அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……08
Feb 07th - Rose Day: Expression on Admiration
Feb 08th - Propose Day: Sharing feelings and Commitment
Feb 09th - Chocolate Day: Symbol of Joy
Feb 10th - Teddy Day: Gesture of warmth and care
Feb 11th - Promise Day: Focus on trust and Intention
Feb 12th - Hug Day: Emotional closeness and Reassurance
Feb 13th - Kiss Day: Expression of affection
Feb 14th - Valentine’s Day: Celebration of love and companionship
உலகத்தில் எவ்வளவோ நினைவுகூறல் நாட்களுண்டு. ஆனால் காதலர் தினம் போன்று பரந்தளவில் கொண்டாடப்படுகின்ற தினம் ஏதாவது இதுவரை உண்டா? இது ஒருவகையில் வர்த்தரீதியான நிகழ்ச்சி நிரலும் கூட. ஆனால் சில விடயங்களின் பின்னால் எந்த நிகழ்ச்சிசிரல் இருந்தாலும் அதில் உணர்வுரீதியானதொரு விடயம் இருக்குமென்றால் அது நல்லதே. ஆனால் பாருங்கள் “LOVE” என்பதை யார் நேரடி மொழிபெயர்ப்பாக “காதலர் தினம்” என்று மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை நம்மில் பலரும் இதனை நாம் ஆண்- பெண் காதலுக்கான நாளாக மட்டும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இதனை "அன்பு நாள்” என்று தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் அன்பு என்புத காதலுடன், பாசம், நட்பு, ஜீவகாருண்யம், கருணை என நேசித்தலின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதொன்றாகவுள்ளது.
அன்பு மனதிலிருந்தால் பொதும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்துக்கதை. அன்பை நமக்கு வெளிப்படுத்த தெரிய வேண்டும். இன்னொரு விதமாக பார்த்தால் அன்பு மனதில் இருந்தால் ஆத ஏதாவதொரு வடிவில் வெளிப்பட்டே ஆகும். ஆன்பையும் கர்ப்பத்தினையும் மறைத்திட முடியாது. சரி எப்படி அதை வெளிக்காட்டுவது…..? வார்த்ததைகளில் காட்டலாம், சிறு சிறு செயல்களில் காட்டலாம், அணைப்பு, முத்தம், பரிசு என வெளிக்காட்டலாம், பின் நின்று ஒருவரை வழிநடாத்துவதில் காட்டலாம், தூரத்தில் நின்று அவர்கள் கூட அறியாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். குறித்த நபரிடம் வெளிப்படையாகவிருக்கலாம், விடயங்களை பகிர்வதன் மூலம், ஏன் கண்ணீர் டூலம் கூட அன்பு சட்டென்று வெளிப்பட்டு விடுகின்றுத. இன்னுமொரு வழியிலும் அன்பை காட்டலாம். அது “விலகல்”. நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை, நம் அருகாமை அவருக்கு பிடிக்கவில்லை, அல்லது அவருக்கு நம்மை விட இன்னுமொருவரை பிடித்திருக்கென்றால்; அவரை காயப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அல்லோலகல்லோலப்படுத்தாமல் விலகுவது. இது ஒருவகையில் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடும் கூட.
அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….
பக்கம்: 1690
இனிய நாட்குறிப்பே….
சிலநேரங்களில் இந்த விதியென்பது என்னிடம் என்ன சொல்ல வருகின்றதென்பது எனக்கு புரிவதேயில்லை. இன்று “ அன்பின் தினம்” வழமை போன்று சில நண்பர்களின் வேண்டுகோள், அன்புத்தொல்லைகள், அரியண்டங்கள் என தான் என் நாட்கள் கடந்துசென்று கொண்டிருந்தது. திடீரென்று மதியமளவில் வாகனமொன்று சடார் என்று வந்து நிற்க எட்டிப்பார்த்தால் நிச்சயம் செய்யப்பட்டவரும் அவர் குடும்பமும் வந்திருந்தார்கள். இவர் எப்போது நாட்டிற்கு வந்தார்….?
என்ன தான் கடுப்பிருந்தாலும் வீடு வரை வந்தவர்களை வரவேற்றாகத்தானே வேண்டும். பண்பாடு அதுதானே… அமர வைத்தாயிட்டு…. மேசை முழுவதும் பூக்கள், பரிசுகள் என ஏராளமாக நிரம்பிக்கிடக்கின்றன. தான் இன்றைய நாள் என்னை பார்க்க வேண்டுமென்றே தன் வேலைகளை ஒத்திப்போட்டு, நாடு கடந்து வந்ததாக என் அம்மாவிடம் அவர் அம்மாவும் அவரும் பல தடவை கூறுவதைக்கேட்டேன்.
அதெப்படி நான் அமைதியாக சகித்துக்கொண்டு மனதால் வாழ்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் வராத காதல் நான் வேண்டாம் என்று தூக்கியெறிந்த பின்னர் வந்திருக்கின்றுத? அருகில் நிற்கும் போது ஒதுக்கிட முடியாத சில நிமிடங்கள் எப்படி இப்போது நாள் கணக்கில் நீண்டிருக்கின்றுத.? ஒரே நாட்டில் அருகருகான நகரத்தில் நாம் படிக்கும் போது ஓரு மணிநேரம் ஒதுக்கி வந்து என்னை பார்க்க வேண்டும் என்று துடிக்காத இதயம் இப்போது பல மைல் கடந்து வந்து என்னை பார்க்க வைக்க எது நெட்டித்தள்ளியிருக்கும்…..? தனியே பேச வேண்டும் என்றார். அட இது கூட முதல் தடவை தான்.
தனியே வந்ததும் முதல் கேட்ட கேள்வி “ யாருடன் நின்று இன்ஸ்டாவில் படம் போட்டுள்ளாய்…?” என்பதாக இருந்துத. என் நண்பேன் என்றேன் நான்.
நண்பனின் தோளில் சாய்ந்து தான் போட வேண்டுமா….? அதுவும் பொதுவில் ஏன் போட்டோ போட வேண்டும்?
"நீங்கள் தானே சொன்னீர்கள் நான் பட்டிக்காடு மாதிரியிருக்கின்றேன் என்று….. அதனால் தான் என் நாகரீகத்தினை காட்ட போட்டேன். உங்கள் நண்பன் உங்கள் வருங்கால மனைவிக்கு முத்தம் தருவது நாகரீகத்தில் சேர்த்தியென்றால் இதுவும் அதனுள் அடங்கும்…. " இது நான்..
“தயவுசெய்து இப்படியான விசர்தனங்கள் இனிமேல் வேண்டாம்…”
“விசர்தனமா… நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நடுவில் கத்தி.., அதனை வைத்து ஒருவன் எனக்கு அழைப்பு விடுத்த போது என்ன சொன்னீர்கள்…. இதெல்லாம் இப்போது சகஜம் என்று … அது போல் தான் இதுவும்… அவர் என் நண்பர், இருவரும் பாடல் ஒன்றின் காட்சியில் நடிக்கும் போது எடுத்ததை போட்டேன்…”
“ஓ நான் பயந்திட்டேன்….."
ஆக இவ்வளளவும் இந்த பயத்தில் தானா…. சிரித்துவிட்டேன் நான். ஆனாலும் இறுதியாக சொல்லிவிட்டேன் என் முடிவில் மாற்றமில்லை என்று. கோபமாக கத்தினார். “என்ன விலை கொடுத்தாவது உன்னை வாங்குவேன்…” என்று இறுதியாக உறுமினார். இப்போதும் விலை தானா….? “என்னால் நீயில்லாமல் இருக்க முடியாது என்றோ…. உன்னை மிஸ் பண்றன் என்றோ சொல்லியிருக்கலாம்… வானிலை மாறியிருக்கும்.
இறுதியாக போகும் போது “ என்னைப்போன்ற அல்பா ஆண் கிடைக்க மாட்டான். நாம் இருவரும் சேர்ந்தால் நமக்குள் ஈகோ வராது. இன்னொருவனால் உன் உயரங்களுடன் உன்னை ஏற்க முடியாது” சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவர் குடும்பம் விடைபெற்று இந்நிமிடம் வரையில் ஐந்து மணிநேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை மணிநேரங்களில் நான் இரு விடயங்களை நன்றாக புரிந்திருக்கின்றேன். ஒன்று நம் நிச்சயார்த்தம் நிறுத்தப்பட்டால் அவருக்கும் எனக்குமான பிரிவு சாதாரணமாக இருக்காது. அது இரு சக்திகளுக்கான மோதலாக இருக்கும். இதற்கான விளைவுகளை என் வருங்கால துணைவர் உட்பட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இரண்டாவது இந்த நிச்சயார்த்தம் எனக்கும் ஒரு Toxic ஆன ஆளுக்கும் நடந்திருக்கின்றது. இவர் எண்ணம் நேசிப்பதல்ல என்னை அடைவது… அம்மா இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் இதில் பல முரண்நகையுண்டு. அநேக இளவரசிகள் இளவரசன்களை விட படைத்தளபதிகளையே நேசித்ததுண்டு. காரணம் தளபதிகளாலேயே மண்ணையும் தனக்கான துணையையும் இறுதிவரை, உயிர்மாயும் வரை உயிராக நேசிக்க முடியும். இளவரசிகள் வேண்டுவது பதவியோ அல்பா ஆணோவல்ல அன்பும் பாதுகாப்பும் மட்டுமே….. நானும் வேண்டுவது! நீ எவ்வளவு உயரமான நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் நான் நீந்த ஓடையாகித்தானாக வேண்டும், வான் முட்டும் மலையாகவே இருந்தாலும் நான் ஆட மேடையாகித்தானாக வேண்டும்.
குட்நைட்
பக்கம்: 1710
இனிய டைரியே
இன்றுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி ஐந்து நாளாகின்றுத. என்னிடம் எத்தனையோ பேர் நேசிப்பதாக சொல்லியிருக்கின்றார்கள், ஆனால் நான் ஒருவரிடம் என் அன்பை சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதாவது நிகழ்ந்துவிடுகின்றது. எட்டு மாதங்களுக்கு முன்னர் பல வருடங்களின் பின் பயிற்சியில் கண்டிருந்தேன். பயிற்சியின் போதும் சரி பின்னர் ஒரு மாதம் வரையிலும் சரி அவரது முன்னைய வாழ்க்கை உடைந்திருப்பது எனக்கு சத்தியமாக தெரியாது. அறிந்த பின்னர் நான் சந்தோசப்பட்டேனா? கவலைப்பட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. முடிந்த பயிற்சியின் நோட்ஸ் கேட்பதாக பாசாங்கு செய்து குறுஞ்செய்தி அனுப்பி….. பின்னர் எமது நிறுவன நிகழ்வுகளுக்கு வளவாளராக கூப்பிட்டு, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, நிமிடங்களை சேமித்து…. குட்டுக்கள் வாங்கி…. முதன் முதல் ஓரு ஆணின் கண்களை வரைந்து… “Keeping my distance………” இல் வலி வாங்கி… பல வருடங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் சந்தித்த போது எடுத்த புகைப்படம், தவறிவிழுந்த கைகுட்டையும் பேனையும் , நிகழ்வுகளின் போது கைபட கிறுக்கிய தாள்கள் உட்பட பல சேமிப்புக்கள்……பைத்தியகாரத்தனங்கள்….
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இது எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம். ஏப்படி என் அலுவலகத்திலுள்ள வால்களுக்கு தெரிந்துத… பகிடி பண்ணவும் ஆரம்பித்துவிட்டார்கள்…. கண்கள் காட்டிக்கொடுத்திருக்குமோ….? ஏப்படியென்றாலும் இந்தப்பகிடிகள் அவரை காயப்படுத்தக்கூடாது. ஆனால் ஒன்று என்னால் ஏற்கனவே உடைந்திருக்கும் மனதை காயப்படுத்தவோ… தூக்கியெறியவோ முடியாது. எனக்கு இந்த உறவை நீடிக்கும் போது அல்லுத திருமணம் எனும் பந்தத்திற்குள் கொண்டுவரும் போது எதிர்கொள்ளவுள்ள இழப்புகள், முரண்பாடுகள் குறித்தும் தெரியும். இதனை அங்கும் புரிய வைக்க வேண்டும். உணர்வுகள் விளையாட்டல்ல தானே… நேர்மையும் அறமும் அது தானே இதற்காகத்தான் எமக்கிடையில் இருக்கும் ஓரு அக்காவிடம் சொல்லி உதவிகேட்க போயிருந்தேன். அப்போது தான் இந்த விபத்து என்னை முத்தமிட்டது.
விபத்தின் முத்தமிடலில் காயம்பட்டு சுயநிலை இழக்கும் முன் என்னை தாங்கிப்பிடித்த , அணைத்துத்தூக்கிய கைகளுக்கு சொந்தகாரனின் முகத்தை அந்த இறுதி நிமிடத்திலும் நிமிர்ந்து பார்த்தேன். இவர் ஏன் இப்படியழுகின்றார். எதற்காக இந்த கண்ணீர்? ஏன் அந்த இறுதிநேர இமை மூடல்களின் முன் பார்த்த கடைசிக்காட்சி இதுதான். சுயநினைவு வர இரு நாட்கள் ஆனது என அம்மா தான் பின்னர் சொன்னார். இமை திறந்த போதும் சுற்றி நின்றவர்கள் நடுவில் அந்த கண்களை நான் மீண்டும் பார்த்தேன். அந்த கண்களின் உணர்வுகளை படிக்கும் சக்தி எனக்கில்லை என தோன்றுகின்றது…
எனக்கு ஊசேற்றும் போது தாதியர்களை அனுமதிக்காது தாங்களே குத்தும் போது என் பாதியினதும், என் மீதியினதும் கைளில் நடுக்கத்தினை உணர்ந்திருக்கின்றேன். நெருக்கமானவர்களை அணுகும் போது நிபுணர்களே தடுமாறித்தான் போகின்றார்கள். ஆனால் ஊசிப்பயத்தில் நான் அழும் போது அவன் உதடுகள் நடுங்குவதை, பார்வையை திருப்பிக்கொள்வதை இங்கிருந்தே கண்ணாடி சுவரைத்தாண்டியும் என்னால் பார்க்க முடிகின்றது. இவ்வளவு நாட்களும் நம்மருகில் நம்மை நேசிக்கின்றவர் இருந்தும் அவதானிக்க முடியாதளவு இருந்த முட்டாளா நான்? இது என்ன…. எனக்கு உடல் வலியுடன் மனக்குழப்பமாகவும் இருக்கின்றது.
பக்கம்: 1740
வணக்கம் நாட்குறிப்பே….
என் வாழ்நாளில் நான் பயணிக்காமல் ஒரே இடத்தில் நின்றிருப்பது இந்த நாட்களில் தான். ஏறத்தாழ 90 நாட்களாகின்றன. இப்போதெல்லாம் மருந்துக்களும் புத்தங்களுமே என் நாட்களை பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றன. கூடவே ஆறு சிறு கரங்கள். இந்த விபத்தில் பல நட்டங்கள், வலிகள், கவலைகள் இருந்தாலும் என் அண்ணா குழந்தைகளின் முகத்தில் அப்படியொரு மகிழ்வை நான் அவதானிக்கின்றேன். முன்பெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கும் போது இவர்களுக்கு உணவூட்டுவதற்கு பெரும்பாடு படவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் மூவரும் என்னருகில் வந்து சாய்ந்தவாறு குழப்படி செய்யாமல் சாப்பிடுகின்றார்கள். எனக்கும் தங்கள் குட்டிக்கைகளால் ஊட்டிவிடுகின்றார்கள். அருகிலிருந்தே விளையாடுகின்றார்கள், அம்மா அறுவை சிகிச்சை காயங்கள் தாக்கப்பட்டுவிடும் என்று இவர்களை இழுத்துச்சென்றாலும் ஆழது ஆர்ப்பாட்டம் செய்து என்னருகில் வந்து தூங்குகின்றார்கள். என்னறை முழுவதும் விளையாட்டுப்பொருட்கள் தான் இறைந்து கிடக்கின்றன.
நேற்று தான் என் தொலைபேசியின் அழைப்புக்கள் குறுஞ்செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன். அல்பா ஆணின் தவறவிட்ட அழைப்புக்கள் சில இருந்தன. வீட்டு தொலைபேசியில் ஓரு தடவை பேசியதாக அம்மா சொன்னார். நிபுணர்களுக்கு பேச நேரமிருப்பதில்லை தானே… ஆனால் பணத்தால் வாங்க முடியும். என்னை நேசிப்பதாக, சம்மதிக்காவிட்டால் கையறுக்கவுள்ளதாக, நீயில்லை என்றால் நானில்லை என்று சொன்ன ஒருவரிடமிருந்தும் தகவல்கள் இல்லை. காணாமல் போய்விட்டார்கள் போல… மீண்டும் வெளியில் நான் தலைகாட்ட தொடங்கும் இவர்கள் ஓரு தலைக்காதல்கள். நான் நேசித்தவரிடம் இருந்து ம்கும் ஓரு வசனம் கூட இல்லை…. குறைந்த பட்சம் காணவில்லை என்ற பதைபதைப்பு….. ஒருவர் என்றால் தானே ஞாபகம் இருப்பதற்கு….. அன்பு ஓரு இடத்தில் மட்டும் குவிந்திருந்தால் தானே அங்கு இழப்பு குறித்த வருத்தமுண்டாகும்.? நல்லகாலம் மனதை அந்த அக்காவிடம் கொட்டவில்லை. இப்படியான ஓரு நேர்மையற்ற அன்பிற்கு தானா போராட நினைத்தேன் என்றிருக்கின்றது……
ஆனால் ஒருவர் மட்டும் தினமும் காலை வணக்கத்துடன் இடைவிடாமல் தினம் தவறாமல் அனுப்பியிருக்கின்றார். அன்று என்னை வீதியில் அணைத்துத்தூக்கிய கண்களுக்குறியவன் …..
குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள், கவனிப்புக்களை விட அணைப்பும் அருகாமையும் தேவை என்பதை எப்படி என் கட்டில் நாட்கள் புரியவைக்கின்றதோ அதேயளவு கனதியுடன் நாம் நேசிப்பவர்கள் எல்லாம் நம்மை நேசிப்பவர்கலல்ல என்பதை இந்த விபத்தின் காயங்கள் சொல்கின்றன. சில நேரங்களில் விபத்தும் நல்லதே…..
பக்கம்: 1750
இனிய நாட்குறிப்பே,
வருத்தமுள்ளவர்கள் வைத்தியர்கள் உள்ள வீட்டில் இருக்க கூடாது. என்னை என் குடும்பம் பாடாய்படுத்துகின்றது. ஓடிக்கொண்டேயிருக்கும் எனக்கு இது சிறை போன்றிருக்கின்றது. பொழுது போகவில்லை என்று சொன்னதற்காகவே என்னருகில் புத்தகங்களை குவிக்கின்றார்கள். இசை, புத்தகங்கள், குழந்தைகள் என்று நாட்கள் நகர்கின்றன. ஆனால் என் பொறுப்புக்கள் நான் மீளும் நாளுக்காக பல்லிளித்துக்கொண்டிருக்கின்றது.
இன்று காலையில் சுவாரஸ்யமானதொரு விடயம். என்னுடைய கைத்தொலைபேசிக்கு புது இலக்கத்திலிருந்து அல்பா ஆண் குறுஞ்செய்திகளில் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அவரது அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் என்னுடைய பரதநாட்டிய படம், தன்னுடைய கைத்தொலைபேசியின் முன்படத்தில் உள்ள நான்… தன்னுடைய பேர்சில் தன்னுடைய தாயின் படத்திற்கு அருகில் செருகியிருக்கும் என்னுடைய படம்… நான் எங்கும் நிறைந்துள்ளேனாம் என்று குறுஞ்செய்தி வேறு…. ஏனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை. அருகில் இருக்கும் போது அன்பை காட்டாத நாம், அன்பாக நடாத்தாத நாம் எப்படி இவ்வாறான விடயங்களை காட்டி ஒருவரை அவர்கள்பால் திருப்ப நினைக்கின்றார்கள்…….?
பக்கம்: 1755
நாட்குறிப்பே,
இன்று காலையிலேயே உன்னில் கிறுக்குகின்றேன். ஒரு நிச்சயார்த்தத்தில் இருந்து தப்பி அப்பாடா என்று மூச்சு விட முன்னர் அடுத்தவர்கள் எம் வீட்டுக்கதவை தட்டிவிட்டார்கள். இன்னுமொரு உறவு, அதன் நீட்சி தாங்குமளவு என்னுள் திடமில்லை. நான்கு வருடங்கள் குடும்பம் நிச்சயம் செய்த ஒருவருடன் மனரீதியாக வாழ்ந்துவிட்டு சடுதியாக என்னால் தூக்கியெறிய முடியாது. இது ஏறத்தாழ விவாகரத்திற்கு ஒப்பானது. இதில் உடலுறவு மட்டும் தான் இல்லை. இந்த உறவில் மகிழ்வாக உணரவில்லை என்றாலும் உறவு என்பது உறவு தானே. எனக்கு சிந்திக்க நேரம் வேண்டும். என் வருங்கால துணைவராக வர இருப்பவரை எடைபோட சிறிது காலம் வேண்டும். என்னளவில் என் வாழ்க்கை காசை விடவும் காதல் நிறைந்ததாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கலாசாரம், தாம்பத்தியம் என்கின்ற விடயங்களையும் தாண்டி பொறுப்புக்களை ஏற்றல், சுயமரியாதையை இருவரும் பரஸ்பரம் பேணுதல், கடமைகளை நேசித்தல் என நிறைய விடயங்களை சுமப்பது…
எனக்குள் என்னவராக வர இருப்பவர் குறித்த எதிர்பார்ப்புக்கள் உண்டு. இது பற்றி நான் இன்று அம்மாவிடமும், அண்ணாக்களிடமும் பேச போகின்றேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாழ்க்கையை தெரிவுசெய்ய முடியாது தானே. சிலர் எப்படியும் வாழலாம் என நினைக்கின்றார்கள் நான் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைக்கின்றேன்……
பக்கம்: 1756
இனிய டைறி!
இன்றைய நாள் அதிகாலை எழும்பும் போது மனம் பாரமின்றி இருக்கின்றது. முழித்துவிட்டாலும் அருகில் படுத்திருக்கும் பிஞ்சுகள் மூன்றினதும் முகங்களை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். இந்த முகங்களில் எவ்வளவு அமைதி, தெளிவு, ஏதோ கனவு கண்டு இடைக்கிடை உதடுகள் சுழிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றது. குழந்தைகளின் கழுத்தருகில் முகர்ந்து பார்த்திருக்கின்றீர்களா? என்னவொரு மயக்கம் தரும் வாசனையது…….
நேற்று வீட்டாரிடம் பேசிய பின்னர் கனத்த மௌனம் சில நிமிடங்கள் எம்மை சூழ்ந்திருந்தது. மௌனங்கள் எப்போதும் முக்கியமானதொன்று. தீர்வுகளை, புயல்களை, வன்முறைகளை, ஆழ்ந்த உண்மை இதெல்லாம் வெளிப்படுமுன் இந்த மௌனம் தேவையாகவிருக்கின்றது. அம்மா தான் முதலில் மௌனத்தை உடைத்தார். ஏன் மகள் யாரையாவது விரும்புகின்றாயா என்கின்ற கேள்வியுடன். தெரியவில்லை என்றேன் நான். சொன்ன பின் தான் புரிந்தது இதற்கு ஆம் அல்லது இல்லை தானே பதிலாயிருக்க வேண்டும். அதன் பின் அம்மா எதுவும் பேசவில்லை.
இரவு தூங்கும் முன்னர் என்னறைக்கு வந்து பேச ஆரம்பித்தார். பொதுவாக எங்கள் முன்னறை தான் அரசமண்டபம். கூடி பேசுவது அங்கு தான். அம்மா தனியாக எம்முடைய அறைக்கு வந்து பேசுகின்றார் என்றால் அம்மா சாணக்கியம் பேச போவதாக அர்த்தம். அம்மா எனக்கு அப்பா ஸ்தானத்தினை நிரப்பியவள் மட்டுமல்ல என் நல்ல சிநேகிதி… இருவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் பற்றி விவாதம் பண்ணுவதுண்டு…. என் அனைத்து விடயங்களையும் நான் பகிரும் ஓர் இடம் அம்மா தான். அம்மா நிதானமானவள், கவித்துவமானவள், வீட்டில் இருக்கின்ற நீதிபதி. பிழையென்றால் அது தன் பிள்ளைகள் செய்தாலும் பிழைதான் என வாதிடுபவள். ஏம் மனச்சாட்சியை தட்டுபவள். ஏம்முள் நிதானத்தினை விதைத்திருப்பவள். நாம் படிக்கும் போது நானும் கூட அமர்ந்து படித்து எம்மையும் தன்னையும் செதுக்கிக்கொண்டவள். நூம் இன்று பேசிக்கொண்டிருக்கின்ற பெண்ணியத்தினையும் சுதந்திரத்தினையும் முற்போக்கினையும் தன் வாழ்க்கையாகவே கொண்டிருப்பவள். என்னுடைய நண்பர்களுக்கும் கூட அம்மா நல்ல நண்பியாக இருக்கின்றாள். அம்மாவிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். மனதில் இருந்த ஏதோவொரு பாரம், அழுத்தம் , சுமை ….. குறைந்ததை உணரமுடிந்தது. அவள் சொன்னதின் சாரம் மட்டும் மறுபடி மறுபடி எனக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது
Comments
Post a Comment