மருத்துவ ரீதியாக பார்க்கும் போது ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் வளர்ச்சிப்படியின் ஒவ்வொரு மட்டத்திலும் சில அடைவுகளை எட்டும் போது தான் அதன் வளர்ச்சி சரியானது என கொள்ளப்படுகிறது. அல்லது அந்த நபருக்கு உடல், உள ரீதியான பாதிப்பு இருப்பதாக கணிக்கப்படும்.
நான் இன்று பதிவிற்காக எடுத்துக்கொண்ட விடயம் உடல்,உள ரீதியில் ஆரோக்கியமாகவும் ஆயினும் சில முதிர்ச்சிகள் அற்றவர்களாக இருப்பவர்கள் பற்றியும் அலசுவதே…
ஒருவனை சமூகம் அவனது பதவி,பணம்,படிப்பு என்பவற்றை வைத்து மதிப்பு கொடுத்தாலும்அ அவனது செயல், பழக்கங்கள், பேச்சு என்பவற்றினை வைத்துத்தான் மட்டுக்கட்டுகிறது.( நம்மைக் கண்டவுடன் எழுந்து நின்று வாழ்த்துபவர்கள் மனதிற்குள்ளும் மருகக்கூடும்). இந்த மட்டுக்கட்டல்கள் நம்மை மட்டுமன்றி நமது குடும்ப கௌரவம், நமது பதவிக்கான மதிப்புகளைக்கூட பாதிப்பது மட்டுமல்ல நாம் சமூகத்திற்கு சில செய்திகளை முன்வைக்கும் போது அவை எடுபடாமல் போவதற்றும் ஏதுவாகிறது.
வேறெங்கும் போகத்தேவையில்லை முகநூலிற்கு போனாலே போதும் ஒருவனுடைய தராதரத்தினை அறிவதற்கு. ஒரு லைக் பண்ணுவதை வைத்துக்கூட ஓரளவு கணிக்கலாம் யாருக்கும் யாருக்கும் கள்ளத் தொடர்புகள் , நல்ல தொட்புகள் இருக்கிறதென்று) சில ஆண்களும் சரி பெண்களும் சரி குறிப்பிட்டவர்களது முதுகு சொரிதல்களுக்கு கூட தேடிப்பிடித்து லைக் பண்ணுவார்கள். இன்னும் சிலர் வழிஞ்சு வாயால் ஒழுகுகின்ற அளவிற்கு கொமண்ட் போட்டிருப்பார்கள்.. இன்னும் சில ஜென்மங்கள் படித்திருக்கும், நல்ல பொறுப்பான பதவியிலிருக்கும், பண்பான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஆனால் நையாண்டிக் கருத்துக்களை போட்டு தன்னுடைய தரத்தினை தானே இறக்கியிருக்கும்…..
இது நமக்கு தேவையா? எல்லாம் அளவோட இருந்தால் எமக்கான மரியாதையை நாமே காப்பாற்றிக்கொள்ளலாமல்லவா? நம்மவர்களிடம் குழந்தையாக இருப்பதில் நியாயம் இருக்கிறது. அதற்காக பொது இடத்திலுமா? அதிலும் வாழ்க்கையினை தெரிவு செய்யும் வயதில் இருப்பவர்கள், காதலிப்பவர்களுக்கென்று சில முதிர்ச்சிகள் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டாம் என்பதல்ல என் வாதம்..
- நண்பர்களுடன் அரட்டையடியுங்கள், ஊர்சுற்றுங்கள் ஆண்களென்றால் குடியுங்கள் ஆனால் உங்கள் ஈரல்கள் சுருங்கும் அளவிற்கோ ஆட்டக்காரி என்று பெயரெடுக்கும் அளவிற்கோ அது இருக்க வேண்டாம்
- எதிர்பாலாருடன் கடலை போடுங்கள் இந்த வயதில்லல்லாமல் பொல்லூண்டிக்கொண்டா கடலை போடமுடியும்? ( எனக்கும் நிறைய கடலைகள் இருக்குதுங்க) ஆனால் அதுவே நம்மவர்களை காயப்படுத்தாமல் , நம்மைக் களங்கபடுத்தாமல் இருக்க வேண்டும்.
- சண்டை பிடியுங்கள் அவை செல்லச்சண்டையாக இருக்கட்டும். சிறு விடங்களிற்கும் முகத்திலடித்தபடி “உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்னை தொடர்புகொள்ள வேண்டாம்” தூக்கியெறியாதீர்கள். காதலில் இன்றைய கீறல்கள் நாளைய வெடிப்புகளாக மாறும்.
- யாருடன் பழகுகின்றோம்? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் ஒரு பொறுக்கியுடனோ அல்லது ஒரு தரம் கெட்ட பெண்ணுடனோ பழகும் போது நம்மையும் பிழையாகவே எடை போடக்கூடும்.
- காதலர்களுக்கிடையில் ஒருவர் இன்னொருவருடன் பழகும் போது பொறாமை வருவது சகஜம் (நமக்கெ தெரியும் இது நம்மள விட்டு போகாதென்று ஆனாலும் சும்மா ஒரு இது…) ஆனால் அதுவே ஒரே குறிப்பிட்ட ஒருவருடன் இணைத்துப் பேசும் போது சந்தேகமாக மாறுவதுடன் பிழை செய்யாத தரப்பினரிடம் ஏற்படும் வலி இருக்கிறதே அதுவும் சகோதர உறவுடன் பழகும் ஒருவருடன் மூன்றாம் நபர் முன்னிலையில் பேசும் போது( தண்டவாளத்தில் தலை வைக்க தோன்றும்) அதுவே உறவிற்கான முற்றுப்புள்ளியாக மாறும்.
- குடும்ப பாசம் இருக்க வேண்டும். முகநூலில் பல மணி செலவளிக்கும் நமக்கு நம்மவர்களுக்கு சில வார்த்தை பேசுவது பாரமாகின்றது. ஆரம்பத்தில் இருக்கும் பற்று ஏன் இறுதியில் குறைகிறது? ( ஒரே முகநூலில் இருக்கும் ஆணையும் இரவில் முகநூலில் இருக்கும் பெண்ணுக்கும் எனது விடுதியில் வேறு பெயரிருக்கிறது) சமூக ஊடகம் தேவை தான் அதுவே நம்மை சந்தி சிரிக்க வைக்காமல் இருந்தால் சரி…
- தொடர்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். முதல் நாம் பருவத்தில் செய்ததைப் போன்று தொடர்ந்தும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்க முடியாதுங்க. நமக்கென்று ஒருவர் வந்த பின் வேறு நண்பர்களை குறைப்பது நல்லது. (சில வேளை நம்மவர்கள் செல்லப் பெயரால் கொமண்ட் போடுவதை விரும்பாத நாம் அடுத்தவர் போடும் “ ரு அநயn வை னநயச ஐ டழஎந ர….” என்று அடுத்தவர் போட்டதை லைக் பண்ணியிருப்போம்.) இதே செயலை எதிர்பாலார் செய்திருந்தால் பொறுத்திருப்போமா? உங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாக உங்களவர்களை அறிமுகம் செய்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்.
- சில வேளை மூன்றாம் நபரும் நம்மை அவதானிக்க கூடும் (என்ன வடை போச்சே என்று தான்) அவர்கள் சில வேளை உங்கள் முதிர்ச்சியின்மைகளை காட்டி உங்களவர்களை மட்டந்தட்டக்கூடும் (வயிற்றெரிச்சல் தான் ) நம்மவர்கள் தலைகுனியுமளவிற்கு நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டாமே
வாழ்க்கையென்பது வாழ்வதற்கு தாங்க. உண்மையாய், கவிதையாய் வாழுங்கள்
“ஒரு பெண் இன்னொரு தந்தையையும் ஒரு ஆண் முதல் குழந்தையையும் தேடுவது தான் காதல்”
காதலில் இன்றைய கீறல்கள் நாளைய வெடிப்புகளாக மாறும்!! Wonderful!!
ReplyDeleteஉண்மை தான் தரு. சிறு காயங்கள் சீழ் பிடிக்கவும் கூடும் உறவுகளை கண்ணாடி போன்று கைக்கொள்ளும் போது தான் அவை நிலைக்கின்றன
ReplyDelete