ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

2 comments:

  1. SISY might i know who is that என்னவன்...?

    ReplyDelete
  2. Oh no Anna i just saw a couple at Road then i wrote this...என்னவன் புற அழகை விட அக அழகு கொண்டவனாக தான் இருப்பான்...

    ReplyDelete

பதிவுகள்

நினைவுகள்!

கடந்த வாரம் நண்பர்களுடன் உலக அதிசயங்கள் பற்றியும் எம்முடைய கலந்துரையாடலில் பேசப்பட்டது. உலக அதியசங்களில் தொடங்கிய அலசல் அப்படியே ஐஸ்வர்யா ரா...

அதிகம் பார்க்கப்பட்டவை