அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……
அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்
காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுமக்கின்றேன்
பேசும் போது வார்த்தைகளால்
காயப்படுத்துகின்றாய் - நீ
பேசாத போது
மௌனங்களால் தொலைகின்றேன் நான்
நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும் - என்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……
20.04.2026

No comments:
Post a Comment