Posts

Showing posts from June, 2013

மௌன அஞ்சலி

Image
செய்த பின் தான் ஞானம் உதித்தது - கூடவே மனதும் வலித்தது… எனக்குத் தெரியும் உன்னைப் இனிப்பெறுவதென்பது முயற்கொம்பென்று… திட்டமிட்டு செய்யவில்லை திடீரென்று தான் நிகழ்ந்தது… மலரைப் பறித்தாலும் மனம் பதைபதைப்பவள்… - இன்று உன்னை….. மன்னித்துவிடு! என் ஒரு நொடித் தவறு… நொடித்து விட்டது உன் வாழ்வை… என் சமாதானங்கள்…. சமாளிப்புக்கள்… வாதங்கள்…. – உன்னை மீட்டுத் தந்திடுமா….? என் கண நேர அவசரம்…. எத்தனை கனவுகளோ உனக்குள்….? காதலியிருக்கிறாளா…? கறுப்பான உனக்குள்ளும் என்னனென்ன கவலைகளோ…? உன் இறுதி நிமிடங்களில் என்ன நினைத்தாய்...? சாபமிட்டாயா? இல்லை சாதித்த திருப்தியுடன் போய் சேர்ந்தாயா...? என் தவறா…? படைப்பின் புதிரா…? பேனை புள்ளியென்று… தொட்டுவிட்டேன் - சிறு பூச்சி நீ…. செத்துவிட்டாய்… கொலை செய்திட்ட உறுத்தலுடன் மூடுகிறேன் நாட்குறிப்புடன் கூடவே என் விழிகளை….- உன் அகால மரண மௌன அஞ்சலிக்காக…. ( அண்மையில் புத்தகத்தில் இருந்த புள்ளியென்று நினைத்து பூச்சியை நசுக்கிவிட்டேன். அன்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது அதன் விளைவே இது ..)

மனப்பொருத்தம்....

Image
என்னவர்களே… எப்படியோ எடுத்துவிட்டீர்கள்…. எனக்கான மாப்பிள்ளை.. என் வைரக் கூண்டை தெரிந்துவிட்டீர்கள்…… செல்வாக்குக்கேற்ப செருக்கானவன் பதவியுடன் பவிசானவன் பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் ஆணழகன்… சாதி சமயத்திலும் சரிநிகரானவன்… பல்லிடங்கள் விசாரித்தளவில் பண்பானவன் - ஜாதகத்தில் பத்துக்கு ஒன்பது பொருத்தம் வேறு… அன்று - என் பிடிவாதங்கள் பட்டினிகள் பிராத்தனைகள்…. - மீறி பந்தல் வரை வந்துவிட்டீர்கள் பல மைல் தூரத்திற்கு அனுப்பியும் விட்டீர்கள்…. பத்தில் குறைந்த அந்த ஒன்று…. மனப்பொருத்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகாலையில் அம்மாவின் நெற்றி முத்தத்தில் பூக்குவியலாய் கண்மலரும் நான்… - இன்று தினமும் கசங்கிய மலராய் திடுக்கிட்டுத் தான் முழிக்கின்றேன்… அப்பா ஊட்டும் கவளச் சோற்றுக்கு ஆவென வாய் திறக்கும் செல்லப்பெண்…… - இன்று கண்ணீருடன்…. யாருமற்ற அரண்மணையில் தனியாக பிசைந்து கொண்டிருக்கின்றேன் கண்ணீருடன் காலையுணவை…. வைத்தியரிடும் ஊசிக்கு ஊரைக் கூட்டிய நான்…. உப்பில்லையென்று எந்;நேரம் உணவுத்தட்டு என்னைத் தாக்குமோ.. –என்று உணர்வற்று நிற்கின்றேன்… தெரியாமல் என்னை உரசியதற்கே அண்ணா பலரை வதம் செய்திருக...

பிளேட்டோவின் மூவகை அரசாங்கம்

Image
அண்மையில் அரசறிவியல் துறை பேராசிரியர் அம்பலவாணர் சிவராசாவின் “ஒப்பீட்டு அரசியல்" ( Comparative Politics) எனும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆதில் குறிப்பிட்டிருந்த பிளேட்டோவின் கருத்தொன்று என் சிந்தையினை தூண்டியிருந்தது. பிளேட்டோவின் “குடியரசு” ( Republic) “அரசியல் சான்றோன்” (The Statesmen) போன்ற நூல்களில் இருந்தான ஒரு விடயத்தினை ஆசிரியர் மேற்கோள் காட்டியிருந்தார். அரசாங்கத்துறைகளை பிளேட்டோ வகைப்படுத்தியிருந்ததான அக் கருத்துக்களை ஆராயும் போது என் நாடு “இலங்கை எவ்வகையில் சேர்த்தியாகின்றது?” என்ற மாபெரும் வினா தோன்றியுள்ளது. என் சிந்தை தூண்டிய அக்கருத்துக்கள் பற்றியும் அதற்கு முன் சிறிதாக பிளேட்டோ பற்றி அறிமுகத்தினையும் பதிகின்றேன். பிளேட்டோ ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநா...

மௌனம் ஓர் மந்திரம்

Image
“பேசாமல்” இருப்பது என்பது உண்மைக்குமே ஒரு பெரிய கலைங்க… நம்ம வடிவேல் சொல்வத போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்” தெரியுமா…? அதுவும் சில நேரம் கதைக்க வேண்டிய இடங்களில் கதைக்காமல் கண்ணாடிக்கு முன் புலம்புவமே… (இது எனக்கு நானே சொல்லிக்கொள்றனுங்க) அந்நேரம் ஏற்படுமே கடுப்பு… ஆனாலும் பாருங்க பல பிரச்சினைகளுக்கு இந்த பேச்சு தாங்க காரணம். கடுப்பில் சில நேரம் பேசிடுவோம். ஆனால் அதன் பின் ஆறுதலாக சிந்திக்கும் போது மௌனமாக இருந்து பல புதினங்களை பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றும். என்றாலும் பல வாய்ப்புக்களை அந்நேரம் இழந்திருப்போம். அண்மைய சில பிரச்சினைகளுக்கு பின் என்னுடைய தாயாரும் உற்ற நண்பியுமான அம்மாவிடம் அவற்றை பகிர்ந்து கொண்ட போது அறிவுரைகளுடன் கூடவே ஓர் மந்திரமும் சொன்னார். “மௌனமாக இரு” என்பது தான் அந்த மந்திரம்…. இன்று யோசிக்கும் போது மௌனம் ஓர் மந்திரம் தான் என்பது புரிகிறது…. கூடவே மௌனத்தினை பற்றி பா.விஜயின் என்னைத் தொட்ட வரிகள் சில…….. மௌனமாக இருங்கள் புலன்களை பேசவிடுங்கள் மலர்கள் எல்லாம் மௌனமாகத் தானே மந்திரம் சொல்கின்றன… அதனால் தான் அதில் வாசம் வசிக்கின்றது…. .........................

இல்லாதிருக்கிறாய்….(இல்லை + இருக்கிறாய்)

Image
நீ இருக்கின்றாய் என்பதற்கும் அருகில் இல்லை என்பதற்கும் தூரம் காற்றிடையே…… அருகில் இருக்கும் போது உன் வாசனை நுகர்கின்றேன் இல்லாத போது காற்றில் உணர்கின்றேன் காணும் போது கண்களுள் நிறைக்கின்றேன் காத்திருக்கையில் கனவுகளில் சுவைக்கின்றேன் பக்கத்தில் இருக்கும் போது ஸ்பரிசிக்கின்றேன் தொலைதூரமாகும் போது உன் நினைவுகளை சுவாசிக்கின்றேன் நேரில் நீ தருகின்ற பூக்களை இரசிக்கின்றேன் இல்லாத போது உன் புகைப்பட சிரிப்புக்களுள் சங்கமமாகின்றேன் இருக்கும் போது கார் சத்தம் கேட்டு விடுதி கதவருகில்….. இல்லாத போது வரும் நாளுக்காய் கலண்டரருகில்…….. அருகிலிருக்கும் போது காதோரம் கிசுகிசுக்கும் காதல் மொழிகள்… இல்லாத போது காது வரை மூடிய கம்பளிக்குள் கற்பனைகளின் தொல்லை…. நீ உள்ள போது உன் துணி துவைக்கின்றேன் இல்லாத போது உடைகளில் - உன் வாசம் பிடிக்கின்றேன் இரவில்… உனக்குள் தொலைகின்றேன் - நீ இல்லா ராத்திரிகளில் தலையணைகளை இறுக்கிக் கொள்கின்றேன் நீ உடன் இருப்பதும் சுகம் அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்…. உள்ள போது சேமித்தவை இல்லாத போது கனவுகளாக…. ஆக நீ ...

மடிப்பிச்சை கேட்டு நிற்கின்றேன்…..

Image
அன்பே பிரியங்களை புரிய வைக்க பொருட்களை – அதன் தரங்களை பெறுமதியை….. தேடாதே! உன் அருகிலான நொடிகளின்றி வேறு விலைமதிப்பற்ற பொருள் எனக்கேது….? உன் காதலை காட்ட கார்ப் பயணங்கள் வேண்டாமே….. சாரதியாக நீயும் சற்றுத் தள்ளி நானும்… சிறு இடைவெளிகள் கூட அண்டத்தின் இரு அந்தங்களாக…. பேரூந்து போதுமே உன் தோளில் செல்லமாக சாய்ந்து … நான் கண்ணயர்வதற்கு.. உன் வாசத்தினை உள்ளிழுத்துக் கொள்வதற்கு… நம் சந்திப்புக்களுக்கு கூட நட்சத்திர சத்திரங்களுக்கு கூட்டிப் போகிறாய்…. நுனி நாக்கு ஆங்கிலமும் பெயரறியா உணவுகளும்…. அதிரும் இசையும்…- நம் உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதை கண்டுகொள்ள நீ மறுப்பதேன்? சாலையோரத்தில் மழைச்சாரலில் ஒற்றைக் குடையில் முட்டிக் கொள்ளும் ஸ்பரிசத்தின் இன்பம் - ஏசி அறையிலில்லை அன்பே….. உன் மேல்த்தட்டு நண்பர்களிடம் என் திறமைகளைச் சொல்லி மார்தட்டிக்கொள்கிறாய்….. என்றாவது என்னை – நீ வாய்விட்டு வாழ்த்தியிருக்கின்றாயா? ஆயிரம் பேர் அவையில் புகழ்வதை விட உன் ஒற்றைச் சொல்லில் இருக்கிறது எனக்கான விருது… உன்னவர்கள் என்னழகை விமர்சிப்பதை இரசிக்கின்றாய்… காலையிலிருந்து கண்ணாடி முன்னான என் தவம்-  உன் ...

படைப்பின் விந்தை

Image
பிடி மணல் கூட தனக்கின்றி ஒரு சமூகம் - பல மனைகளை கட்டி வாடகையில் வாழ்கிறது தனவந்த குடும்பங்கள் பாடப்புத்தகம் வாங்க முடியாமல் பாதியில் நிற்கிறது பையனின் படிப்பு பாதித்தூரம் படித்த பின் படிப்பையே மாற்றிக்கொள்கிறான் பணக்காரன் கந்தல் துணியின் கிழிசலை மறைக்க அவசரமாக நடக்கிறாள் குடிசைப் பெண்… இடை முதல் தொடை வரை அரை குறை உடையில் பூனை நடை பயில்கிறாள் ஒருத்தி மேடையில்…. பட்டினியால் சாகின்றது தெருவோர குழந்தை தீண்டுவாரற்று கிடக்கிறது பணக்காரன் வீட்டு மேசை பதார்த்தங்கள் பணத்தால் பாதை மாறுகின்றனர் சிலர் - பணமின்றி பாடை கூட தூக்குவாறின்றி பல பிணங்கள் அறமற்ற காதல் அரங்கமேறுகிறது உயிர்வரை வலிக்கின்ற காதல் உலை வைக்கப்படுகிறது சீதனமில்லாமல் சிதைகிறது சில பெண்களின் காதல் கொட்டிக்கொடுத்த வீட்டில் காதலின்றி அழுகின்றாள் ஒரே பெண்…. குடிசையில் பிள்ளைகளின் ஓலம் தாங்காமல் ஒளிகின்றனர் அம்மா – அப்பா டாடி மம்மி கிளப்பிலிருந்து வரமாட்டார்களா என்று ஏங்குகிறது ஆயா மடியில் மாடிக்குழந்தை… தின்ற உணவுகள் செமிக்க கூடவே கொழுத்த நாய்களுடன் நடைப்பயிற்சியில் சிலர்… சத்துக்குறைபாடினால் சத்திரசிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றன...

உன் மடி மீது நான் உறங்க......

Image
நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல். நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல். கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன். கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன். காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால் எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன். சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன். சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக.. உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.  ....................................................................................................................  நிதமும் சேகரிக்கிறேன் என் இரவுகளை என்றேனும் ஓர் நாள் உன் மடி மீது நான் உறங்க...... இமைகளிலே வலி கண்ட போதும் உறங்கவில்லை எனது நினைவுகள்... என் நினைவுகள் அனைத்தும் உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்.... என் விழிகளோ இமை மூட மறுக்கின்றது... - அந்த இமை மூடும் நொடி பொழுதிலாவது உன் முகம் காண்பேனா என்று.... விடியும் இரவு போல.. விழி மூடா கனவு வேண்டும்...

பூவெல்லாம் உன் வாசம்.....

Image
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தமக்கான நண்பர்களையும், துணையினையும் தேடிக்கொள்கின்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் துணையினை தேடிக்கொள்ளும் போது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவதானமாகவும், பொருத்தமானவராகவும் தெரிய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. ஏனெனில் வாழ்க்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். எமக்கு துணையாக வருபவர் நமது முன்னேற்றங்களுக்கு படிகள் அமைத்துத் தருபவராக இருப்பதோடு நம்மைக் கண்கலங்காமல் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல நம்மவர்களின் “குடும்பம்” கூட நல்லதாக அமையும் போது தான் நம்மவர்களின் குணம், பண்பும் நல்லதாக இருக்கும். தமது குடும்பத்தில் பற்று, பாசம், பயம் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி நிச்சயம் அமைக்கும் குடும்பத்தினையும் சிறப்பாக அமைப்பார்கள். அண்மையில் என் ஆருயிர் நண்பன் (சிடு மூஞ்சி – நான் வைத்துள்ள பெயர்) என்னிடம் ஒரு திரைப்படத்தினை பார்க்கும் படி கூறியிருந்தார். சினிமாவில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாவிடினும் அன்பு நண்பனின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அத்திரைப்படத்தினை பார்த்தேன் திரைப்படம் - “பூவெல்லாம் உன் வாசம்” 2011 இல் ஆஸ்கார் பிலிம் தயாரிப்பில் எழில் க...

அசைய மறுக்கிறது என் மனம்…….

Image
அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன் வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த ஐந்து ரூபா மிட்டாயின் சுவை மிகுந்திருந்தது என்னளவில் ஆயிரம் அன்புமொழிகளை முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன் கோபத்தில் கூறிய “என்னடா”வின் அர்த்தம் அன்பின் எல்லை… கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில் நடக்கும் போது உரசுகின்ற – அவன் மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம் அழகிய கவிதை… முன் நடந்தாலும் பின் தொடர்கின்ற – அவன் பார்வை அலாதியானது என்னவனுக்கு பதவியில்லை பண்பிருக்கின்றது பையில் பணமில்லை மனதில் பாசமிருக்கின்றது.. தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில் பட்டும் படாமலும் தொடர்கின்ற கரிசனைகள் சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் இடையில் நிற்பவைகளை விடவும் இடையறாது தொடர்வது சுகமல்லவா? அப்பாவின் அரண்மனையை விடவும் - அவன் அருகாமை வேலியாகின்றது அவன் அன்பிற்காக மட்டுமே அருகில் மண்டியிட்டு அசைய மறுக்கிறது என் மனம்…….

பொருத்தம்....

Image
வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று அல்லது ஒருவருக்கொருவர் பொருந்திப்போவதில் தான் இருக்குது…  கொஞ்ச ஜோடிகளைப் பார்த்துவிட்டு விடயத்திற்கு வருவோமா….?  முதல்ல நம்ம சூர்யா – ஜோ ஜோடி. என்னா பொருத்தம்.. இருவரும் கண்களையும் பார்த்தே கண்படப்போகுது…. தான் விரும்பிய பொண்ணை ஒத்தக்காலில் நின்றே கைபிடித்தவர்…. ஹட் முதல் வெயிட் வரை அப்படியொரு அம்சம்…. கெமிஸ்ட்ரி இருவருக்குள்ளும். (சூர்யாவின் விசிறி என்பதில் அவர் ஜோவை கைப்பிடித்தில் கொஞ்சம் கடுப்பாகிய கதையும் இருக்கிறது. ம்ம்ம்ம்… அவர் தான் என்னை மிஸ் பண்ணிட்டார்… என்டு சமாதானமாகிட்டன்). அடுத்து 50 கேஜி தாஜ்மஹால்…. நம்ம ஐஸ் பற்றி சொன்னன்… ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் தூக்கத்தையும் கெடுத்தவர். வேறென்ன இவர பார்த்தில இருந்து நம்மளயும் ஸ்லிம் ஆக சொல்லி சிலதுகள் பண்ணிய அழிச்சாட்டியத்தில் பல பெண்களின் பகல் தூக்கம் (உடம்பு போட்டுடுமாம்) போனது பழைய கதை. இன்று பிரபலமானதொரு குடும்பத்தின் மருமகள். ஜோடிய பாருங்களேன் என்னதொரு களை…. நெக்ஸ்ட் தலயும் - ஷாலினியும். பேபி ஷாலினியாக வந்து இன்று ஒரு கியூட் பேபிக்கு மம்மி ஆகிட்டாங்க… விட்டுக்கொடுத்து போவத...

தாய்மை

Image
அண்மையிலான ஒரு அனுபவப்பகிர்வைப் பற்றியும் அந்த அனுபவம் எவ்வாறானதொரு தாக்கத்தினை என்னுள் ஏற்படுத்தியிருந்தது என்பதையும் பற்றி இந்தப் பதிவில் கூறவிருக்கின்றேன். என்னுடைய அம்மாவினுடைய தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவிற்கு அலுவலக நண்பிகள் என்று பலருள்ள போதும் அம்மாவின் நெருங்கிய வட்டத்தில் மூவர் இருக்கிறார்கள். (நளீன்ஸ் ட ஹாங்) நால்வரும் தான் எப்போதும் ஒன்றாக திரிவார்கள்;. வீட்டு விசேஷங்களிலும் கூட நான்கு குடும்பமும் இணைந்திருக்கும். இந்த நிமிடத்தில் இவர்கள் பற்றி ஒன்று கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். நால்வரும் ட்ரான்ஸர் கூட ஒரே அலுவலகத்திற்கு தான் எடுப்பார்கள். (இவர்கள் தொல்லைகளை எமது வீடுகள் மட்டுமின்றி மட்டுநகரே அறியும்) சம்பள நாட்களில் சின்ன பிள்ளைகள் (????) எங்களையெல்லாம் டியூஷனுக்கு அனுப்பிவிட்டு கடையில் ஜஸ்கிறீம் குடிப்பார்கள் (அப்பாவிடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்). அம்மாவினுடைய இந்த நண்பி வட்டத்தில் தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்...

தோல்வி.....

Image
குரு ஒருவர் தன் சிஷ்யன் ஒருவனுக்கு வில்வித்தை கற்பித்து வந்தார். ஒரு மாலை வேளை அந்த சிஷ்யனுடன் திறந்த வெளியொன்றிற்கு வந்த குரு அவன் முன்னால் பொருள் ஒன்றை நிறுத்தினார். பின் தன் சிஷ்யனைப் பார்த்து “உனக்கு விரும்பியளவு எத்தனை அம்புகள் உபயோகித்தாயினும் குறிபார்த்து அம்பெய்” என்று கூறினார். சிஷ்யனும் விளையாட்டாக அம்பெய்ய ஆரம்பித்தான். அவன் எய்த அம்புகளுள் பெரும்பாலானவை குறியை அடைந்ததுடன் சில அக்குறிக்கருகில் குத்திட்டு நின்றன. சிறிது நேரத்தின் பின் அவனை அழைத்த குரு “ உனக்கு பத்து பொற்காசுகள் தருகின்றேன். விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும்” என்று கூறினார். சிஷ்யனும் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் கூடவே பத்து பொற்காசுகளை பரிசாக பெறவேண்டும் என்ற அவாவுடன் அம்பெய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்த அம்புகள் குறி தவிர்ந்த அதனைச் சுற்றியிருந்த இடத்திலேயே குத்திட்டு நின்றன. பரிதாபத்துடன் குருவை திரும்பிப் பார்த்தான். (கண்ணில் பத்து பொற்காசுகளை மிஸ் பண்ணிட்டம் என்ற ஆற்றாமையும் அந்த பார்வையிலிருந்தது.) அவனை அருகில் அழைத்த குரு மீண்டும் அவனிடம் “ விரும்...

“வன்முறையில்லாத உலகம்”

Image
மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த தினத்தினை நினைவுகூறும் வகையில் “வன்முறையில்லாத உலகம்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டிற்கு பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டவர் மகாத்மா காந்தியின் பேரனான அருண்காந்தி. இவர் இளைஞனாக இருந்த பொழுது தனது பாட்டனாரின் ஆச்சிரமத்திற்கு மேற்கொண்ட விஜயம் தன் வாழ்க்கையை மாற்றியமைத்ததாகவும் அதுவே இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு தூண்டியிருந்தது என்றும் கட்டுரையாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் எளிமையான உதாரணங்கள் ஊடாக தன்னுடன் சில அடிப்படைக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிடுகின்றார். சமூகத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைக்கான காரணங்கள் சிக்கலானவை அல்ல என்றும் ஆயினும் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பரியவை என்றும் மகாத்மா அருண்காந்தியிடம் தெரிவித்திருந்தார். அவர் சுட்டிக்காட்டுகின்ற “எட்டுத் தவறுகள்” வருமாறு 1.    வேலை செய்யாமல் கிடைக்கும் செல்வம் 2.    மனச்சாட்சி இல்லாமல் அனுபவிக்கும் இன்பம் 3.    ஒழுக்கமற்ற அறிவு 4.    நேர்மையற்ற வியாபாரம் 5....