அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் பங்குபற்றிய வேளை அறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களில் மிகமுக்கியமானவற்றினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்
பல உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்க்கையினை வேறுபடுத்திக்காட்டுவது “பகுத்தறிவு” என்பதே. “பகுத்தறிவு"; என்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டும் கூட சிலவேளைகளில் நமது வாழ்க்கையின் தெரிவுகளை சரியாக தெரிவு செய்வதற்கு தவறிவிடுகின்றோம். இதன் விளைவால் பாதை மாறியும் சென்றுவிடுகின்றோம். நமது வாழ்க்கையில் இவ்வாறு நாம் தெரிவுசெய்து கொள்ள வேண்டியவை மற்றுமு; அவற்றினை தெரிவுசெய்து கொள்ளவேண்டிய தருணங்கள் பல. ஆயினும் மிக மிக முக்கியமாக தெரிவுசெய்ய வேண்டியவை 4 என சாதித்தவர்களின் வாழ்க்கை எமக்குத் தெரிவிக்கின்றது
• நல்ல நண்பர்கள்
• தொழில்
• நல்ல வாழ்க்கைத்துணை
• பெற்றோர் அல்லது பிள்ளைகள்
நல்ல நண்பர்கள்
குழந்தைப் பருவத்தினை கடந்து அடுத்து நாம் காலடி வைக்கும் பருவம்; மாணவப்பருவம். எமது வாழ்க்கையினை அமைக்கப்போகும் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளும் பருவம். இப்பருவத்தில் இடப்படுகின்ற அடித்தளம் தான் எமது பிற்காலத்தினையும் சமூகத்தில் எமது அந்தஸ்த்தினையும் தீர்மானிக்கின்றது. இக்காலத்தில் எமக்கு உருவாகின்ற நண்பர்கள் தான் எமக்கான அடித்தளத்தினை அமைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். “உன் நண்பனை யார்? ஏன்று தெரிந்தால் உன்னைப் பற்றிக் கூறலாம்” என்ற முதுமொழி ஒன்றுள்ளது. உண்மையான நண்பன் என்பவன் நாம் பிழை செய்யும் தனக்கு இலாபம்; கிடைக்குமாயின் பேசமால் கூடவே இருந்து கூத்தடிப்பவனல்ல. அல்லது துன்பம் வந்தவுடன் தூர ஓடுபவனுமல்ல. தவறும் போது தட்டிக் கேட்க வேண்டும். இன்னல் ஏற்படும் போது கைகொடுக்க வேண்டும் இதைத்தான் வள்ளுவர் கூட “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்கின்றார்.
இன்னொரு விடயம் ஆண் - பெண் நட்பு. அன்றைய சமூகம் போன்று பிழையான கண்ணோட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடைப்பிடித்தல் சாலசிறந்தது. நமது நட்பு சமூகத்தில் மதிக்கப்படத்தக்கதாக நமது வாழ்கைத்துணைக்கு அறிமுகப்படுத்தக் கூடியளவு இருக்குமாயின் அது தான் உண்மையான பால் வித்தியாசம் கடந்த நட்பு அல்லது போனால் அந்த ஆண் - பெண் உறவில் எங்கோ ஓர் மூலையில் கள்ளத்தனம் ஒளிந்துள்ளது என்பது கண்கூடு. ஒருவேளை நமது உண்மையான நட்பினை எமது வாழ்க்கைததுணைவரோ காதலர்களோ புரிந்து கொள்ளாவிடின் அவர்களுக்கு நிச்சயம் ஒரு இருண்ட பக்கமுண்டு.
எமது நண்பன் என்பதில் அடுத்து அடங்குவது நல்ல புத்தகங்கள். அதற்காக புத்தகங்கள் எல்லாமே நல்லது என்பது பொருளல்ல. விடயங்களை கற்கும் போது “அன்னப்பட்சியாக” இருக்க வேண்டும். நல்ல விடயங்களை தேடிக் கற்க வேண்டும்.
தொழில்
ஒருவனை சமூகத்தில் அந்தஸ்துள்ளவனாக காட்டுவது அவனது தொழில் மற்றும் பதவி. இங்கு தொழில் பதவி என குறிப்பிடுவது நேர்மையாக கிடைக்கப்பட்டவை மட்டுமே. காக்கா பிடித்து அடிவருடி பல்லிளித்து கிடைத்தவை அல்ல. அத்துடன் இங்கு அந்தஸ்தை கொடுக்க வேண்டுமென்பதால் அவை கட்டாயமாக றூவைந உழடநச துழடி ஆக தான் இருக்க வேண்டுமென்பதுமல்ல. “செய்யும் தொழிலே தெய்வம்” நமது வயிற்றினை வளர்க்கும் தொழிலை மதிக்க வேண்டும். உயர்விற்காக பாடுபட வேண்டும். அதேவேளை தொழிலுக்காக குடும்ப அன்பை இழந்துவிடக் கூடாது. சிலர் பதவிக்காக ஓடி பாசத்தினை தவறவிட்டு விடுகின்றார்கள். அதிக செல்வமும் ஆபத்தானது. தூக்கத்தினை கெடுத்துவிடும். அளவான சம்பாத்தியம் அன்பான உறவுகள் கடனற்ற வாழ்க்கை இவற்றை ஒரு தொழில் பெற்றுத் தருமென்றால் அது தான் “நல்ல தொழில்”
பெற்றோர் அல்லது பிள்ளைகள்.
“குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்” என்று கூறுவார்கள். உண்மை தாங்க ஒரு பிள்ளை பிழை செய்யும் போது அதை தட்டிக்கேட்பதற்கு பெற்றோர் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேச மாட்டாகள். அடுத்த விடயம் அவர்கள் முதல் பயில்வது தம் பெற்றோரிடமிருந்து தான். அவர்கள் முன் மாதிரியாக இருந்தாலே போதும் பிள்ளைகள் தானாகவே நல்வழியில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அடுத்த விடயம் பெண்களுடைய குரல் என்று வீட்டில் உயர்கின்றதோ அங்கு நிச்சயம் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அங்கு தான் பிள்ளைகளுடைய குரலும் பெற்றோரை விட உயர ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளுடைய குரல் உயரும் போது நிச்சயம் அவர்களை திருத்த பெற்றோரால் முடியாது போகும். இதற்கான பெண்களை , பிள்ளைகளை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்பதல்ல கருத்து. “ஆண் கொழுவாகவும் பெண் கொடியாகவும்” இருக்க வேண்டும் என்பது தான் கருத்து
நல்ல வாழ்க்கைத்துணை
நமது வாழ்வின் அடுத்த முக்கியமான கட்டம் நம்மவர்களை தெரிவு செய்தல். நாம் எமது வாழ்க்கைத்துணையை தெரியும் போது நமக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர் , ஏன் எதிர்கால சந்ததியினை உருவாக்கும் போது நமது பிள்ளைகளுக்கு ஒருவர் நல்ல தந்தையாக அல்லது தாயாக இருப்பாரா என்பதையும் சிந்தித்து தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். மிகமுக்கியமான விடயம் “காதல்”. நாம் காதலில் தோற்பதென்பது நமது காதலில் உள்ள பிழைகளால் அல்ல நம்மவர்களை தெரிவு செய்வதில் தான். நேர்மையாக, வெளிப்படையாக எவர் ஒருவர் இருக்கின்றாரோ அவரை தெரிவுசெய்யுங்கள். இதற்காக சிந்தித்து முடிவுகளை எடுக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள். உங்கள் காதலை பெற்றோருக்கு மறைக்காதீர்கள். காதலைக் கூட கடவுளுடன் ஆரம்பியுங்கள் (அட நானும் இதை தான் நினைத்தேன்) துணை சிறந்தவர்களாக அமையும் போது தான் நம் இலட்சியங்களும் வெற்றி பெறும் குடும்பமும் கோயிலாக மதிக்கப்படும்.
(ம்ம்ம்ம்……. முதல் மூன்றும் ஓகே கடைசி தான் கொஞ்சம் இடிக்குது…)

No comments:
Post a Comment