இந்தத் தலைப்பினை மனைவி Vs வைப்பாட்டி என்று கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த ஊடகத்துறையில் காலடி வைத்ததிலிருந்தே தினம் தினம் பல்வேறுப்பட்ட மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறானவர்களுள் சில மனிதர்களை அவர்களது குணாதிசயங்களைப் பற்றி என் விடுதி நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டு இவை பற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பரிமாறிக்கொளள்வோம். அண்மையில் நாம் கலந்துரையாடிக்கொண்ட ஒரு தலைப்புத் தான் மேற்கூறியது.
இன்று உலகமயமாக்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு விளைவு “பல” உறவுகள் “பல” முகங்கள். (இவை நல்லதா? கேட்டதா? என்பது வேறு விடயம்.) இதனால் உருவாகின்ற “பல” உறவுமுறைகள். இங்கு இந்த “பல” பற்றித் தான் விவாதிக்க உள்ளேன்.
ஒரு ஆண் தன்னைக் கடக்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் பலவிதமான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றான். (நான் பால் சார்ந்து கதைப்பதாக என்ன வேண்டாம். பெரும்பாலும் ஆண்கள் தான் இவ்வாறு இருக்கின்றார்கள் அதற்காக பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதும் அர்த்தமல்ல). எடைபோட்டுக்கொள்கின்றான். தனக்கு மனைவியாக வரப்போகின்றவளிடம் பின்வரும் சில தகுதிகளை எதிர்பார்க்கின்றான்.
- தன்னை விட சற்றேனும் அழகானவள் (யாராவது மனம் மட்டும் தான் என்று கூறினால் உச்சி பிளக்க குட்டவேண்டும்)
- சமூகத்தில் அடுத்தவர்களால் மதிக்கப்படுபவள் (இது குணமாகவும் இருக்கும்)
- சற்றுப் படித்தவள் , பண்பானவள்
- தன்னிடம் கேள்வி கேட்காதவள் (????)
- தன்னவளை ஒருவன் திரும்பிப்பார்த்தால் கூட கோபப்படுவார்கள் ( தாங்கள் பலரை வைத்துக்கொள்வது வேறு விடயம்)
- தன்னவள் மேல் சுண்டுவிரல் கூட திருமணத்திற்கு முன் படுவதை விரும்பமாட்டான்
- குறிப்பிட்ட அளவிற்கு மேல் தொல்லை கொடுக்கமாட்டார்கள் ஆனால் கண்கானிப்பார்கள் (நடுநிசி அழைப்புக்கள் இருக்காது ஆனால் செக் பண்ணிக்கொள்வார்கள்)
- தன் குடும்பம், அலுவலக நண்பர்கள் மற்றும் மேல்மட்ட நண்பர்களிடம் குறுகிய காலத்துக்குள் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
- தன் மனைவியாகப் போகிறவளை கடற்கரை, பூங்காவிற்கு அழைத்துச் செல்வதை விடவும் ஆலயத்திற்கு அல்லது கல்வி, இலக்கிய கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
- மனைவிக்கு/காதலிக்கு தன் முறையற்ற தொடர்புகளை மறைக்கும் அளவிற்கு ஒருவித தார்மீக பயமிருக்கும். ஆனால் முறையற்ற தொடர்புள்ளவர்களுடன் தன்னவர்கள் பற்றி கூறி எச்சரித்து வைக்கவும் தவறமாட்டார்கள்
- தன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து மனைவி/காதலியை விடவும் இவர்களிடம் தான் முழுமையாக கூறுவார்கள்
- தன் மின்னஞ்சல், முகநூல் கடவுச்சொற்கள் கொடுத்து வைத்திருப்பார்கள்
- நிறைய பரிசுகள் அளிப்பார்கள்
- அதிக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள்
- நிறைய ஊர் சுற்றுவார்கள் (யார் கண்ணிலும் படாமல்)
- குடும்பம் வரை சென்று கேள்வி கேட்கும் உரிமை,சக்தி,துணிவு இவளுக்குண்டு (தனிமையில் அழுவது வேறு விடயம்)
- ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் விலகிவிடவும் இவளால் மட்டும் தான் முடியும் (விவாகரத்து,காதல் தோல்வி என்பதெல்லாம் சட்டபூர்வமான உறவுகளுக்குத் தான்)
- சுயத்தை என்றும் இழக்கமாட்டாள் (மனைவி, காதலி தன்னவர்களை அடுத்தவர் புகழ்வதை இரசிப்பார்கள். தானே புகழ்ந்து சீன் எல்லாம் போடமாட்டார்கள்)
என்னதான் சொன்னாலும் மனைவிக்குறிய மதிப்பே தனிதாங்க.. ஒருவன் தன் மனைவிக்கோ காதலிக்கோ துரோகம் செய்திருந்தால் அவளிடம் கெஞ்சமாட்டான். அவளை சந்திக்க தயங்குவான் அவள் கண்களை கூட பார்க்க அவனால் முடியாது. விலகத்தான் முயற்சிப்பான். ஆனால் வேறுவிதமான தொடர்பு உள்ளவர்களிடம் தன் சோகங்களை கொட்டி ஒட்டிக்கொள்ள பார்ப்பான்.
தன்னவன் மனதில் பழைய காதலின் சாயல் இருப்பதையே விரும்பாதவள் இன்னொரு உறவையா ஏற்றுக்கொள்வாள்? (மனம் வலித்தாலும்) நம்மவர்களை விட்டுக்கொடுக்காமல், காட்டிக்கொடுக்காமல் திமிராக விலகிவிடுவது தாங்க காதலிக்கான, மனைவிக்கான பெருமை. எல்லாரிடமும் இனிய நினைவுகளை பகிர்ந்து நம்மை கண்டவர்களுக்கும் நிரூபிக்கவேண்டிய தேவை நிச்சயம் மனைவிக்கோ காதலிக்கோ இருக்காது. (குத்துவிளக்கு சாமியறையில் தானிருக்க வேண்டும் அடுத்தவருக்கு தெரியப்படுத்த உறவுகள் என்ன தெருவிளக்கா?) “;மனம்” தான் போய்விட்டதே… மாளிகையா முக்கியம் நம்மவன் மனதில் மகாராணியாக இருப்பது தான் மானமுள்ள பெண்ணுக்கழகு
இலக்கியம் முதல் இன்று வரை மனைவிக்குத்தாங்க சோதனை அல்லது மனதை நேசிப்பவர்களுக்குத் தான் பரீட்சைகள் அதிகம்….. கண்ணகியால் தான் மதுரையை எரிக்க முடியும்.. சீதையால் தான் தீக்குளிக்க முடியும்.. வைதேகியால் தான் கண்ணுக்காக காத்திருக்க முடியும்….
(மனைவி, காதலி இலையிலுள்ள பதார்த்தத்தினை பார்க்க மாட்டாள் பரிசுத்தத்தினை பார்ப்பாள்…. மற்றதுகள் பதார்த்தத்தினை பார்த்து பலர் கைபட்ட எச்சிலையும் சாப்பிக்கூடும். உண்மை உறவுகள் பொய்க்கும் போது அறுத்துக்கொள்ளும் பொய் உறவுகள் தம்மை மறைத்துக்கொள்ளும்)
பிற்குறிப்பு - இது என் வயதிற்கு மேற்பட்ட விடயம் என்றாலும் நாளை நானும் ஒரு குடும்பத்தின் தலைவியாகப் போகின்றவள். அடுத்தவரை எடைபோட தெரியாமல் இருந்தால் அதைவிட கொடுமை இருக்கமுடியாது. யாருக்காவது இப்பதிவு கடுப்பேத்தினால் எனது விடுதிக்கு வந்து என் நண்பிகள் மண்டையில் குட்டலாம்)
No comments:
Post a Comment