மீரா என்றாலும் அந்தப்பெண் அவரை Block செய்திருக்க கூடாது. இருவரும் பேசினாலே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டுவிடும். இருவருக்கும் நடுவில் பலரும் தலையிட்டு குழப்புவதாக படுகின்றது. பல உண்மைக்காதல்கள் பிரிவது இவ்வாறான பிரச்சினைகளால் தான். இது குறித்து சிந்தித்துப்பாருங்கள்.
வணக்கம் நண்பரே உங்களைப் போன்று நால்வர் https://veenaganam.blogspot.com/2026/04/blog-post_23.html இந்தப்பதிவிற்கு இவ்வாறான பதிலூட்டங்கள் அளித்துள்ளனர். நீங்கள் இச்சம்பவத்தினை படர்க்கையில் பேசியிருப்து ஒருவகையில் நல்லாதாகவும் பேசுவதற்கு இலகுவானதாகவுமிருப்பதாக எனக்குப்படுகின்றது. நிற்க
இப்படி சிந்தித்து பாருங்களேன். ஒரு பெண் ஒரு நபரை விரும்புகின்றாள். அவருக்கு சொல்லவில்லை. அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்யவிருக்கின்றார் எனும் போது தானாக விலகிவிடுகின்றாள். அவளது குடும்பத்திற்கான அரசியல் அழுத்தத்தினாலும் மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு போய்விடுகின்றாள். இதற்கிடையில் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றது. சில வருடங்களின் பின்னர் எதேச்சையாக மீண்டும் சந்திக்கின்றார்கள். சந்தத்தித்த பின் தான் அவரது திருமணவாழ்க்கை முறிந்துவிட்டது தெரிய வருகின்றது. அதேவேளை இங்கு அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் பெரிதான ஈர்ப்பு இல்லை. ஐந்து சகோதரன்களுக்கு ஒரே பெண்ணாக பிறந்து வளர்ந்த அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவரது அழுத்தமான போக்கு, மண் மீதான பற்றற்றதன்மை என வேறுபாடுகள் அதிகம். இப்படிப்பட்ட நிச்சயார்த்ததை நிறுத்த அந்தப்பெண் யோசித்துக்கொண்டிருக்கும் போது இவ்விடயம் தெரிய வருகின்றது. இப்போது என்ன முடிவினை அந்தப்பெண் எடுக்க வேண்டும்? பொதுவாழ்வில் இருக்கும் மூவரது தன்மானம், சுயகௌரவம், எதிர்காலம் குறித்த விடயம் இது. நிதானமாகத்தான் கையாள வேண்டும்.
அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் முதல் வாழ்க்கை , முறிவு பற்றி தெரிந்திருந்தும் அவருடன் பழகிய நாட்களில் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. காரணம் காயப்படுத்திவிடக்கூடாது எனும் நோக்கம், பழைய வாழ்க்கை அல்லது முடிந்த விடயம் பற்றி பேசுவதால் இருபக்கமும் ஏற்படுகின்ற மனக்காயம் என தவிர்த்திருந்தாள். அந்த நபரின் அனுகுமுறைகள், பதிவுகளை வைத்தும் அவரும் தன்னை விரும்புவதாக தான் நினைத்து தாயிடம் பேசியிருந்தாள். அந்தப்பெண் தன் தாயிடம் இதனை குறித்து பேசும் போது தான் மேற்குறிப்பிட்ட நபர் தன்னுடைய அவசர புத்தியில் அரைவேட்காடு ஒன்றுடன் இதனை பகிர அது பொதுவெளியில் பேச அதனை அந்தப்பெண்ணின் குடும்பம் பிழையாக பார்க்க ஆரம்பித்துவிடுகின்றது.
“அவர் விருப்பம் கேட்டார், நான் இல்லை என்று விட்டேன்” என்பதில் பல அர்த்தங்கள் உள. ஒன்று அந்த நபர் இவ்வளவு நாட்களும் அந்தப்பெண்ணின் மன உணர்வுகளுடன் தான் விரும்புவது போன்று காட்டி விளையாடியிருக்கின்றார். அல்லது பல பெண்களுடன் பழகிய ஒருவரால் தான் இவ்வாறு ஏதுமறியாத ஒருவர் மேல் பழி போட்டு கரி பூசிவிட்டு பொதுவெளியில் சந்தோசமாகவிருக்க முடியும். அல்லது அவர் பகிர்ந்துகொண்ட பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கதில் தன்னை நல்லவனாக காட்ட நடந்த நாடகம் இது. எதுவாகிலும் அடுத்தவருக்கு செய்த களங்கம் குறித்த சிறிதளவு கூட வெட்கம் இன்றி, கவலையின்றி இந்த கூட்டணி நன்றாகத்தானிருக்கின்றது.
இந்த விடயத்தினை முதலில் 43 க்கும் 30 வயதுக்குமான வயதிடைவெளி தான் காரணம், போகப்போக இந்த இடைவெளி குறையும் புரிதல் வரும் என்று என்று அந்தப்பெண் நினைத்திருந்தாள். அதேவேளை பொது வாழ்வில் இருக்கும் இருவர் தம் தனிப்பட்ட வாழ்க்கைக்காக சமூக அந்தஸ்த்தை இழக்க கூடாது என்று நினைத்து பொதுவாகவுள்ளவொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் அணுகியிருந்தாள். கதைத்த போது தான் அந்தப்பெண்ணுக்கும் அந்த நபருக்கும் கூட இருந்த உறவு அவளுக்கு தெரிய வந்திருந்தது. இதற்குள் இந்த பெண்ணுக்கு வளர்ந்த இரு பிளளைகளும் உண்டு. எனினும் அதனை கூட அந்த பெண் நம்பவில்லை. எப்போதும் ஒருவரை நேசிக்கும் போது குறைகள் தெரிவதில்லை தானே. ஆனால் அந்த பெண் அனுகியிருந்த நபர் மூலம் பலருக்கும் இவ்விடயம் பரவி கடந்த மாதம் சில பெண்கள் அந்தப்பெண்ணுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்தரங்கமான விடயங்களின் … அனுப்பியிருந்தனர். இந்த வினையெல்லாம் யாரால்?
வயது வேறுபாடு, அதுவும் வேற்று இனத்தவருடன் மணவாழ்க்கை முறிந்தவர் பற்றி அந்தப்பெண் அவள் குடும்பத்தில் பேசுவதே எவ்வளவு அபர்த்தமானது அதையும் தாண்டி போராட நினைக்கும் போது அதனை மதிக்க வேண்டும். குறைந்த பட்சம் மிதிக்க நினைக்க கூடாது. வாழ்க்கையென்பது வெறும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதல்ல. நிதானம் முக்கியம் .அதுவும் ஒருமுறை தோற்றவர்கள் இன்னும் நிதானமாக அனுகவெண்டும். அதைவிடவும் வயது வித்தியாசம் 13 வருடங்கள். அப்படியிருக்கும் போது முதிர்ச்சியாக நடந்துகொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக தற்போது கட்டுரை எழுதல் வேறு தொடங்கியிருக்கின்றது.
நூறு நேர்காணல் கொடுத்தென்ன? ஆங்கிலம் பேசியயென்ன பயன்? ஒரு மனிதனுக்குள் தெளிவையும் முதிர்ச்சியையும் தராத அனுபவம் என்னத்திற்கு? கல்வி என்னத்திற்கு? கௌரவமாக வாழ்கின்ற எந்த குடும்பத்தினை சேர்ந்தவர்களும் இவ்வாறான விடயங்களை விரும்புவதில்லை. ஒருவரது முன்னைய வாழ்க்கை முறிவடைந்து மீண்டும் அவரை புரிந்துகொண்டு வாழ்வது என்பது வேறு அதேவேளை பல பெண்களுடன் பதினொரு மணிக்கு நெளிவு பற்றி பேசுகின்றவருடன் நம்பி ஏமாறுவது வேறு. இது மீதியிலைக்கும் எச்சியிலைக்குமான வேறுபாடு. இதில் மிக முக்கியமானது அனுப்பப்பட்டவற்றிலுள்ள திகதிகள். கடந்த ஆவணியில் ஆரம்பமாகிய இப்பிரச்சினையில் தான் அவரை ஏதோவொரு கோபத்தில் காயப்படுத்திவிட்டோம் என்று என்று அந்தப்பெண் கவிiயெழுதிக்கொண்டிருக்க இங்கே பலருடன் “பரந்த மனது” பற்றி பேசிக்கொண்டிருந்திருக்கின்றார். இனியும் அந்தப்பெண் சுணங்க வேண்டுமா?
உங்களுக்கு தெரியுமா அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவரில் உள்ள ஒரேயொரு பிரச்சினை எந்நேரமும் இயந்திரத்தனமாக இருப்பது மட்டும் தான். அந்த ஆணை இந்த பெண்ணை தவிர எந்த பெண்ணாலும் அனுகமுடியாது. அந்தளவு பெண் விடயத்தில் நேர்மையுண்டு. எந்தபெண் தானாக போய் விழுந்தாலும் கூட தள்ளிப்போ என்று சொல்கின்ற பக்குவமுண்டு. ஆனால் இங்கு அடிப்படையே தவறு. வறட்டு கௌரவம், அடுத்தவரை காயப்படுத்தி பார்த்து மகிழ்கின்ற வக்கிரம், வழிஞ்சல் தனம்…. இவருடன் வாழ நினைக்கும் அந்தப்பெண் எதிர்காலத்தில் நிம்மதியாகவிருக்க முடியாது. முன்னைய நாட்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் கூட ஒருவருடன் இருக்கும் போது மற்றவருடன் வழிவது என்னவொரு வழிஞ்சல் புத்தி. முதல் வாழ்க்கையிலும் இது தான் நிகழ்ந்திருக்கின்றது. இதுவரையான அறிந்த தெரிந்த விடயங்கள் இவை தான்.
அந்தப்பெண் தேடுவது தனியே துணை மட்டுமல்ல. எதிர்காலத்தில் அந்த குடும்பம் கட்டியெழுப்பவுள்ள விடயங்களுக்கான ஆளுமையுள்ள ஒருவரை. அவர் நிதானமும் ,முதிர்ச்சியுமுள்ளவராக இருத்தல் முக்கியம். அடுத்தது அந்தப்பெண்ணின் அண்ணா அண்ணி மரணத்தின் பின் அவர்களது மூன்று குழந்தைகளும் அந்தப்பெண்ணின் பொறுப்பிலுள்ளார்கள். அவர்களையும் அணைத்துக்கொள்கின்ற முதிர்ச்சியான தந்தையையும் தான் அவள் தேடுகின்றாள். அடுத்தது பிரத்யேகம் என்பது ஒரு உறவில் மிக முக்கியம்.
நீங்கள் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. அவர் அப்படியொன்றும் கவலைப்பட்டிருக்க மாட்டார். முடிந்தால் அந்தப்பெண்ணுக்கு மறைந்திருந்து சேறு பூச அல்லது ஏட்டிக்குபோட்டியாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அன்பு உணரப்படாதவிடத்து சுணங்கிடவே கூடாது.
இன்னுமொன்று தெரியுமா அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் வட்டத்திலுள்ள இன்னுமொரு வளர்ந்து வருகின்ற ஒருவரே காதலை சோல்லியிருக்கின்றார். எல்லாவற்றிலும் பொருத்தமாகவுள்ள அவரை அந்த பெண் தற்போது நிராகரித்துக்கொண்டிருப்பதே அந்த வட்டத்தில் இணைந்து வாழும் போது இவரை காயம் செய்யக்கூடாது என்பது தான். நினைத்திருந்தால் பார் நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று ஏட்டிக்கு போட்டியாக அந்தப்பெண்ணால் நடந்துகொள்ள முடியும். ஆனால் இது வாழ்க்கை. பல மனங்கள் சம்பந்தப்பட்டது. நிதானமாகத்தான் அனுகவேண்டும்.
ஒரு பக்கம் நீ தான் வேண்டும் என்று நிற்கின்ற நிச்சயிக்கப்பட்டவர், இன்னொரு பக்கம் பிரச்சினைக்குறியதொரு மேற்கூறிய நிலை, மற்றப்பக்கம் பதிலை எதிர்பார்த்திருக்கும் ஒருவர் என நாட்கள் சிக்கலாகிக்கிடக்கின்றது. முடிச்சுக்கள் அவிழவும் காயங்களை ஆற்றவும் காலம் தேவை. அநியாயம் நியாயம் அவனே அறிவான் அவனிடமே அந்தப்பெண் விட்டுச்செல்கின்றது.
அடுத்தது அந்தப்பெண் கதைத்துப்பார்க்கலாமே என்று கேட்டிருந்தீர்கள். அவளாகப் போய் பேசினால் அவள் அவளது குடும்பம் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். அது தான் முறையும் கூட. ஆனால் அப்படி பேசி அவளது பின்னணி தெரிந்து தான் ஒரு ஆண் நேசிக்க வேண்டுமென்பதல்ல. உண்மையில் அவர்கள் நாட்கள் சமூகமாகச் சென்று இருவரும் அன்பை பரிமாறியிருந்தால் நிச்சயம் அந்தப்பெண் சில நாட்களிலேயே தன் குடும்பம் பற்றி சொல்லியிருப்பாள், ஏன் அறிமுகம் கூட செய்து வைத்திருப்பாள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அணுகுவது? அந்தப்பெண்ணின் பக்கம் இருந்து நகர்த்திட இனி வழியில்லை. வலித்தாலும் உண்மையை உண்மையாகத்தானே சொல்ல வேண்டும்
அந்தப்பெண்ணின் குடும்பம் விரைவில் புலம்பெயரவுள்ளது. அந்தப்பெண்ணும் அடுத்த மாதம் படிப்பிற்காக செல்லவுள்ளாள். இதற்கு மேலும் நடந்தவை பொய்யாகவிருந்து இருவருக்குமிடையில் அன்பென்பது தூய்மையானதும் நேர்மையானதுமாயிருந்தால் சேருவார்கள். ஆனால் அது வரை அந்தப்பெண் இனி இது பற்றி பேசவிரும்பவில்லை. இத்துடன் இது குறித்து நாமும் பேசிட வேண்டாம்.
பிச்சை மட்டுமல்ல அன்பையும் பாத்திரமறிந்து இடவேண்டும் !!!

No comments:
Post a Comment