இன்று எம் சமூகத்தில் “காதல்” உடன் வாழ்வது என்பது மிகவும் அருகி வருகின்றது. என் தந்தையின் காதல் பற்றியும் கடந்த சில நாட்களில் நான் மேற்கொண்டிருந்த பயணத்தில் சந்தித்த மனிதர்கள் தொடர்பிலும் அவர்களது “வாழுகின்ற காதல்” தொடர்பிலும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகின்றேன்.
என் தந்தை எனது தாயாரை ஒரு தலையாக காதலித்து பல இடையூறுகளின் மத்தியில் கைப்பிடித்தவர். இப்போது கூட ஏதும் ஊடல் வந்தால் “நீங்கள் தான் என் பின்னால் சுத்தினீர்கள்…” என்று அம்மா கூறுவதுண்டு. என் தந்தை பல வருடங்களின் பின் நாடு திரும்பியிருந்தார். அவரை அழைத்து வர குடும்பமாக விமான நிலையம் சென்றிருந்தோம். வீடும் வரும் வழியில் அவரது மணிப்பேர்சினை எதேச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் கறுப்பு – வெள்ளைப் புகைப்படமொன்று…. காணப்பட்டது. ( கொஞ்சம் பயந்திட்டன் சித்தியோ… என்று) என்னவென்று பார்த்தால் அம்மாவின் பழைய புகைப்படம். என் தம்பி கிண்டலாக “அப்பா கலர் படம் கிடைக்கலையா?” என்று கிண்டலடித்தான்.. “அது தான் தம்பி நான் முதன்முதல் பார்த்த முகம்” என்று அப்பா ஒரு வரியில் கூறிய பதில் ஆயிரம் கதை கூறியது. அப்போது பார்த்திருக்க வேண்டும் அம்மாவின் முகத்திலிருந்த களையை… பெருமையை… வெட்கத்தினை…. ம்ம்ம்ம்…. அப்பா முன்னால் அம்மா என்னவொரு அழகு…. எந்த மனைவிக்குமே தன் கணவன் தன்னை மட்டும் நேசிக்கின்றான் என்பதை விட வேறென்னங்க வேண்டும்… இது அப்பாவின் 30 வருடத்தின் பின்னும் தொடர்கின்ற காதல் கதை.
அடுத்தது அண்மையில் சென்றிருந்த செயலமர்வு ஐந்து நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது. மதிய உணவு உண்ணும் போது என் நண்பர் ஒருவர் என்னிடம் “ உங்களுக்கு ஆண் நண்பர் உண்டா? “ என்று கேட்டார். இதுவரை இல்லை என்று கூறிய பின் வழமை போன்றே ( ஒரு பெண்ணிடம் இந்த கேள்வி கேட்டால் அவளும் அதை திருப்பி கேட்பாள் என்பது சகஜம்) உங்களுக்கு உண்டா? என்று கேட்டேன். “ இதென்னங்க கல்யாணமே ஆகிவிட்டது. 18 வருடங்கள் நண்பர்களாக இருந்து பின் காதலித்து கல்யாணம் செய்தோம்…. இப்ப கூட பாருங்க என்ன தான் சாப்பிட்டாலும் அவட கையால ஒரு கறியுடன் சாப்பிடுவது போல் வருமா?” என்று தன் மனைவி பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டார். கேட்கும் போதே மனசுக்கு இதமாக இருந்தது. இப்படியொரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்த பெண். இது வாழ்ந்து கொண்டிருக்கின்ற காதல்…….. கவிதையான வாழ்க்கை….
இப்போதெல்லாம் கவிதையில் தோற்ற காதல் பற்றிய உருக்கமும் , காலை நேரம் முழுவதும் ஒருவரிடம் கடலையும் இராப்பொழுதில் இன்னொருவருடன் காமக்கதை என்றும் பல முகங்களுடன் வாழும் சில ஜந்துகள் மத்தியில் இவ்வாறாக சில காதல்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது மனம் வாழ்த்துவது மட்டுமன்றி நமக்கும் இவ்வாறான வாழ்கின்ற காதல் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கவும் தொடங்கிவிட்டது.
பிற்குறிப்பு - இந்த செயலமர்வில் கலந்து கொண்ட ஒரு பெண் நான் மட்டுமே என்பதும் வயதில் குறைந்தவள் என்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம். ஒரு நண்பன் நிகழ்ச்சி முடிவில் (Maybe no option) “வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா...” பாடலை எனக்காக பாடுவதாக கூறி பாடி அசத்தி என்னை வெட்கப்பட வைத்தது என்றும் இனிய நினைவுகளில் ஒன்று….. ( ஆமா நீங்க பிரபுதேவாவா? அரவிந்தசாமியா? )

No comments:
Post a Comment