன போது புதிய இடம், புதிய நிகழ்வு என என் மாணவியொருவரும் இணைவதற்கு கெஞ்சியதால் கூட்டிப்போயிருந்தேன். விருது நிகழ்வு இரவு பதினொன்றினையும் தாண்டி போய்கொண்டிருந்தது. அம்மாவும் எம்முடன் வந்திருந்தார். எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென என்னுடைய மாணவி “ மிஸ் நீங்க சேரிடம் விருப்பம் கேட்டதாம் அவர் வேண்டாம் என்றவராம்…..” என்றாள். எனக்கு அடிநுனி புரியவில்லை. அம்மாவுக்கும் தான். ஆனால் எனக்கு முன்னர் யார், எப்போது இதனை சொன்னது என அம்மா துருவி கேட்டுவிட்டார். அந்த நிமிடத்திலிருந்து அம்மாவின் முகம் மாறியதை நான் அவதானித்துவிட்டேன். அம்மா ஒரு நாளும் மூன்றாம் நபர் முன் குடும்ப விடயம், தனிப்பட்ட விடயம் பேசமாட்டார் என்பதும் தெரியும். 

வீடு வரும் வரை அநேகம் பேசாத அம்மா உடை மாற்றிய பின்னர் என்னை இருத்தி கேட்ட கேள்விகள் இந்த ஜென்மத்திற்கும் போதுமானவை. “ ஒரு ஆண் முகநூலில் இரவு 11 மணிக்கு ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் இந்த உறவு என்ன?, ஏன் அந்த பெண்ணிடம் உன்னை குறித்து பேசவேண்டும்? நீ சொன்னது போல் நேர்மையானவர், படித்தவர், முதிர்ச்சியுள்ளவர், நல்ல குடும்பத்தினை சேர்ந்தவர் முக்கியமாக உன்னை நேசிப்பதாக நீ சொன்னவர் செய்யும் வேலையா இது…?”

நாம் ஒருவரை நேசிக்கின்றோம், நேர்மையாக அணுகுகின்றோம், காத்திருக்கின்றோம், எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மனதை உடைக்க கூடாது என்று நினைத்திருப்போம். ஆனால் உங்கள் உணர்வுகளை, மனதை ஒருவர் உடைக்கும் போது எப்படியிருக்கும் என உணர்ந்திருக்கின்றீர்களா….? இந்த புள்ளியை கடந்திருக்கின்றீர்களா…? மூன்றாம் நபர் என்னை பற்றி பேசிய போது என் அம்மா கண் கலங்கியிருந்ததை நான் பார்த்தேன். அது அவள் வளர்ப்பின் மேல் வந்த சந்தேகம், என் மீது அவள் 28 வருடங்களாக வைத்த நம்பிக்கையின் உடைவு. அவள் கேட்ட கேள்விகளிலும் பார்த்த பார்வையிலும் நிறையவே உடைந்திருக்கின்றேன் நான். இந்த வலி தீர நீண்ட நாளாகும் என புரிகின்றது. 


பக்கம்: 1782

நாட்குறிப்பே,

நிச்சயிக்கப்பட்டவரிடம் எதிர்பார்த்த அன்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் விலகிவிட நினைக்கின்ற நான். என்ன விலை கொடுத்தாவது என்னை வாங்க நினைக்கின்ற ஒருவர்…. எப்போது நிச்சயார்த்தம் குழம்பும் வீடேறி பெண் கேட்கலாம் என நினைக்கின்ற பலர் என என்னை குழப்ப மேகங்கள் என்னை சுற்றுகின்றன. 

அம்மா இப்போதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை. குழந்தைகள் மூவரின் மூலமும் வீட்டில் வேலை செய்பவர்கள் மூலமு; தான் பேசுகின்றாள். காத்திருந்து சாப்பிடுவது, காலையில் என்னை வீணையிசைக்க வைத்து கேட்பது, நான் அம்மா மடியில் தூங்குவது எல்லாமே தொலைந்துவிட்டது. அம்மா என்னை நம்பவில்லை. நிச்சயார்த்தம் நிறுத்தப்பட்டதற்கு இந்த தொடர்புதான் காரணமென்று நினைக்கின்றாள். நான் ஒரு காலத்தில் நேசித்தது உண்மை ஆனால் நேரடியாக சொல்லவில்லை. இது பற்றி அவரிடம் பேசியது கூட இல்லை என்று சத்தியம் செய்துவிட்டேன். அவருக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியும் பதிலில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அம்மாவில் மாற்றமில்லை. இது என்னை சுடுகின்றது. தீயாக சூழ்ந்திருக்கின்றது. 


பக்கம்: 1790

இனிய நாட்குறிப்பே,
கடந்த சில நாட்களாகவே பல கதைகள் என்னை வந்து சேருகின்றது. கண்டதும் காதல் என அழைபவருக்கு, கண்ட பெண்களிடம் “பெரிய மனம்” என்று பேசுபவருக்கு, உன்னை நான் சேலையில் படம் பிடிக்கின்றேன் என வழிபவருக்கு, என் உதவியாளராக வா உன் தலையில் குட்டுகின்றேன் என முகநூலில் பெண்களிடம் அலட்டுபவர்களுக்கு, வயது குறைந்த பெண்களிடம் கூட தன்னுடைய பழைய கதைகளை மறைத்து பாலியல் வறட்சிகளை தீர்த்துக்கொள்பவருக்கு என் அன்பு தேட வைக்கும் என நினைத்தது என் முட்டாள்தனம்.நான் விபத்தால் தேங்கி நின்றாலும் இந்த நாட்களில் பல கதைகள் என்னை நோக்கி வந்து சேருகின்றன. எந்த அக்காவிடம் உதவிகேட்க நினைத்தேனோ அதே அக்கா அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் பற்றி என்னிடமே விபரிக்கின்றார். அவர் வீட்டின் வரவேற்பறையில் படங்கள் கூட மாட்டப்பட்டிருக்கவில்லை. அவர் படுக்கையறையில் ஒரு மேசை, கட்டில் என அந்தரங்கங்களை கடைபரப்புகின்றார். அவருக்கும் இன்னுமொரு இளம் ............குமான நெருக்கத்தை என்னிடமே சொல்கின்றார். மிரிச… மௌன்ட்லாவனியா… கேரளா… இந்தியா என அவருடன் நீண்ட பயணங்கள் பற்றி பல பெண்களின் பல கதைகள்….. ஆக வெளியில் தான் நீரோடை உள்ளுக்குள் குப்பைகள் நிறைந்த சாக்கடை நினைத்த கணங்களை நினைத்து அருவருப்பாகவிருக்கின்றது…. இந்த நிமிடம் இந்த நிலம் பிளந்து என்னை விழுங்கிவிடாதா என்றிருக்கின்றது. 

பக்கம் : 1793

வணக்கம்,
இன்று என் பெரியண்ணாவின் முன் குற்றவாளியாக நின்றிருந்தேன் நான். சத்தியமாக என்னுடைய நினைவ தெரிந்து என் அண்ணா என்னை பெயர் சொல்லி கூப்பிட்ட நாள் இது தான். நிச்சயார்த்த்தினை நான் உடைந்துக்கொள்ள முயன்றது கூட அவர்கள் பார்வையில் பெரிதாக படவில்லை. ஆனால் என் மேல் பூசப்பட்ட பழி இன்னும் ஈரம் காயாமல் தான் இருக்கின்றது. எனக்கும் அவருக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும் அதனால் தான் அவ்வாறு அவர் இன்னொரு பெண்ணிடம் பேசியிருக்கின்றார் என என் மொத்த குடும்பமும் நம்புகின்றது. இது எனக்கு வலிக்கின்றது. நம்மை அல்லது நாம் ஒருவரை நேசித்து தோற்றுப்போகின்றோம் என்பதை விடவும் வலியானது நம் தூய்மையான அன்பு களங்கப்படுவது தான். அப்பாவை இழந்திருக்கின்றேன், எம் குடும்பம் பல இழப்புகளை சந்தித்திருக்கின்றது ஆனால் நான் முதன் முதல் அனாதையாக உணர்ந்த தருணம் இது தான். 

பக்கம் : 1797

இனிய நாட்குறிப்பே.
அதிகாலையில் புது இலக்கத்திலிருந்து அழைப்பு. நிச்சயிக்கப்பட்டிருந்தவரின் நண்பர் ஒருவர் தான் பேசினார். “தன்னால் என்னை விட்டுப்போக முடியாது என்றும் என்னைக்குறித்து தான் நிறைய திட்டங்கள் ஏற்கனவே வைத்திருப்பதாகவும்” அவர் தெரிவித்தாக கூறினார். என் உள்ளுணர்வின் படி அவர் அருகில் தான் நிற்கின்றார் என புரிந்திருந்தது. எனக்கு என்ன மொழியில் புரியவைப்பது என்பது விளங்கவில்லை. என்னளவில் ஒரு பந்தம் மனம் சார்ந்து அமைய வேண்டும். இந்த பந்தம் ஒரு தலைமுறைக்கான பந்தம். சின்ன சின்ன அன்பு, அக்கறை, புரிதல், குட்டிச்சண்டைகள், ஊடல்கள் இல்லாத இந்த உறவிற்கான பெயரென்ன? ஒரு இயந்திர மனிதனுடன் என்னைப் போன்ற ஒருவர் வாழ்வது சாத்தியமாகுமா?

என் நண்பிகள் சொல்வது போன்று அமெரிக்க வாழ்க்கை, வைத்திய நிபுணரான கணவர், கம்பீரமான ஆண், நிறைந்த பணம், சொத்து, குலம், கோத்திரம் மட்டும் போதுமா? நண்பிகள் அடிக்கடி என்னை கண்டிப்பது போன்று செட்டிலாவதற்கு ஒரு வாழ்க்கை தேவையா? வாழ்தல் என்பது மென்மையான கவிதையாக இருக்க வேண்டாமா? சிறு சிறு பகிர்தல்கள் வேண்டாமா? ஆழ்ந்த நேசிப்பு வேண்டாமா?

நான் இங்கு நினைப்பதை அவர் அங்கு உணரவேண்டும்… ஒரு நாளில் ஒரு நிமிடமாவது என்னிடம் பேசவேண்டும்…. என்னை , என் குடும்பத்தை, என் மண்ணை நேசிக்க வேண்டும், இன்னாரின் துணைவி என்பதை நான் தலை நிமிர்ந்துசொல்ல வேண்டும்…. வீடென்பது வெறும் கல், மண்ணல்ல. அது உணர்வுகளின் கூட்டிணைவு என்பது புரிந்திருக்க வேண்டும். திருமணத்தின் போதும் கூட சம்பிரதாயத்திற்காக ஒரு மெட்டியை அம்மியில் வைத்து என் காலில் மாட்டினாலும் அடுத்த மெட்டியை தன் உள்ளங்கையில் என் பாதத்தினை ஏந்தி தான் என் இடக்காலின் விரலில் மாட்ட வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் ஆண்மை. எம் குழந்தைகள் பணம் நிறைந்த மாளிகையில் பிறப்பதை விடவும் உழைப்பும் போராட்டமும், அன்பும் , பண்பும் மிக்கவர்களாக வளர வேண்டும் என்பது தான் என் விருப்பம். 












அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……08

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

Feb 14th - Valentine’s Day: Celebration of love and companionship 

உலகத்தில் எவ்வளவோ நினைவுகூறல் நாட்களுண்டு. ஆனால் காதலர் தினம் போன்று பரந்தளவில் கொண்டாடப்படுகின்ற தினம் ஏதாவது இதுவரை உண்டா? இது ஒருவகையில் வர்த்தரீதியான நிகழ்ச்சி நிரலும் கூட. ஆனால் சில விடயங்களின் பின்னால் எந்த நிகழ்ச்சிசிரல் இருந்தாலும் அதில் உணர்வுரீதியானதொரு விடயம் இருக்குமென்றால் அது நல்லதே. ஆனால் பாருங்கள் “LOVE” என்பதை யார் நேரடி மொழிபெயர்ப்பாக “காதலர் தினம்” என்று மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை நம்மில் பலரும் இதனை நாம் ஆண்- பெண் காதலுக்கான நாளாக மட்டும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இதனை "அன்பு நாள்” என்று தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் அன்பு என்புத காதலுடன், பாசம், நட்பு, ஜீவகாருண்யம், கருணை என நேசித்தலின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதொன்றாகவுள்ளது.

Celebrating Love on Valentine's Day: A Guide to Showing Affection | Humans 

அன்பு மனதிலிருந்தால் பொதும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்துக்கதை. அன்பை நமக்கு வெளிப்படுத்த தெரிய வேண்டும். இன்னொரு விதமாக பார்த்தால் அன்பு மனதில் இருந்தால் ஆத ஏதாவதொரு வடிவில் வெளிப்பட்டே ஆகும். ஆன்பையும் கர்ப்பத்தினையும் மறைத்திட முடியாது. சரி எப்படி அதை வெளிக்காட்டுவது…..? வார்த்ததைகளில் காட்டலாம், சிறு சிறு செயல்களில் காட்டலாம், அணைப்பு, முத்தம், பரிசு என வெளிக்காட்டலாம், பின் நின்று ஒருவரை வழிநடாத்துவதில் காட்டலாம், தூரத்தில் நின்று அவர்கள் கூட அறியாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். குறித்த நபரிடம் வெளிப்படையாகவிருக்கலாம், விடயங்களை பகிர்வதன் மூலம், ஏன் கண்ணீர் டூலம் கூட அன்பு சட்டென்று வெளிப்பட்டு விடுகின்றுத. இன்னுமொரு வழியிலும் அன்பை காட்டலாம். அது “விலகல்”. நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை, நம் அருகாமை அவருக்கு பிடிக்கவில்லை, அல்லது அவருக்கு நம்மை விட இன்னுமொருவரை பிடித்திருக்கென்றால்; அவரை காயப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அல்லோலகல்லோலப்படுத்தாமல் விலகுவது. இது ஒருவகையில் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடும் கூட. 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1690

இனிய நாட்குறிப்பே….
சிலநேரங்களில் இந்த விதியென்பது என்னிடம் என்ன சொல்ல வருகின்றதென்பது எனக்கு புரிவதேயில்லை. இன்று “ அன்பின் தினம்” வழமை போன்று சில நண்பர்களின் வேண்டுகோள், அன்புத்தொல்லைகள், அரியண்டங்கள் என தான் என் நாட்கள் கடந்துசென்று கொண்டிருந்தது. திடீரென்று மதியமளவில் வாகனமொன்று சடார் என்று வந்து நிற்க எட்டிப்பார்த்தால் நிச்சயம் செய்யப்பட்டவரும் அவர் குடும்பமும் வந்திருந்தார்கள். இவர் எப்போது நாட்டிற்கு வந்தார்….?

என்ன தான் கடுப்பிருந்தாலும் வீடு வரை வந்தவர்களை வரவேற்றாகத்தானே வேண்டும். பண்பாடு அதுதானே… அமர வைத்தாயிட்டு…. மேசை முழுவதும் பூக்கள், பரிசுகள் என ஏராளமாக நிரம்பிக்கிடக்கின்றன. தான் இன்றைய நாள் என்னை பார்க்க வேண்டுமென்றே தன் வேலைகளை ஒத்திப்போட்டு, நாடு கடந்து வந்ததாக என் அம்மாவிடம் அவர் அம்மாவும் அவரும் பல தடவை கூறுவதைக்கேட்டேன்.

அதெப்படி நான் அமைதியாக சகித்துக்கொண்டு மனதால் வாழ்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் வராத காதல் நான் வேண்டாம் என்று தூக்கியெறிந்த பின்னர் வந்திருக்கின்றுத? அருகில் நிற்கும் போது ஒதுக்கிட முடியாத சில நிமிடங்கள் எப்படி இப்போது நாள் கணக்கில் நீண்டிருக்கின்றுத.? ஒரே நாட்டில் அருகருகான நகரத்தில் நாம் படிக்கும் போது ஓரு மணிநேரம் ஒதுக்கி வந்து என்னை பார்க்க வேண்டும் என்று துடிக்காத இதயம் இப்போது பல மைல் கடந்து வந்து என்னை பார்க்க வைக்க எது நெட்டித்தள்ளியிருக்கும்…..? தனியே பேச வேண்டும் என்றார். அட இது கூட முதல் தடவை தான்.

தனியே வந்ததும் முதல் கேட்ட கேள்வி “ யாருடன் நின்று இன்ஸ்டாவில் படம் போட்டுள்ளாய்…?” என்பதாக இருந்துத. என் நண்பேன் என்றேன் நான். 

நண்பனின் தோளில் சாய்ந்து தான் போட வேண்டுமா….? அதுவும் பொதுவில் ஏன் போட்டோ போட வேண்டும்?

"நீங்கள் தானே சொன்னீர்கள் நான் பட்டிக்காடு மாதிரியிருக்கின்றேன் என்று….. அதனால் தான் என் நாகரீகத்தினை காட்ட போட்டேன். உங்கள் நண்பன் உங்கள் வருங்கால மனைவிக்கு முத்தம் தருவது நாகரீகத்தில் சேர்த்தியென்றால் இதுவும் அதனுள் அடங்கும்…. " இது நான்..

“தயவுசெய்து இப்படியான விசர்தனங்கள் இனிமேல் வேண்டாம்…”

“விசர்தனமா… நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நடுவில் கத்தி.., அதனை வைத்து ஒருவன் எனக்கு அழைப்பு விடுத்த போது என்ன சொன்னீர்கள்…. இதெல்லாம் இப்போது சகஜம் என்று … து போல் தான் இதுவும்… அவர் என் நண்பர், இருவரும் பாடல் ஒன்றின் காட்சியில் நடிக்கும் போது எடுத்ததை போட்டேன்…” 

 “ஓ நான் பயந்திட்டேன்….."
ஆக இவ்வளளவும் இந்த பயத்தில் தானா…. சிரித்துவிட்டேன் நான். ஆனாலும் இறுதியாக சொல்லிவிட்டேன் என் முடிவில் மாற்றமில்லை என்று. கோபமாக கத்தினார். “என்ன விலை கொடுத்தாவது உன்னை வாங்குவேன்…” என்று இறுதியாக உறுமினார். இப்போதும் விலை தானா….? “என்னால் நீயில்லாமல் இருக்க முடியாது என்றோ…. உன்னை மிஸ் பண்றன் என்றோ சொல்லியிருக்கலாம்… வானிலை மாறியிருக்கும்.

இறுதியாக போகும் போது “ என்னைப்போன்ற அல்பா ஆண் கிடைக்க மாட்டான். நாம் இருவரும் சேர்ந்தால் நமக்குள் ஈகோ வராது. இன்னொருவனால் உன் உயரங்களுடன் உன்னை ஏற்க முடியாது” சொல்லிவிட்டு போய்விட்டார். 

அவர் குடும்பம் விடைபெற்று இந்நிமிடம் வரையில் ஐந்து மணிநேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை மணிநேரங்களில் நான் இரு விடயங்களை நன்றாக புரிந்திருக்கின்றேன். ஒன்று நம் நிச்சயார்த்தம் நிறுத்தப்பட்டால் அவருக்கும் எனக்குமான பிரிவு சாதாரணமாக இருக்காது. அது இரு சக்திகளுக்கான மோதலாக இருக்கும். இதற்கான விளைவுகளை என் வருங்கால துணைவர் உட்பட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இரண்டாவது இந்த நிச்சயார்த்தம் எனக்கும் ரு  Toxic ஆன ஆளுக்கும் நடந்திருக்கின்றது. இவர் எண்ணம் நேசிப்பதல்ல என்னை அடைவது… அம்மா இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார். 

ஆனால் இதில் பல முரண்நகையுண்டு. அநேக இளவரசிகள் இளவரசன்களை விட படைத்தளபதிகளையே நேசித்ததுண்டு. காரணம் தளபதிகளாலேயே மண்ணையும் தனக்கான துணையையும் இறுதிவரை, உயிர்மாயும் வரை உயிராக நேசிக்க முடியும். இளவரசிகள் வேண்டுவது பதவியோ அல்பா ஆணோவல்ல அன்பும் பாதுகாப்பும் மட்டுமே….. நானும் வேண்டுவது! நீ எவ்வளவு உயரமான நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் நான் நீந்த ஓடையாகித்தானாக வேண்டும், வான் முட்டும் மலையாகவே இருந்தாலும் நான் ஆட மேடையாகித்தானாக வேண்டும்.
குட்நைட் 

பக்கம்: 1710

இனிய டைரியே
இன்றுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி ஐந்து நாளாகின்ற
து. என்னிடம் எத்தனையோ பேர் நேசிப்பதாக சொல்லியிருக்கின்றார்கள், ஆனால் நான் ஒருவரிடம் என் அன்பை சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதாவது நிகழ்ந்துவிடுகின்றது.  எட்டு மாதங்களுக்கு முன்னர் பல வருடங்களின் பின் பயிற்சியில் கண்டிருந்தேன். பயிற்சியின் போதும் சரி பின்னர் ஒரு மாதம் வரையிலும் சரி அவரது முன்னைய வாழ்க்கை உடைந்திருப்பது எனக்கு சத்தியமாக தெரியாது. அறிந்த பின்னர் நான் சந்தோசப்பட்டேனா? கவலைப்பட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. முடிந்த பயிற்சியின் நோட்ஸ் கேட்பதாக பாசாங்கு செய்து குறுஞ்செய்தி அனுப்பி….. பின்னர் எமது நிறுவன நிகழ்வுகளுக்கு வளவாளராக கூப்பிட்டு, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, நிமிடங்களை சேமித்து…. குட்டுக்கள் வாங்கி…. முதன் முதல் ஓரு ஆணின் கண்களை வரைந்து… “Keeping my distance………” இல் வலி வாங்கி… பல வருடங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் சந்தித்த போது எடுத்த புகைப்படம், தவறிவிழுந்த கைகுட்டையும் பேனையும் , நிகழ்வுகளின் போது கைபட கிறுக்கிய தாள்கள் உட்பட பல சேமிப்புக்கள்……பைத்தியகாரத்தனங்கள்….  

ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இது எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம். ஏப்படி என் அலுவலகத்திலுள்ள வால்களுக்கு தெரிந்துத… பகிடி பண்ணவும் ஆரம்பித்துவிட்டார்கள்…. கண்கள் காட்டிக்கொடுத்திருக்குமோ….? ஏப்படியென்றாலும் இந்தப்பகிடிகள் அவரை காயப்படுத்தக்கூடாது.  ஆனால் ஒன்று என்னால் ஏற்கனவே உடைந்திருக்கும் மனதை காயப்படுத்தவோ… தூக்கியெறியவோ முடியாது. எனக்கு இந்த உறவை நீடிக்கும் போது அல்லுத திருமணம் எனும் பந்தத்திற்குள் கொண்டுவரும் போது எதிர்கொள்ளவுள்ள இழப்புகள், முரண்பாடுகள் குறித்தும் தெரியும். இதனை அங்கும் புரிய வைக்க வேண்டும். உணர்வுகள் விளையாட்டல்ல தானே… நேர்மையும் அறமும் அது தானே இதற்காகத்தான் எமக்கிடையில் இருக்கும் ஓரு அக்காவிடம் சொல்லி உதவிகேட்க போயிருந்தேன். அப்போது தான் இந்த விபத்து என்னை முத்தமிட்டது. 

விபத்தின் முத்தமிடலில் காயம்பட்டு சுயநிலை இழக்கும் முன் என்னை தாங்கிப்பிடித்த , அணைத்துத்தூக்கிய கைகளுக்கு சொந்தகாரனின் முகத்தை அந்த இறுதி நிமிடத்திலும் நிமிர்ந்து பார்த்தேன். இவர் ஏன் இப்படியழுகின்றார். எதற்காக இந்த கண்ணீர்? ஏன் அந்த இறுதிநேர இமை மூடல்களின் முன் பார்த்த கடைசிக்காட்சி இதுதான். சுயநினைவு வர இரு நாட்கள் ஆனது என அம்மா தான் பின்னர் சொன்னார். இமை திறந்த போதும் சுற்றி நின்றவர்கள் நடுவில் அந்த கண்களை நான் மீண்டும் பார்த்தேன். அந்த கண்களின் உணர்வுகளை படிக்கும் சக்தி எனக்கில்லை என தோன்றுகின்றது… 

எனக்கு ஊசேற்றும் போது தாதியர்களை அனுமதிக்காது தாங்களே குத்தும் போது என் பாதியினதும், என் மீதியினதும் கைளில் நடுக்கத்தினை உணர்ந்திருக்கின்றேன். நெருக்கமானவர்களை அணுகும் போது நிபுணர்களே தடுமாறித்தான் போகின்றார்கள். ஆனால் ஊசிப்பயத்தில் நான் அழும் போது அவன் உதடுகள் நடுங்குவதை, பார்வையை திருப்பிக்கொள்வதை இங்கிருந்தே கண்ணாடி சுவரைத்தாண்டியும் என்னால் பார்க்க முடிகின்றது. இவ்வளவு நாட்களும் நம்மருகில் நம்மை நேசிக்கின்றவர் இருந்தும் அவதானிக்க முடியாதளவு இருந்த முட்டாளா நான்? இது என்ன…. எனக்கு உடல் வலியுடன் மனக்குழப்பமாகவும் இருக்கின்றது. 

பக்கம்: 1740 

வணக்கம் நாட்குறிப்பே….
என் வாழ்நாளில் நான் பயணிக்காமல் ஒரே இடத்தில் நின்றிருப்பது இந்த நாட்களில் தான். ஏறத்தாழ 90 நாட்களாகின்றன. இப்போதெல்லாம் மருந்துக்களும் புத்தங்களுமே என் நாட்களை பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றன. கூடவே ஆறு சிறு கரங்கள். இந்த விபத்தில் பல நட்டங்கள், வலிகள், கவலைகள் இருந்தாலும் என் அண்ணா குழந்தைகளின் முகத்தில் அப்படியொரு மகிழ்வை நான் அவதானிக்கின்றேன். முன்பெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கும் போது இவர்களுக்கு உணவூட்டுவதற்கு பெரும்பாடு படவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் மூவரும் என்னருகில் வந்து சாய்ந்தவாறு குழப்படி செய்யாமல் சாப்பிடுகின்றார்கள். எனக்கும் தங்கள் குட்டிக்கைகளால் ஊட்டிவிடுகின்றார்கள். அருகிலிருந்தே விளையாடுகின்றார்கள், அம்மா அறுவை சிகிச்சை காயங்கள் தாக்கப்பட்டுவிடும் என்று இவர்களை இழுத்துச்சென்றாலும் ஆழது ஆர்ப்பாட்டம் செய்து என்னருகில் வந்து தூங்குகின்றார்கள். என்னறை முழுவதும் விளையாட்டுப்பொருட்கள் தான் இறைந்து கிடக்கின்றன. 

நேற்று தான் என் தொலைபேசியின் அழைப்புக்கள் குறுஞ்செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன். அல்பா ஆணின் தவறவிட்ட அழைப்புக்கள் சில இருந்தன. வீட்டு தொலைபேசியில் ஓரு தடவை பேசியதாக அம்மா சொன்னார். நிபுணர்களுக்கு பேச நேரமிருப்பதில்லை தானே… ஆனால் பணத்தால் வாங்க முடியும்.  என்னை நேசிப்பதாக, சம்மதிக்காவிட்டால் கையறுக்கவுள்ளதாக, நீயில்லை என்றால் நானில்லை என்று சொன்ன ஒருவரிடமிருந்தும் தகவல்கள் இல்லை. காணாமல் போய்விட்டார்கள் போல… மீண்டும் வெளியில் நான் தலைகாட்ட தொடங்கும் இவர்கள் ஓரு தலைக்காதல்கள். நான் நேசித்தவரிடம் இருந்து ம்கும் ஓரு வசனம் கூட இல்லை…. குறைந்த பட்சம் காணவில்லை என்ற பதைபதைப்பு….. ஒருவர் என்றால் தானே ஞாபகம் இருப்பதற்கு….. அன்பு ஓரு இடத்தில் மட்டும் குவிந்திருந்தால் தானே அங்கு இழப்பு குறித்த வருத்தமுண்டாகும்.?  நல்லகாலம் மனதை அந்த அக்காவிடம் கொட்டவில்லை. இப்படியான ஓரு நேர்மையற்ற அன்பிற்கு தானா போராட நினைத்தேன் என்றிருக்கின்றது…… 
ஆனால் ஒருவர் மட்டும் தினமும் காலை வணக்கத்துடன் இடைவிடாமல் தினம் தவறாமல் அனுப்பியிருக்கின்றார். அன்று என்னை வீதியில் அணைத்துத்தூக்கிய கண்களுக்குறியவன் ….. 

குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள், கவனிப்புக்களை விட அணைப்பும் அருகாமையும் தேவை என்பதை எப்படி என் கட்டில் நாட்கள் புரியவைக்கின்றதோ அதேயளவு கனதியுடன் நாம் நேசிப்பவர்கள் எல்லாம் நம்மை நேசிப்பவர்கலல்ல என்பதை இந்த விபத்தின் காயங்கள் சொல்கின்றன. சில நேரங்களில் விபத்தும் நல்லதே….. 

பக்கம்: 1750 

இனிய நாட்குறிப்பே,
வருத்தமுள்ளவர்கள் வைத்தியர்கள் உள்ள வீட்டில் இருக்க கூடாது. என்னை என் குடும்பம் பாடாய்படுத்துகின்றது. ஓடிக்கொண்டேயிருக்கும் எனக்கு இது சிறை போன்றிருக்கின்றது. பொழுது போகவில்லை என்று சொன்னதற்காகவே என்னருகில் புத்தகங்களை குவிக்கின்றார்கள். இசை, புத்தகங்கள், குழந்தைகள் என்று நாட்கள் நகர்கின்றன. ஆனால் என் பொறுப்புக்கள் நான் மீளும் நாளுக்காக பல்லிளித்துக்கொண்டிரு
க்கின்றது.  

இன்று காலையில் சுவாரஸ்யமானதொரு விடயம். என்னுடைய கைத்தொலைபேசிக்கு புது இலக்கத்திலிருந்து அல்பா ஆண் குறுஞ்செய்திகளில் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அவரது அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் என்னுடைய பரதநாட்டிய படம், தன்னுடைய கைத்தொலைபேசியின் முன்படத்தில் உள்ள நான்… தன்னுடைய பேர்சில் தன்னுடைய தாயின் படத்திற்கு அருகில் செருகியிருக்கும் என்னுடைய படம்… நான் எங்கும் நிறைந்துள்ளேனாம் என்று குறுஞ்செய்தி வேறு…. ஏனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை. அருகில் இருக்கும் போது அன்பை காட்டாத நாம், அன்பாக நடாத்தாத நாம் எப்படி இவ்வாறான விடயங்களை காட்டி ஒருவரை அவர்கள்பால் திருப்ப நினைக்கின்றார்கள்…….?   

பக்கம்: 1755 

நாட்குறிப்பே,
இன்று காலையிலேயே உன்னில் கிறுக்குகின்றேன். ஒரு நிச்சயார்த்தத்தில் இருந்து தப்பி அப்பாடா என்று மூச்சு விட முன்னர் அடுத்தவர்கள் எம் வீட்டுக்கதவை தட்டிவிட்டார்கள். இன்னுமொரு உறவு, அதன் நீட்சி தாங்குமளவு என்னுள் திடமில்லை. நான்கு வருடங்கள் குடும்பம் நிச்சயம் செய்த ஒருவருடன் மனரீதியாக வாழ்ந்துவிட்டு சடுதியாக என்னால் தூக்கியெறிய முடியாது. இது ஏறத்தாழ விவாகரத்திற்கு ஒப்பானது. இதில் உடலுறவு மட்டும் தான் இல்லை. இந்த உறவில் மகிழ்வாக உணரவில்லை என்றாலும் உறவு என்பது உறவு தானே. எனக்கு சிந்திக்க நேரம் வேண்டும். என் வருங்கால துணைவராக வர இருப்பவரை எடைபோட சிறிது காலம் வேண்டும். என்னளவில் என் வாழ்க்கை காசை விடவும் காதல் நிறைந்ததாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கலாசாரம், தாம்பத்தியம் என்கின்ற விடயங்களையும் தாண்டி பொறுப்புக்களை ஏற்றல், சுயமரியாதையை இருவரும் பரஸ்பரம் பேணுதல், கடமைகளை நேசித்தல் என நிறைய விடயங்களை சுமப்பது… 

எனக்குள் என்னவராக வர இருப்பவர் குறித்த எதிர்பார்ப்புக்கள் உண்டு. இது பற்றி நான் இன்று அம்மாவிடமும், அண்ணாக்களிடமும் பேச போகின்றேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாழ்க்கையை தெரிவுசெய்ய முடியாது தானே. சிலர் எப்படியும் வாழலாம் என நினைக்கின்றார்கள் நான் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைக்கின்றேன்…… 

பக்கம்: 1756 

இனிய டைறி!
இன்றைய நாள் அதிகாலை எழும்பும் போது மனம் பாரமின்றி இருக்கின்றது. முழித்துவிட்டாலும் அருகில் படுத்திருக்கும் பிஞ்சுகள் மூன்றினதும் முகங்களை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். இந்த முகங்களில் எவ்வளவு அமைதி, தெளிவு, ஏதோ கனவு கண்டு இடைக்கிடை உதடுகள் சுழிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றது. குழந்தைகளின் கழுத்தருகில் முகர்ந்து பார்த்திருக்கின்றீர்களா? என்னவொரு மயக்கம் தரும் வாசனையது……. 

நேற்று வீட்டாரிடம் பேசிய பின்னர் கனத்த மௌனம் சில நிமிடங்கள் எம்மை சூழ்ந்திருந்தது. மௌனங்கள் எப்போதும் முக்கியமானதொன்று. தீர்வுகளை, புயல்களை, வன்முறைகளை, ஆழ்ந்த உண்மை இதெல்லாம் வெளிப்படுமுன் இந்த மௌனம் தேவையாகவிருக்கின்றது. அம்மா தான் முதலில் மௌனத்தை உடைத்தார். ஏன் மகள் யாரையாவது விரும்புகின்றாயா என்கின்ற கேள்வியுடன். தெரியவில்லை என்றேன் நான். சொன்ன பின் தான் புரிந்தது இதற்கு ஆம் அல்லது இல்லை தானே பதிலாயிருக்க வேண்டும். அதன் பின் அம்மா எதுவும் பேசவில்லை. 

இரவு தூங்கும் முன்னர் என்னறைக்கு வந்து பேச ஆரம்பித்தார். பொதுவாக எங்கள் முன்னறை தான் அரசமண்டபம். கூடி பேசுவது அங்கு தான். அம்மா தனியாக எம்முடைய அறைக்கு வந்து பேசுகின்றார் என்றால் அம்மா சாணக்கியம் பேச போவதாக அர்த்தம். அம்மா எனக்கு அப்பா  ஸ்தானத்தினை நிரப்பியவள் மட்டுமல்ல என் நல்ல சிநேகிதி… இருவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் பற்றி விவாதம் பண்ணுவதுண்டு…. என் அனைத்து விடயங்களையும் நான் பகிரும் ஓர் இடம் அம்மா தான். அம்மா நிதானமானவள், கவித்துவமானவள், வீட்டில் இருக்கின்ற நீதிபதி. பிழையென்றால் அது தன் பிள்ளைகள் செய்தாலும் பிழைதான் என வாதிடுபவள். ஏம் மனச்சாட்சியை தட்டுபவள். ம்முள் நிதானத்தினை விதைத்திருப்பவள். நாம் படிக்கும் போது நானும் கூட அமர்ந்து படித்து எம்மையும் தன்னையும் செதுக்கிக்கொண்டவள். நாம் இன்று பேசிக்கொண்டிருக்கின்ற பெண்ணியத்தினையும் சுதந்திரத்தினையும் முற்போக்கினையும் தன் வாழ்க்கையாகவே கொண்டிருப்பவள். என்னுடைய நண்பர்களுக்கும் கூட அம்மா நல்ல நண்பியாக இருக்கின்றாள். அம்மாவிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். மனதில் இருந்த ஏதோவொரு பாரம், அழுத்தம் , சுமை ….. குறைந்ததை உணரமுடிந்தது. அவள் சொன்னதின் சாரம் மட்டும் மறுபடி மறுபடி எனக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது





 

 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……07

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

“முத்தம்” என்றவுடன் நம் மனதில் முதலில் தோன்றுவது “வயது வந்தவர்களுக்கு மட்டும்..” காட்சிகளாகத்தானிருக்கும். அன்பை வெளிப்படுத்துகின்ற வார்த்தை, செயல், பரிசுகள் போன்று தான் முத்தமும் ஒருவகை வெளிப்பாடு. 

ஆனால் முத்தத்தில் அர்த்தங்கள் மட்டும் வேறுபடுகின்றது. நெற்றியில், கன்னத்தில், கைகளில், கழுத்தில், உதட்டில், மார்பில், பாதத்தில் …என்று நீளுகின்ற முத்தமிடும் இடங்களைப் பொறுத்து அர்த்தங்களும், உணர்வுகளும் மாறுபடுகின்றன. எல்லோராலும் முத்தங்களை எல்லாவிடங்களிலும் தந்திட முடிவதில்லை. இதற்கான முற்றுமுழுதான உரிமை வாழ்க்கைத்துணைக்கு மட்டுமே உண்டு. நெற்றியில் இடப்படுகின்ற முத்தங்களுக்கான விலையே தனி. ஆனால் எல்லா முத்தங்களும் காமத்தில் சேர்த்தியில்லை. 

 அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1594

இனிய நாட்குறிப்பே….
ஒவ்வொருவருக்கும் தன்னுடையவர்களை ஏதாவதொரு இடத்திற்கு கூட்டிப்போகவேண்டும் எனும் விருப்பம் இருப்பதுண்டு எனக்கும் தான்…. இந்த வடிவமைப்பு விடயங்கள் ஈடுபடத்தொடங்கியதிலிருந்தே… ஆனால் அப்படி கூட்டிப்போகும் இடம் ஆடம்பரமானதாகவோ, செலவீனம் நிறைந்ததாகவோ இருப்பதை விட நினைவுகள் நிறைந்ததாக, நம்முடைய கலாசாரத்தினை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் எனும் கனவு எனக்குள் இருந்திருந்தது. இந்த நாளினை மிகவும் முக்கிய நாளாக சேமித்து வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இதற்காக எத்தனை ஆயத்தங்கள்…. ஆட்பரிப்புக்கள்…. ஆர்ப்பாட்டங்கள்! 

நாற்சார் வீடுகள் #யாழ்ப்பாண நகரத்தின் வண்ணார்பண்ணைப் பகுதியில் ஒரு  காலத்தில் ஏராளமான நாற்சார் வீடுகள் இருந்தன. 1960- 1970களில் சிவன் ...எமக்கொரு வீடு இருக்கின்றது. நான்கு தலைமுறைகள் வாழ்ந்த இடம். புதிதாக மாற்றியமைக்க வீட்டாக்கள் முற்பட்ட போதும் பிடிவாதம் பிடித்து தடுத்தவள் நான் தான். அழகான நாற்சதுர வீடது. அவர் இங்கு வருகிறார் என்றறிந்து அங்கு கூட்டிப்போக வேண்டும் என்று திட்டமிட்டு, சுத்தப்படுத்தி, நவீனங்கள் தொடாத வரையில் பழமையானவற்றினால் அலங்காரம் செய்து என ஏகப்பட்ட மெனக்கெடல்கள். அவர் இங்கு வந்தவுடனேயே அவர் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்தாயிற்று.

இன்று முழுநிலவு நாள். எங்கள் வீட்டின் உட்புறத்திலிருந்தே நிலவைப்பார்க்கலாம். மாலையிலேயே விளக்குகள் ஏற்றி… சாம்பிராணி போட்டு…. கவளச்சோறு தயார் செய்து…அவரும் குடும்பத்தினரும் வரும் போது மாலை 7 மணி. உள் வரும் போதே செருப்புடன் வந்துவிட்டார். எரிச்சலாகிவிட்டது. வந்ததுமே இது தானா “நீங்கள் சொன்ன வீடு. அராதப்பழசாயிருக்குதே… “ என்று ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்குள் இத்தனை மரமா… பாம்பு முட்டை போட்டிருந்து குட்டிகள் வரப்போகுது… என்று கருத்து வேறு. முதலில் இவை கிண்டல் என்று தான் நினைத்திருந்தேன். நேரமாகத்தான் புரிந்தது இவர் இரசனை. சாப்பிடும் போதும் “இது என்ன கைபோட்டு பிசைந்து தருவது…” என்று அதற்கு வேறு ..... 

எல்லாம் முடித்து அனுப்பிவிட்டு அமர்ந்தபடி யோசித்துப்பார்த்தேன். நாம் இருவரும் எதிர் துருவங்கள் எல்லாவற்றிலும் ஆடம்பரத்தினையும், பணத்தினாலும் எடை போடுகின்ற ஒருவரும் எளிமையையும் சின்னச்சின்ன விசயங்களையும் இரசிக்கும் ஒருவரும் இணைந்து பயணிப்பென்பது சாத்தியமாகுமா…? அப்படியே இணைந்தாலும் நீடிக்குமா? தலைமுறையாக வாழ்ந்த இடத்தில் குடும்பமாக சேர்ந்து இருக்கும் பொழுதுகளை விட வேறெந்த இடத்தில் நிம்மதியும் காதலும் இருக்கப்போகின்றது? 

உன்னை நான் இங்கு கூப்பிட்டதும், இவ்வளவு ஆயத்தங்களும் இந்த நிமிடங்களை சேமித்து வைக்கத்தான் என்றும் கவளச்சோறு என்பது கைபோட்டு பிசைந்த உணவு மட்டுமல்ல. அதில் உப்பு, புளி, காரத்துடன் நிறைந்த அன்பும், கவளத்தினை உருட்டி நம்மவர்கள் கையில் வைக்கும் போது அதில் அக்கறையும் இருப்பதை எப்படி அன்பே நான் உனக்கு புரியவைப்பது....? இப்போதெல்லாம் உன்னோடு இசைந்து வாழ்வது எப்படியென்று யோசிப்பதே என் பொழுதுகளை பெரும்பாலும் ஆக்கிரமித்துவிடுகின்றது. இந்த ஆற்றாமை என்னுள் பல நேரங்களில் கோபமாகவும் உருக்கொள்கின்றது. திருமணம் எனும் பந்தத்துள் இணைந்து நாம் முட்டிக்கொள்வதை விட இப்பவே நல்ல நண்பர்களாக பிரிந்தால் என்ன என்று அடிக்கடி யோசிக்கின்றேன் நான். 

வீட்டின் நடுவிலுள்ள திறந்தவெளி தாழ்வாரத்தினால் வெயில் வரும் மழை வரும் என்கிறாய், வந்தால் தான் என்ன? எல்லாம் அழகில் தானே சேர்த்தி!
 

பக்கம்: 1614

 வணக்கம் நாட்குறிப்பே,
ஒரு மனிதனுக்கு வருகின்ற உச்சபட்ச கோபம் எப்படியிருக்கும் தெரியுமா? இத்தனை வருடங்களில் எனக்குள் கோபம் உச்சஸ்தாயியில் இருந்த நாள் இன்று. அதிகாலையிலேயே என் இன்றைய நாளின் உணர்வுகள் மாறிவிட்டன. காலையில் வழமை போன்று காலையில் மின்னஞ்சலை தட்டினால் அவரிடமிருந்து மின்னஞ்சல்கள். வீடொன்றின் ஏகப்பட்ட புகைப்படங்கள் கூடவே “நமக்காக வாங்க தீர்மானித்த வீட்டின் படங்கள்” என்று குறிப்பு வேறு. “நமக்காக” என்பது என்னையும் சேர்த்தல்லவா? வாழ்தல் என்பது தனிப்பட்டொருவருக்கானதல்லவே. “வீடு” என்பது வாழ்தலுக்காக சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. ஏதோவொரு நாட்டின் நகரத்தில் ஆடம்பரமாக உள்ளது என வாங்க தீர்மானித்தால் போதுமா? 

முதன் முதல் கோபமாக நான் கத்திய நாள் இன்று. இது தான் என் எல்லை. கத்திய பின் மீண்டும் அழைப்பெடுத்து நம் நிச்சயார்த்தத்தினை நிறுத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறிவிட்டேன். மீண்டும் மாலையில் மின்னஞ்சல் வந்திருந்தது. “அப்படியென்றால் வைத்தியசாலை கட்டுவது என்னாகும்” என்றிருந்தது. ஆக இவ்வளவிற்கும் பின்னும் பணம், பதவி தான் என்பதும் இவையெல்லாம் எனக்காக என் சகோதரன்கள் கொடுக்கும் விலை என்கின்ற உண்மையும் என் தலையில் குட்டிச்சொல்கின்றது. 

இவ்வளவிற்கு பின்னாவது “மன்னித்துவிடு” என்றோ… “இனிமேல் சேர்ந்து தீர்மானிப்போம்” என்றோ கூறியிருக்கலாம். என் கோபமும் தணிந்திருக்கும். ஆனால் மனங்களை புரிந்துகொள்ள முடிந்திருந்தால் ஏன் இவ்வளவு தூரம் நமக்குள் வந்திருக்கும்? ஒரு ஆண் என்னை என் எழுத்திற்காக நேசிக்கலாம், என் நேர்மைக்காக நேசிக்கலாம், படிப்புக்காக நேசிக்கலாம் அல்லது என் ஆளுமைக்காக நேசிக்கலாம். என்னுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு கூட நான் என்னை பற்றி வெளிக்காட்டியதில்லை ஏனென்றால் நான் யாரென்று அறியாமலேயே இயல்பான அன்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் வெறும் பணத்திற்காக, என் பதவிகளுக்காக என்னை நேசிக்கின்றார் என்பது எவ்வளவு கேவலமான விடயம் தெரியுமா?

காலையிலிருந்தே அம்மா பல முறை கேட்டுவிட்டார் ஏன் முகம் சரியில்லை என்று. எனக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை. வாழ்வின் மிகப்பெரியதொரு முடிவை நான் எடுத்திருக்கின்றேன் என்று எப்படிச்சொல்வது? அண்ணாவின் இழப்பிற்குப் பின் அம்மாவிற்கு எதுவும் சொல்லி மேலும் காயப்படுத்தக்கூடாது என நினைக்கின்றேன். ஆனால் என்னால் முமூடி அணிய முடியவில்லை. இதனாலேயே என் அறைக்குள் ஒளிந்துகொள்கின்றேன் நான். நான் வாழ்நாளெல்லாம் ஒளிந்திட முடியாது உண்மைகளை எதிர்கொண்டாகத்தானே வேண்டும். ஆனால் அவர் கேட்ட பின் தான் யோசித்துப்பார்க்கின்றேன்…. கட்டாயம் வைத்திய நிபுணர் ஒருவர் தான் வைத்தியசாலை கட்ட என் சகோதரன்களுடன் கைகோர்க்க வேண்டுமா? அவர்களுக்கு “வைத்திய நிபுணர்” என்பதை விட சகோதரியின் வருங்கால “துணைவர்" என்பது தான் முக்கியமாயிருந்திருக்கும். துணைவர் யாராயிருந்தால் என்ன? என்ன பதவியிலிருந்தால் என்ன? என் வருங்கால துணைவர் வைத்தியசாலை கட்ட முதலீடு செய்வார். இதில் மாற்றமில்லை. ஆனால் நிச்சயம் வைத்தியராகத்தானிருக்க வேண்டுமென்பதில்லை.  
 

பக்கம்: 1615

 வணக்கம் டைரி, 
இன்று காலையிலிருந்து மனம் கொஞ்சம் தெளிவாயிருக்கின்றது. அதேவேளை பதற்றமாகவும் இருக்கின்றது. நேற்று என்ன யோசித்தேனோ அதனை அவருக்கு அனுப்பிவிட்டேன். இனி எனக்கு அவருடன் பேச எதும் எஞ்சியிருப்பதாக தெரியவில்லை. சேர்ந்திருந்த காலத்தில் ஏதாவது பரிமாறல்கள் இருந்தால் தானே அதனை இன்று இழந்ததாக யோசிப்பதற்கு? முதல் வேலையாக மின்னஞ்சல் அனுப்பிய பின் "இனிமேல் வீட்டாக்களுடன் பேசவும்” என குறுஞ்செய்தியனுப்பிவிட்டு அவர் இலக்கத்தை Block செய்துவிட்டேன். ஆனால் எங்கேயாவது போய் வந்தால் நன்றாகவிருக்கும் என தோன்றுகின்றது. பாசிக்குடாவில் இரு நாட்கள் பயிற்சி இடம்பெறவுள்ளதாக மின்னஞ்சல் கிடைத்துள்ளது. சம்மதித்துவிட்டேன். இந்த இரு நாட்கள் தனியாக இருந்து யோசிக்கலாம்….. இந்த இடைவெளி எனக்கு தேவையாகவிருக்கின்றது. 

பக்கம்: 1618

இனிய நாட்குறிப்பே,
அம்மா திட்ட திட்ட கொழும்பிலிருந்து வந்த கையோடு இன்று இந்த பயிற்சிக்கு வந்துவிட்டேன். மனம், உடல் இரண்டுமே சோர்வாயிருக்கின்றது. ஆனால் இன்று மாலையில் இரண்டு மணி நேரங்கள் பயிற்சி இருக்கின்றது என்றார்கள். தந்த கோப்பி உண்மையில் அபாரம். என்னை சோர்விலிருந்து மீட்க வந்த தேவதை! 

பயிற்சியறைக்குள் வந்த பின்னர் தான் வளவாளரை பார்த்தேன்… முன்னரே தெரிந்திருந்தால் ஓட்டமெடுத்திருப்பேன். இப்பவும் ஓடத்தான் முயற்சித்தேன். ஆனால் இருட்டிவிட்டது. இங்கிருந்து போக முடியாது அது ஒழுங்கமைப்பாளர்களுக்கு தலைவலியுமாகிவிடும். இப்படியொரு சந்திப்பை இத்தனை வருடங்களின் பின் நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் நான் உடைந்திருக்கும் இந்த தருணத்தில்…. கடவுள் எப்பவுமே இரு வலிகளை ஒன்றாகத்தான் தந்துவிடுகின்றான். எப்பவோ முடிந்தது முடிந்ததாகவே இருக்க கூடாதா…..

பக்கம்: 1619

 வணக்கம் நாட்குறிப்பே, 
இன்றைய நாளில் என்ன உணர்வில் நான் இருக்கின்றேன் என்பது எனக்கே புரியவில்லை. வளவாளராக நிற்பவர் சொல்லும் எதுவே எனக்கு ஏறவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் அறம் தடுக்கின்றது. குனிந்த படி கவனிப்பதாக பாவனை செய்துகொண்டு என் குறிப்பேட்டின் தாளிலெல்லாம் கிறுக்கித் தள்ளுகின்றேன் நான். 

ஆனால் விரிவுரையின் போது அவர் அடிக்கடி இருமுவது எனக்கு புரிகின்றது. இருந்த அழுத்தத்தில் வழமையாக கொண்டு வரும் எதுவும் இன்று என் பையில் இல்லை. மதிய உணவுவேளையில் என் வைத்திய நண்பனை வற்புறுத்தி மருந்துகளை வரவழைத்துவிட்டேன். "உனக்கு வருத்தத்தினை காணவில்லை. எதற்காக இவ்வளவு தூரம் வரவழைத்தாய்" என்று தந்துவிட்டு போகும் போது திட்டிவிட்டுத்தான் போனான்யாருக்குமே தெரியாது. மதிய உணவின் பின்னரான விரிவுரையின் போது அவர் இருமும் சத்தம் தலைகுனிந்து கிறுக்கிக்கொண்டிருக்கும் எனக்கு கேட்டது. நிமிர்ந்து விற்றமின் அல்லது விக்ஸ் தரவா என்று கேட்டேன். இரண்டும் தந்தால் நல்லது என்றார். அருகில் வந்து கையை நீட்டியபோது இரண்டையும் கொடுத்தேன்.

இரவுணவின் போது இருவரும் எதிர்எதிரே தான் அமர்ந்திருந்தோம். நான் தான் அதிகம் பார்த்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் அவர் திரும்பும் போது என்னை கவனித்ததாகபடுகின்றது. ஆனால் இது என் கள்ள மனதினாலுமாயிருக்கும். 

உணவின் பின்னர் எல்லோரும் நீச்சல் தடாகம் அருகில் அமர்ந்து பாட்டுக்குப்பாட்டு பாடிக்கொண்டிருந்தோம். திடீரென என்னருகில் தான் வந்தமர்ந்தார். இது எதேச்சையானது தான். ஒவ்வொருவரும் தமக்குப்பிடித்த பாடலை கூற ஒருவர் பாடிக்காட்டிக்கொண்டிருந்தார். இவர் “சுடுகாட்டு” பாடல் பாடும் படி கேட்டார். இதென்ன இரசனை? எல்லாம் நல்லாத்தானே போகின்றது.. ஏன் இந்தப்பாடலை விரும்பி கேட்குமளவு சோகம்….? "இதை ஆராயாதே…. உன் வேலையைப்பார் என்றும் இது முடிந்து போனவிடயம் விட்டுவிடு"  என்றும் மூளை சொல்கின்றது. மனதிற்கு தான் அது புரியவில்லை.  
 

பக்கம்: 1620

 நாட்குறிப்பே,
இன்று மதியத்துடன் பயிற்சி முடிந்துவிட்டது. இன்று நாம் இருவருமே கறுப்பில் தான் உடையணிந்திருக்கின்றோம். நிகழ்வின் இறுதியில் வளவாளரின் இலக்கம் வாங்க எல்லோரும் முண்டியடிக்கின்றார்கள். நான் மட்டும் வாங்கவில்லை. அருகிலிருந்த தோழி நீங்கள் வாங்கவில்லையா என்று கேட்டார். என்னத்திற்கு தேவையில்லை என்றுவிட்டேன். ஆனால் பொய் என்னிடம் ஏற்கனவே உள்ளது. இந்த இலக்கத்தினை எடுத்த அன்று பேசியிருந்தால் இருவர் வாழ்க்கையும் மாறியிருக்க கூடும். விதி யாரைத்தான் விட்
து

வெளியேறும் போதும் சில தடவைகள் திரும்பிப்பார்த்தேன். அவரின் முகத்தில் பல வருடங்கள் முன் நான் பார்த்த பழைய களையில்லை. ஏதோவொரு பிரச்சினை இருக்கின்றது. ஒருவேளை இது களைப்பால் கூட வந்திருக்கலாம். அந்த இடத்தினை விட்டு வெளியேறும் போது மனம் வலிக்காமலில்லை. நான்கு நாளைக்கு முன்னர் நான் பெரிய முடிவொன்றினை எடுத்த போது கூட ஏற்படாத வலியிது. 

வீடு வந்தாகிட்டு. யாருடைய பேச்சிலும் பார்வையிலும் மாற்றமில்லை. அப்படியென்றால் இன்னும் இந்த விடயம் வீட்டவர்களுக்கு தெரியவில்லை. பொறுத்துப்பார்க்க நினைத்துவிட்டேன்.  

எனக்கு பயமான விடயங்களில் ஒன்று கதவை மூடி இருட்டில் தூங்குவது. சிறுவயதில் ஒரு சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இது. வழமையாக புத்தகம் வாசித்தபடி தூங்கிவிட்டால் அண்ணாக்கள் என் அறையை கடக்கும் போது கண்டால் சத்தமின்றி போர்வையை மூடி விளக்கணைத்துவிட்டு போவதுண்டு. ஆனால் குட்டியண்ணா அப்படியல்ல….. பொதுவில் ரிமோட் சண்டை தொடக்கம் பாரிய யுத்தங்கள் வரை எமக்குள் நடப்பதுண்டு. கடும் கொதியன், சண்டியன். ஆனால் இப்படி என் அறையைத் தாண்டும் போது நான் தூங்கியிருந்தால் நெற்றியில் அல்லது என் புறங்கையில் முத்தமிட்ட பின் தான் போவார். இந்த முத்தங்களுக்காகவே தூங்குவதாக நடித்து முத்தம் தந்து போன பின் விளக்கை மீண்டும் போட்ட நாட்களுண்டு. 

இன்றும் அவசரமாக உன்னில் கிறுக்கிவிட்டு தூங்குவதாக நடிக்கப்போகின்றேன். இன்று நான் இருக்கும் மனநிலையில் இந்த முத்தங்கள் எனக்குத்தேவைப்படுகின்றன. முத்தங்கள் எல்லாமே காமத்தில் சேர்த்தியில்லை தானே…. பல நேரங்களில் அதுவொரு பாதுகாப்பு உணர்விற்கான அச்சாரங்கள்!    
 
 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……06

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Hug Day 2023: Wishes, Quotes, And Messages For Your Special One 

குடும்ப உறவுகளாயிருக்கலாம் வாழ்க்கைத்துணையாக இருக்கலாம் ஏன் கூட பயணிப்பவர்களாயிருக்கலாம் உணர்ச்சி நெருக்கமும். “உனக்கு நானிருக்கின்றேன்” என மனதார கொடுக்கின்ற உறுதியும் மிக முக்கியமானது… அவசியமானம் கூட… 

இந்த நெருக்கத்தினையும் உறுதியையும் கொடுப்பதில் “ அணைத்தல்” என்பது முக்கியமானது. குழந்தையாயிருக்கும் போது நம்மால் எமது உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றியிருக்கும் போதும் தாய் அணைத்துவிட்டால் அடங்கிபோயிருப்போம். அடுத்து சகோதரர்கள்…. புல ஆண் சகோதன்களுக்கு ஒரேயொரு பெண்ணாயிருந்து பாருங்கள். ஆண்களின் அணைப்பின் விகல்பங்கள் உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் சகோத அணைப்பில் இருக்கும் மெல்லிய கதகதப்பும் ஆறுதலும் போதும் நீங்கள் நள்ளிரவில் கூட நடுத்தெருவில் தனித்து நடப்பதற்கு! அடுத்து துணையின் அணைப்பு. நாம் தடுமாறுகின்ற போது….. ஆழ்ந்த கவலையில் இருக்கும் போது… யாராவது உதவ வரமாட்டார்களா என்று உணர்வு ரீதியாக தடுமாறும் போது நம்மை அணைப்பது தான் துணை! இந்த ஆறுதலை தரமுடியாத எந்த மனிதனும் மனுஷியும் “அன்பு” என்கின்ற பந்தத்தினுள் இணையவே கூடாது. பேசாமல் தூணை கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். 

 அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1405 

இனிய நாட்குறிப்பே….
நீண்ட நாட்களின் பின் உன்னில் கிறுக்குகின்றேன். இந்த ஆறு மாதத்தில் வீட்டில் எத்தனை மாற்றங்கள். அப்பாவின் இழப்பிற்கு பின்னர் அம்மாவுடன் இணைந்து இந்த குடும்பத்தை நடத்தியது பெரியண்ணா,  சின்ன அண்ணா தான். நாம் அத்தனை பேரும் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு அச்சாரம் அவாகள்; தான். சின்ன அண்ணா சிறு வயதில் இருந்தே அதிகம் பேச மாட்டார், எம்முடன் பகிடி பண்ண மாட்டார், எந்நேரமும் படிப்பு, வாசிப்பு. வளர்ந்த பின்னர் கூட எம்முடன் அதிகம் அலட்டுவதில்லை. ஆனால் எம் ஒவ்வொருவருக்கும் என்னனென்ன எப்போது செய்ய வேண்டும் என்பது அவருக்குத்தெரியும். நாம் கேட்காமலேயே அதது உரிய நேரத்தில் நடக்கும். மற்ற சகோதரன்கள் என்னுடன் சேட்டை விடுவது, அழவைப்பது என்று இருப்பது போல் இவர் இருப்பதில்லை. இவர் முன்னாள் மற்ற நால்வரும் என்னை சீண்ட கூட மாட்டார்கள். அவ்வளவு பயம், மரியாதை. இவர்கள் என்னை சீண்டினால் பழிவாங்குவதற்கு அண்ணா வரும் வரை காத்திருந்து தான் பொய்யாக அழுது இவர்களை ஏச்சு வாங்க வைத்து கடைசியில் அண்ணாவுடன் ஊர் சுற்றி பொருட்கள் வாங்கி வருவதுண்டு. 

உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது ஒருமுறை என்னை கூட்டிச்சென்று இவர் தான் என் வருங்கால துணை என்று முதலில் எனக்கு அறிமுகம் செய்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. பின்னர் தான் வீட்டிற்கு கூட்டி வந்து ஏனையவர்களுக்கு அறிமுகம் செய்தார். எனக்கு சின்னண்ணியை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அவர் சிங்களவர், பௌத்தமதத்தினை சார்ந்தவர். எங்களனைவருக்கும் இன்னுமொரு அம்மா. அவர்களது திருமணம் இரு சமயத்திலும் நடந்தது, எட்டு வருடங்கள் காத்திருந்து குழந்தைகள் கிடைத்தது எல்லாம் இன்னும் வற்றாத நினைவுகள். எட்டு வருடங்கள் காத்திருந்ததற்கும் சேர்ந்து ஒரே தடவையில் மூவர். அண்ணி அடிக்கடி எங்கள் குழந்தைகளில் ஒருவரை உன் குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பகிடியாக கதைப்பதுண்டு. குழந்தைகளை வீடியோ அழைப்பில்; முதன் முதல் காட்டும் போதும் அது தான் சொல்லி சிரித்தார். நானும் பகிடிக்கு அப்போ எங்களுக்கும் மூவர் ஒன்றாக பிறக்க வேண்டும் என்று பதில் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு மாதத்திலேயே அவர்கள் குழந்தைகளை எம்மிடமே கொடுத்துவிடுவார்கள் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. 

விபத்து என்பது எவ்வளவு கொடியது. அதிலும் பல மைல் தூரத்தில் எம்மவர்கள் உயிரிழந்திருக்கும் போது அதன் தாக்கம் தான் எத்தகையது…. அண்ணா- அண்ணி எம் முன்னால் சண்டையிட்டு பார்த்தில்லை நாம். இருவரும் எவ்வளவு தான் பணியிருந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்னியோன்யம். மரணத்திலும் சேர்ந்து தான் போய்விட்டார்கள், பிரசவம் பார்க்க போயிருந்த அம்மா விபத்தை அறிந்து நெஞ்சுவலியில் வைத்தியசாலையில்… இந்த நாட்கள் கனவாக மட்டும் இருக்க கூடாதா என்று நினைக்கின்றேன். என்னை யாரும் கிள்ளியெழுப்பி கனவிது என்று சொன்னால் நன்றாகவிருக்கும். 

அம்மா மிகவும் உடைந்திருக்கின்றார். அது இலகுவில் ஆறாத வலி என்று எனக்கும் புரிகிறது. ஆனால் குழந்தைகளுக்காவேனும் அம்மா வேணும். அண்ணி மருமக்கள் தருவேன் என்று சொல்லி இன்று என் கையில் இரு மகன்களையும் மகளையும் தந்துவிட்டார். குழந்தைகள் எப்போதும் இனிமையாக சுமை தானே…. இந்தப்பக்கத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கும் போது குழந்தைகள் என்னருகில் தான் இருக்கின்றார்கள். இந்த முகங்களை பார்க்கும் போது ஓவென்று அழனும் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இழந்தவைகளுக்காக அழுது என் அம்மாவையும் இழக்க நான் விரும்பவில்லை. 


பக்கம்: 1435

வணக்கம் நாட்குறிப்பே,

இந்நாட்டின் அனைத்து சட்டரீதியாக விடயங்களையும் முடித்து இன்று குழந்தைகளை சட்டரீதியாக தந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள். இன்னும் இரு வாரத்தில் எம் நாடு திரும்ப வேண்டும். போகும் முன்னர் இவருடன் பேச வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தேன். இன்றைய சந்திப்பு நிச்சயம் பல தீர்மானங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்து தான் சென்றிருந்தேன். 

வழமை போன்று சந்திக்க வந்ததிலிருந்து பந்தா பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கிருந்த மனநிலையில் எழுந்திருந்து கிறீச்சிட்டு கத்த வேண்டும் போலிருந்தது. அம்மாவின் வளர்ப்பு வழமை போன்று தடுத்துவிட்டது. சற்றுப்பொறுத்து சரி மரணவீட்டிற்கு வந்த பிறகு எங்கே ஆளைக்காணவில்லை என்று கேட்டேன். அது தான் அம்மா பற்றி அவருக்கு வைத்தியம் செய்யும் என் நண்பனிடம் விசாரித்தேன் என்றார். இதை விட அம்மாவிடம் நேரில் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும். பேசிப்பயனில்லை. இந்த இடத்தில் இவர் வீட்டின் எதிர்கால மருமகன் என்கின்ற ரீதியில் அனைத்தையும் முன்னின்று நடாத்தியிருக்க வேண்டாமா? இந்த நேரத்தில் அணைத்துக்கொள்ள முடியாத உறவு என்னத்திற்கு? 
“அண்ணாவின் குழந்தைகள் எம்முடன் வளரட்டும். நான் முடிவை வீட்டில் சொல்லிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். இவருடனான நிச்சயார்த்தத்தின் இந்த மூன்று வருடங்களில் நான் இதுவரை அதை செய்யவா? இதை செய்யவா? ஏன்று தான் கேட்டு முடிவெடுத்திருக்கின்றேன். இன்று முதன் முதல் நானாக முடிவெடுத்த விடயத்தினை சொல்லிவிட்டேன். இவரின் அனுமதி இந்த விடயத்தில் எனக்கு தேவையில்லை. 

“…… என்னால் முடிவிலிருந்து மாற முடியாது. ஆனால் இக்குழந்தைகளால் நமக்குள் இடைவெளி விழாமல் வளர்ப்பதற்கு என்னால் உறுதியளிக்க முடியும். அவர்களுக்கு இப்போது தேவை பொறுப்பாக வளர்க்க கூடிய சூழல். ஏற்கனவே அம்மா என்னுடன் தான் இருப்பார் என்று சொல்லியிருக்கின்றேன். ஆனால் இனி இவர்கள் மூவரும் கூட இருப்பார்கள். உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் நண்பர்களாக பிரிந்துவிடலாம். ஏன்னுடைய பொறுப்புக்களை ஏற்கும் ஒருவரை நான் வீட்டில் பேச சொல்கின்றேன்.” நானும் சொல்லிவிட்டேன். சொன்ன பின்பு தான் என் பதற்றம் குறைந்தது. 

“நான் யோசிக்க வேண்டும் டார்லிங். இது வாழ்க்கை பிரச்சினை” அவரிடமிருந்து வந்த பதில். இதில் நியாயம் இருப்பதாக எனக்கும் தோன்றியது. குழந்தைகளை பொறுப்பெடுப்பதென்பது இலகுவானதல்ல. இது மனரீதியான விடயமும் கூட. என் இரத்தம் என்னால் இலகுவாக ஏற்க முடியும். அவரால் உடனடியாக முடியாது என்பது தானே யதார்த்தம். இரு நாளில் பதில் சொல்வதாக சொன்னார். 28 வயதில் இத்தனை பொறுப்புக்கள் என்னை அழுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகின்றது. சரி இரு நாட்கள் தானே பொறுத்திருந்து பார்ப்போம். 


பக்கம்: 1440 

இனிய டயரியே!
இரண்டு நாட்கள் பொறுக்கச்சொன்னது ஐந்து நாளாகிவிட்டதே என யோசனையாகவிருந்தது. சரி அழைப்பெத்து பார்க்கலாம் என்று இரு முறை முயன்று பார்த்தேன் பதிலில்லை. இரண்டு மணித்தியாலங்களின் பின் “எனக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. சேர்ந்து வளர்ப்போம்” என்று மெசேஜ் வந்தது. கடவுளே! சுpல குறைகளை வைத்திருந்தாலும் என் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்காவிட்டாலும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதே எவ்வளவு மகிழ்வாக இருக்கின்றது. நான் கொடுத்து வைத்தவள் என்று தோன்றுகின்றது. குழந்தைகளை ஏந்தியவாறு அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும். அதை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும் போது நிச்சயம் கேட்பார்கள். சிறகில்லாமல் பறப்பது போலுள்ளது. இதைவிட என்ன வேண்டும்? உலகில் நீங்கள் தந்த விலை மதிக்க முடியாத பரிசே இது தான். இதன் பெறுமதியை விட தான் ஏனையவற்றின் பெறுமதி இருக்கும். 
மிதக்கின்றேன் நான்!


பக்கம்: 1472

 வணக்கம்.

நம் நாட்டிற்கு பறக்க காத்திருக்கும் இந்நேரத்தில் எழுதுகின்றேன் நான். இன்று சற்று நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு விடுவோம். பெரியண்ணா- அண்ணி, பிள்ளைகள், அவர், அவரின் அண்ணா என எல்லோரும் வழியனுப்ப வந்திருந்தார்கள். கடந்த முறை நான் இங்கிருந்து புறப்படும் போது சின்ன அண்ணா- அண்ணியும் வந்திருந்தார்கள். அப்போது அண்ணிக்கு நான்காம் மாதம். அன்று அண்ணியினுள் இருந்தவர்கள் இன்று எட்டு மாத குழந்தைகளாக என் கைகளுள் புதைந்து தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

காலம் தான் எத்தனை மாற்றங்களை நொடியில் ஏற்படுத்தி விடுகின்றது. அப்பாவின் இழப்பு, அம்மப்பா திடீரென சுட்டுக்கொல்லப்பட்டது, சின்ன அண்ணா- அண்ணியின் விபத்து என காலத்திற்கு காலம் விதி எம்மை அதன் வலிய கரத்தினால் குட்டிக்கொண்டுதானிருக்கின்றது. இதுவும் கடந்து போகும்.
என்னை அதிகம் அணைத்துகொள்பவர் சின்ன அண்ணா தான். அண்ணாவின் உயரத்திற்கும் அகன்ற தோளுக்கும் அதன் கதகதப்பிலும் என்னை புதைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அம்மா கூட சிலநேரம் ஏசுவதுண்டு. இந்த வயதிலும் என்ன இது என்று…. எத்தனை வயதானாலும் அவர் அண்ணா தானே…. இன்று அந்த கதகதப்பை இழந்திருப்பதாக தோன்றுகின்றது……! இரண்டு உயிர்களை இழந்து மூன்று உயிர்களை பெற்றிருக்கின்றோம் நாம்…. 

வழியனுப்ப வந்ததிலிருந்து பார்க்கின்றேன் இவர் தன் மடிக்கணணியைத்தான் பார்த்துக்கொண்டிருககின்றார். அம்மாவிடம் ஆறுதலாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வந்தவுடன் ஹாய் ஆண்டி என்றதோடு சரி... சரி என்னிடம் பேசுவார் குழந்தைகளை கொஞ்ச நேரம் தூக்குவார் என்று எதிர்பார்த்தேன் அதுவும் இல்லை. இந்த நேரத்தில் வேலைகள் முக்கியமாக குடும்பம் முக்கியமா? ஏனையவர்கள் முன்னால் காட்டிக்கொள்ளாமல் மெசேஜ் அனுப்பினேன். நான் வேலையாகவிருக்கின்றேன் என்று உடனடியாக பதில் வந்தது. குடும்பத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும் பொது அணைப்பும் அதிகரிக்க வேண்டும். எனக்குள் புதிதாக தாய்மை எனும் பொறுப்பு அதிகரித்துள்ளதை நான் உணர்கின்றேன். இது ஒரு வகையில் தங்கையாக என் கடமையும் கூட.அம்மா, சகோதரன்கள் முதலில் விரும்பாவிட்டாலும் நான் பிடிவாதமாக எடுத்த முடிவிது. சில முடிவும் அப்படித்தான் நான் எடுத்தால் எளிதில் மாற்றிக்கொள்வதில்லை. 

முதல் நாம் இருவர் தற்போது ஐவர். இந்த உடன்படிக்கை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே.   மனம் கனக்க தொடங்குகின்றது. இது இது அவர் எடுத்த  வெறும் முடிவா அல்லது உணர்ந்து, தாற்பரியம் அறிந்து எடுத்த முடிவா? குழப்பமாகவிருக்கின்றது. எனக்கு அணைப்பு தேவைப்படுகின்றது




 

 

 

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை