பொதுவாக உறவுகள் பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. புரிந்துணர்வு இன்மை, வீண் வரட்டு கௌரவங்கள், சந்தேகங்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நம்மைத் துரத்தி துரத்தி வந்தவர்கள் திடீரென விலகுவதற்கு ஒரு சில காரணங்களே இருக்க கூடும்.
• நம்மை விட ஏதோவொரு வகையில் சிறந்தவர்கள் கிடைத்திருக்க கூடும். இது உடல் தேவைகள், பணம், பதவி என நீளும். ஆனால் நிச்சயம் மனதாக இருக்க முடியாது நாம் ஒருவருடைய மனதை மட்டுமே நேசித்தவர்கள் எனின் நிச்சயம் அவர்களை விட்டு விலகிட முடியாது.
• தாழ்வு மனப்பான்மை கூட சில வேளை ஒருவர் எம்மை விட்டுப் பிரிந்துசெல்ல ஏதுவாகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த மனப்பாங்கு உண்டு தாம் எவ்வளவு தான் ஒரு பெண்ணை நேசித்தாலும் அவள் தன்னை விட ஏதோவொரு வகையில் உயர்வாயிருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பிறர் அவளைப் பற்றி பேசும் போதோ அல்லது புகழும் போதோ ஏற்படும் இந்த மனோபாவம் அந்தப் பெண்ணிடம் சிறு சிறு விடயங்களுக்கு கூட எரிந்து விழுவதில் தொடங்கி இன்னொருவருடன் இணைத்து பேசுவது வரை வக்கிரமாக தொடரும். ஒரு சிலரால் மட்டுமே தங்களவர்களை தட்டிக்கொடுத்து பாராட்ட முடிகிறது. இவர்கள் மனித உருவில் வாழும் புனிதர்கள்
• இறுதியான விடயம் நாம் பழகும் ஒருவருக்கு நம்முடைய போலியான இன்னொரு முகம் தெரிய வரும் போது விலகிட முற்படுவோம். அதுவும் அவர்களிலேயே பழியைப் போட்டு உறவுகளை இலகுவில் முறித்து நமது சுயம் வெளிப்படாமல் தவிர்க்க முயல்வோம்.
எதுவாயிலும் ஒருவரை நன்கு அறிந்து அவருடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறுத்துக்கொண்டு ஓடிவிடுவது நல்லவர்களுக்கு அழகில்லைங்க. நாம் பலருடனும் பழகுவதால் சில வேளைகளில் பிரிவுகள் நம்மை தாக்குவதில்லை. நமக்குத்தான் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இருக்கிறதே… எதுவும் நாம் நிரந்தரமாக வைத்துக்கொள்வதில்லையே…. ஆனால் எதிர்பக்கத்தினரிடமான வலிகள், காயங்கள் பற்றியும் நினைக்கும் போது தான் தாம் மனிதர்களாகின்றோம்.
இதன் மறுபக்கத்தில் எதிர் தரப்பினர் நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்று. தெளிவற்ற மாறுகின்றதானவர்கள் வாழ்க்கையில் என்றும் நம்மோடு வருவார்கள் என்று எப்படி நம்புவது? வாழ்க்கை என்பது மண் விளையாட்டில்லை கல்லிலான செதுக்கள். இன்று நம்மை காயப்படுத்துபவர்கள் நம்மை நாளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களா என்பது பெரியதொரு கேள்வியும் கூட….நம்மவர்கள் நமது கரம் கோர்த்து என்றும் கூடவே வரவேண்டும் அது தாங்க வாழ்க்கை. இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்…. இதெல்லாம் விபசார வாழ்க்கைங்க…. இங்கு விபச்சாரம் உடலளவில் அல்ல மனதளவில்….. எல்லாம் நன்மைக்கே! திரும்பவும் சொல்கின்றேன் வாழ்க்கையை தெரிவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பிழை செய்தவர்கள் நாம் தப்பிவிட்டோம் அல்லது நம்மை நியாயமானவர்களாக காட்டிவிட்டோம் என்று நாம் நமக்குள் கூறிக்கொள்ளலாம். ஆனால் நாம் செய்த ஒவ்வொன்றிற்கும் மறுதாக்கம் நிச்சயம் உண்டு. கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான். காலமும் பதில் சொல்லும். தர்மம் எப்போதும் நின்று தான் கொல்லும்........
No comments:
Post a Comment