எம் முன்னோர்களது காதல் வாழ்க்கையினை எடுத்துக் கொண்டால் மிகமிக புனிதமானதொன்றாக விளங்கியது. அவர்கள் கண்டவுடன் காதலிக்கவில்லை. நின்று நிதானித்து காதலித்தார்கள். காலமெல்லாம் காத்திருந்து கைப்பிடித்தார்கள். ஒரு வேளை அவர்கள் காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் ஒருவித புனிதத்தன்மை காணப்பட்டது. இவ்வளவிற்கும் அன்று தொலைத்தொடர்பு வசதிகள் கூட இருக்கவில்லை.
இன்று பாருங்கள் “கண்டதும் காதல் கொண்டது கோலம்” என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு பெண்ணை /ஆணை காதலிப்பார்கள் துரத்தி துரத்தி வீட்டவர்களுக்கும் சில நேரம் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஆனால் முகநூலிலோ. பொதுக்கூட்டங்களிலோ பழைய நண்பிகள் , நண்பன்களை கண்டுவிட்டால் ஒரடி தள்ளியே நிற்பார்கள். தாம் நேர்மையானவர்கள், நமது உறவுகளும் நேர்மையானது என்றால், அவர்கள் தான் நம் வாழ்க்கைத்துணை என்று தீர்மானித்திருந்தோமானால் ஏன் அதை மறைக்க வேண்டும்? ஒருவனுக்கு ஒருத்தியென்றால் அதை ஏன் ஒளிக்க வேண்டும். தொலைபேசியிலும் நேரிலும் வழிகின்ற நாம் ஏன் அடுத்தவர் முன் நம்மவர்களை “சகோதரம்” என்றழைக்க வேண்டும். நமது அக்கா,தங்கை, அண்ணா, தம்பியுடன் காதல் + காமத்துடன் தான் பழகுகின்றோமா? கேட்டால் “சமூக ஊடகமாம்”. இப்படியானதொரு சமூக ஊடகம் நமக்குத் தேவை தானா?
சிலர் வெளியில் ரொம்ப நல்லவர்கள் போல் தாம் வேறு ஆண்களையும் பெண்களையும் ஏறெடுத்தே பார்ப்பதில்லை என்று பீற்றிக்கொள்வார்கள். அடுத்தவர்கள் பற்றி ஆயிரம் விமர்சனம் வேறு. பழகிப்பார்த்தால் தெரியும் இவர்களது சுயரூபம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் “காதலில் தொடுகைகள் முக்கியமாம். இல்லாவிட்டால் அது உண்மைக்காதல் இல்லையாம்” ஏன் தொட்டால் தான் காதலா? மனதைப்பார்த்து தான் விரும்புகின்றோம் என்றால் ஏன் தொடுகை அத்தியாவசியமாகிறது.? நமது தாத்தா, பாட்டி காலத்திலெல்லாம் எங்கே சந்தித்துக் கொண்டார்கள்? திருமணம் செய்து நல்லதொரு அர்த்தமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவில்லையா? கவனம் காதலுக்கு முன் தொடுகை கண்ணை கசக்க வைக்காமலிருந்தால் சரி தான்.
இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். காதலுக்கு (????) ஒருத்தி களியாட்டங்களுக்கு பலர். இவர்களது தொலைபேசிக்கு இரவில் அழைப்பினை ஏற்படுத்தி பார்த்தாலே தெரிந்துவிடும். அதென்னங்க தினமும் “நடுநிசி அழைப்புக்கள்” நிச்சயம் அலுவலக வேலைகள் நடுச்சாமம் வரை இருக்கப்போவதில்லை. ஒரு வேளை இருந்தாலும் ஒவ்வொரு நாளுமா இருக்கும்? கல்யாணக் கனவுகளுடன் காதலர்கள் இருப்பார்கள் தொலைபேசியில் கண்டவர்களுடன் கள்ளக்காதல் நடந்து கொண்டிருக்கும். இதை காதலர்கள் கண்டுகொண்டால் பழியை தேடிப்பிடித்து ஒதுக்கிவிடுவார்கள். (நாம் தான் ரொம்ம்ம்ம்…ப நல்லவர்களாயிட்டே… அடுத்தவர்கள் தான் பண்பு தெரியாதவர்கள்) இதற்காக நண்பர்கள் இருக்க கூடாது என்பதல்ல அர்த்தம். அந்த நட்பு (???) நமது பிறந்த நாளுக்கு கூட விழித்திருந்து வாழ்த்துகின்ற அளவுக்கு போகாமல் இருந்தால் சரி. காதலிப்பவர்கள் வாழ்த்தினால் அர்த்தமிருக்கும் கண்டவர்களும் வாழ்த்துவதென்றால் நிச்சயம் நட்பையும் , காதலையும் கடந்த ஏதோவொன்றும் இருக்கும் என்பது ஆணித்தரமான கருத்து.
ஆனாலும் சில ஆச்சரியங்கள்
- தாம் எவ்வளவு தான் விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும் காதலே செய்யாத புத்தம்புதிதான காதலி தேவை சிலருக்கு.
- சில நல்ல குடும்பத்து பிள்ளைகளே இவ்வாறு நடப்பது மட்டுமன்றி நல்ல குடும்பத்து துணைகளை தேடி அந்த அப்பாவியின் வாழ்க்கையையும் சிதைக்க நினைக்கின்றார்கள்
எத்தனை பெண்களின் பின் அலைகின்றோம் என்பதிலில்லை நமது ஆண்மை எத்தனை ஆண்களை சுண்டி இழுக்கின்றோம் என்பதிலில்லை எமது பெண்மை…… ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அது காதலே என்றாலும்!
தெரு நாய் தாங்க எந்த நாய் கிடைக்குமென்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையுமாம்……
No comments:
Post a Comment