எனது முன் பதிவானது “புரிதலும் பிரிதலும்” என்ற பதிவில் என் நண்பனின் நட்பை நியாயப்படுத்தியிருந்தேன். இது தொடர்பில் என் முகநூல் நண்பி ஒருவர் “உங்கள் காதலருக்கோ/கணவனுக்கோ பெண் ஒருவருடன் நட்பு இருந்தால் உங்கள் கருத்து என்ன?” என்று வினவி அதை அடுத்த பதிவாக எழுதும் படியும் கேட்டிருந்தார்.
நல்லதொரு வினா: நான் இந்த வினாவிற்கான பதிலை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய வயதில் தான் இருக்கின்றேன். (இதற்காக எனக்கு திருமணமாகிவிட்டது / காதல் உண்டு என்று நினைத்து கடலை போடுவதை நிறுத்தி விடாதீர்கள்)
உளவியல் ரீதியாக ஒரு ஆணோ, பெண்ணோ பாலர் பருவத்தில் எதிர்பாலாரின் கவனத்தினை தம்மிடம் திருப்ப முயற்சிப்பது முதல் பருவவயதில் பெண்ணாயின் தந்தையிடமும், ஆணாயின் அம்மாவிடமும் மற்றும் பாடசாலைப் பருவத்தில் எதிர்பாலானவரிடமான ஈர்ப்பு வரை எதிர்பால் கவர்ச்சி இருப்பது தான் சாதாரண மனித இயல்பென்றும் இல்லாதுவிடின் அது அதாதாரண நிலை (Disorder) என்றும் சொல்லப்படுகின்றது.
அத்துடன் என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊடகவியல் மற்றும் பொறியியல் துறையில் இருக்கின்றேன். நிச்சயம் ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களையும், அது போல் ஓர் ஆண் இருப்பின் அவர் ஆயிரம் பெண்களையும் தாண்டிப் போகவேண்டியிருக்கும். இப்போது அன்றைய காலம் போல் நாம் தனியுலகமாக இருக்க முடியாது. உலகத்தை கைக்குள் உள்ளடக்கியுள்ள நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே என்னளவில் என் கணவருக்கோ/காதலருக்கோ ஒரு பெண் நண்பி இருந்தால் அதனை நான் நிச்சயம் வரவேற்பேன். ஆனால் அதற்கான எல்லைகளை என்னவர் எவ்வாறு வரையறுத்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள தவறமாட்டேன். ஒரு நல்ல நண்பியுடன் என்னவர் பழகும் போது தான் ஒரு பெண்ணுடைய உள, உடல் ரீதியான பிரச்சினைகள் பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டு மனைவியை/காதலியை அணுசரித்து போவார் என்பது என் கருத்து. ஓர் ஆண் - பெண் நட்பு எங்கே பிழையாக நோக்கப்படுகிறதென்றால் அவை இருவருக்கும் பொதுவானதாக இல்லாத போதுதான்.
என்றுடைய கணவர்/காதலன் தன் நண்பியை எனக்கு அறிமுகம் செய்தால் நிச்சயம் அவர்கள் நட்பை வரவேற்பேன் அணுசரித்தும் போவேன். (இடைக்கிடையில் கொஞ்சம் செல்ல சண்டைகளும் பிடிப்பேன். அதற்காக சொக்கலேட்டும் வாங்கி தரவேண்டும்.)
என்னவனின் நட்பு எல்லையை தாண்டாமல் இருக்கும் வரை நிச்சயம் அதை புரிந்துகொண்டு அந்த நட்பிற்கு மதிப்பளிப்பேன். ஏன் அதை பிளஸ் ஆக கூட பயன்படுத்தி கொள்வேன். ஒரு வேளை என்னவன் என்னுடன் சண்டை போட்டால் அவர் நண்பியிடமே சொல்லி (நல்லா நிறைய குட்டுகள் போட்டு) என்னுடன் சமாதானப்படுத்த வைப்பேன். என்னவன் நட்பையும் காதலையும் வேறுபடுத்திப் பழகக்கூடிய நிதானமானவனாக அமைவான் என்பது நிச்சயம். எனக்கும் ஆண் சகோதரர்கள் இருக்கின்றார்கள் அவர்கள நல்ல நண்பிகள் நிறையப் பேருடன் பழகுகின்றார்கள். அதற்காக அவர்கள் பிழையா செய்கிறார்கள்?. என்னவனை பயமுறுத்தி அவர் நட்புகளுக்கு தடை போட்டு அவரை Disorder Person ஆக மாற்ற நான் தயாரில்லை.
“ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை” போன்று (நான் Sweet தான் சும்மா ஒரு கதைக்கு) என்னை மட்டும் கண்டு நட்பாகி அது காதலாகி கடைசியில் கடுப்பாகுவதை விட நிறைய இனிப்பை பார்த்தவன் போல் பல நல்ல நண்பிகளுடன் பழகியும் என்னில் ஏதோ இருப்பதாக எண்ணி என்னை தெரிவுசெய்பவனைத் தான் எனக்கு பிடிக்கும். ஏன் அது தான் நிலைக்கும். ஆகமொத்தத்தில் பக்குவப்பட்ட ஒருவனைத் தான் நானும் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வேன்.
எதுவும் நாம் பார்க்கின்ற முறையிலும், அனுகுகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்னவனுக்கும் நிறைய நல்ல நண்பிகள் இருந்தால் நிச்சயம் வரவேற்பேன். கூடவே நல்ல கணவர்/காதலன் கிடைக்கப் போகின்றான் என்று நினைத்து சந்தோசமும் அடைவேன். அவ்வப்போது பெண்மைக்கே உரிய பொறாமை எட்டிப்பார்த்தாலும் குட்டிச் சண்டை போட்டு விட்டு அடுத்த நிமிடமே மறந்திடுவேன்.
என்னவனுக்கு நல்ல நண்பி இருக்கின்றாள் என்றால் இது என்னவனின் பண்பையும், அதை புரிந்து கொண்டு நான் நடக்கும் போது அது எம்மிருவருக்கான அன்பையும் அந்நியோன்னியத்தையும் காட்டும் நண்பி
எப்படி எனது பதிலில் உங்களுக்கு திருப்தியா நண்பி???

No comments:
Post a Comment