அடுத்த நாள் விட்டில் பிரண்டைத் தாக்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மாலை பார்க்கும் போது பிரண்டைக்கொடிகள் அகற்றப்பட்டிருந்தன. தமிழர்களின் இடங்களில் புத்தர் முளைப்பது போல் அதற்கு பதில் வேறு புமரகொடிகள் சில நடப்பட்டிருந்தன. அட அறியாயமே என்று மனதிற்குள் நினைத்து, வீட்டிலும் ஒரு கத்து கத்திய பின் பிரண்டை எல்லோராலும் மறக்கப்பட்டுப் போனது. இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னர் பலருக்கும் ஏற்பட்டுள்ள மூட்டுவலி போன்று நம்முடைய வீட்டாக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரில் இருக்கின்ற வயதானவர்கள் சொன்ன பரிகாரம் தான் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. பிரண்டையை தேடினால் கிடைத்தால் தானே. பல நாள் தேடல்களுக்கு பின்னர் தான் சில இடங்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை வைத்து இப்போதெல்லாம் அடிக்கடி பிரண்டை தொக்கினை எம்முடைய மதிய உணவு தட்டுக்களில் காணக்கிடைக்கின்றது. பிரண்டை தொக்கு செய்வதென்பது அப்படியொன்றும் வேலைப்பளுவான விடயமல்ல
பிரண்டை என்பது நமது முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த மூலிகையாகும். கிராமப்புறங்களில் வேலிகளில் எளிதாக வளரக்கூடிய இந்த தாவரத்திற்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரண்டையின் மருத்துவப் பயன்கள் சில.....
- பிரண்டையின் மிக முக்கியமான குணம் எலும்புகளை வலுப்படுத்துவது. முறிந்த எலும்புகள் விரைவில் கூடுவதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தேய்மானப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
- மூட்டு வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
- பிரண்டை பசியை நன்கு தூண்டக்கூடியது. செரிமானக் கோளாறுகளை நீக்கி, வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்தும்.
- வாயுத் தொல்லை (Gastric problems) மற்றும் அஜீரணத்தை போக்கவல்லது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது
- உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது.
- வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். இது இரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தி, மூல முளைகளைச் சுருங்கச் செய்யும். மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கும்.
இது எல்லாவற்றினையும் விட நமக்கே நமக்கென்று மாதாந்தம் வருகின்ற மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வயிற்நுவலி மற்றும் இடுப்புவலிக்கும் பிரண்டையை உணவில் சேர்ப்பது நல்லது. மேற்சொன்ன வலிகள் குறைந்துவிடும்.
பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை இருக்கின்றதாம்.
எனக்கென்னமோ பிரண்டை என்பதை விடவும் வச்சிரவல்லி என்ற பெயர் மிகவும் பிடித்திருக்கின்றது. அவற்றின் வகைகளை எப்படி இனங்காண்பது என்பதை அறிந்துகொண்டு இந்த வகைகளை நாமும் உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல மூலிகைகளை நாம் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே பலதை தொலைத்தும் விட்டுவிட்டோம்..... வச்சிரவல்லி போல தூய அன்புகொண்ட மனிதர்களையும் தான்! .


No comments:
Post a Comment