ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

2 comments:

  1. SISY might i know who is that என்னவன்...?

    ReplyDelete
  2. Oh no Anna i just saw a couple at Road then i wrote this...என்னவன் புற அழகை விட அக அழகு கொண்டவனாக தான் இருப்பான்...

    ReplyDelete

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை