Posts

Showing posts from May, 2013

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு

Image
மீராவிற்கும் கண்ணனுக்கும் தான் தொடர்புண்டு... இவர்களது காதல் காலம் கடந்த காதல்.... இலக்கியங்கள் இயம்புகின்றன. மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு... கர்ணன் கொடையில் சிறந்தவன் மீரா அன்பானவர்களை கொடுப்பதில் சிறந்தவள்... ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை அவன் கொடுத்தது உயிரற்ற பொருள் தானம்... மீராவினது.. உயிருள்ளவர்களை கொடுப்பது..... ஒவ்வொரு முறையும் கொடுத்தே தொலைகிறேன் இப்போதெல்லாம் கொடுப்பதிலும்..... தனியே கண்ணீர் வடிப்பதிலும் ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது. திகதி -30.05.2013

காதல் Vs கள்ளத்தொடர்புகள்

Image
இந்தத் தலைப்பினை மனைவி Vs வைப்பாட்டி என்று கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த ஊடகத்துறையில் காலடி வைத்ததிலிருந்தே தினம் தினம் பல்வேறுப்பட்ட மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறானவர்களுள் சில மனிதர்களை அவர்களது குணாதிசயங்களைப் பற்றி என் விடுதி நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டு இவை பற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பரிமாறிக்கொளள்வோம். அண்மையில் நாம் கலந்துரையாடிக்கொண்ட ஒரு தலைப்புத் தான் மேற்கூறியது. இன்று உலகமயமாக்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு விளைவு “பல” உறவுகள் “பல” முகங்கள். (இவை நல்லதா? கேட்டதா? என்பது வேறு விடயம்.) இதனால் உருவாகின்ற “பல” உறவுமுறைகள். இங்கு இந்த “பல” பற்றித் தான் விவாதிக்க உள்ளேன். ஒரு ஆண் தன்னைக் கடக்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் பலவிதமான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றான். (நான் பால் சார்ந்து கதைப்பதாக என்ன வேண்டாம். பெரும்பாலும் ஆண்கள் தான் இவ்வாறு இருக்கின்றார்கள் அதற்காக பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதும் அர்த்தமல்ல). எடைபோட்டுக்கொள்கின்றான். தனக்கு மனைவியாக வரப்போகின்றவளிடம் பின்வரும் சில தகுதிகளை எதிர்பார்க்கின்றான்.  தன்னை விட சற்றேனும...

வாழுகின்ற காதல்

Image
இன்று எம் சமூகத்தில் “காதல்” உடன் வாழ்வது என்பது மிகவும் அருகி வருகின்றது. என் தந்தையின் காதல் பற்றியும் கடந்த சில நாட்களில் நான் மேற்கொண்டிருந்த பயணத்தில் சந்தித்த மனிதர்கள் தொடர்பிலும் அவர்களது “வாழுகின்ற காதல்” தொடர்பிலும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகின்றேன். என் தந்தை எனது தாயாரை ஒரு தலையாக காதலித்து பல இடையூறுகளின் மத்தியில் கைப்பிடித்தவர். இப்போது கூட ஏதும் ஊடல் வந்தால் “நீங்கள் தான் என் பின்னால் சுத்தினீர்கள்…” என்று அம்மா கூறுவதுண்டு. என் தந்தை பல வருடங்களின் பின் நாடு திரும்பியிருந்தார். அவரை அழைத்து வர குடும்பமாக விமான நிலையம் சென்றிருந்தோம். வீடும் வரும் வழியில் அவரது மணிப்பேர்சினை எதேச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் கறுப்பு – வெள்ளைப் புகைப்படமொன்று…. காணப்பட்டது. ( கொஞ்சம் பயந்திட்டன் சித்தியோ… என்று) என்னவென்று பார்த்தால் அம்மாவின் பழைய புகைப்படம். என் தம்பி கிண்டலாக “அப்பா கலர் படம் கிடைக்கலையா?” என்று கிண்டலடித்தான்.. “அது தான் தம்பி நான் முதன்முதல் பார்த்த முகம்” என்று அப்பா ஒரு வரியில் கூறிய பதில் ஆயிரம் கதை கூறியது. அப்போது பார்த்திருக்க வேண்டு...

நீரில் வாழும் மீனின் தாகம்....

Image
என் பணம் அழகு படிப்பு புதவி உன்னை வாங்கியதற்கான விலை என்றெல்லாம் ஊர் பேசியது… என் விடுதியின் ஓவ்வொரு சுவர்களும் என் நாட்குறிப்பின் ஒவ்வொரு பக்கங்களும் என் தலையணையின் ஈரமும் சொல்லும்…. எதற்காக உன்னை நேசித்தேன் என்று நீரில் வாழும் மீனின் தாகம் மீன் மட்டுமே அறியும்….. அடுத்தவள் கேட்டாள் என்னை உன் முன் நிறுத்தி யாரை நீ விரும்புகிறாயென்று கேட்க வேண்டுமென்று…. ஒரு வேளை நீ என் நோக்கி கைகாட்டியிருந்தாலும் பணம் புதவி அழகு படிப்பு என்று பல காரணம் கூறி என் அன்பு தோற்றிருக்கும்….. எதில் தோற்றாலும் மீராவின் அன்பு தோற்க கூடாது என்னளவில் பெறுமதியற்றது அதுவொன்றே அவள் ஒதுங்கிடவா என்றும் கேட்டாள்…. உன் அன்பிற்காக மட்டுமே உன்னை யாசித்திருப்பேன் அப்போதும் உன்னை வாங்கி விட்டேன் என்று தான் உலகம் கூறும்…. அன்பிற்கான ஏக்கம் மீராவிற்கு புதிதல்ல…. கண்ணீரின் சூடு பழகிவிட்டதொன்று…. – என் பெண்மையின் மென்மை உன்னை பகிராது…  பகிர்தலின் வலி தெரிந்தே இன்னொருத்திக்கு வலி கொடுக்காமல் திமிராக விலகிவிட்டேன் - என்னளவில் உறவுகள் தோற்றாலும் என் உணர்வுகள் தோ...

பேசுகின்றான் பாலச்சந்திரன்......

Image
தப்பிக்கத் தெரியாமலா கடைசி வரையில் களத்தில் நின்றோம்? பதுங்க வழியின்றியா பகைவனிடம் சிக்கினோம்? பிரபாகரனின் இன்னொரு பிள்ளை எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான் - என எள்ளி நகையாட அந்த ஈனக் கும்பலுக்கு எப்படி இடம் கொடுக்க முடியும்? அந்த பயந்தாங்கொள்ளிகளை அவர்களின் பதுங்கு குழிகளிலேயே சந்தித்தோம் பாவம் பாலச்சந்திரன்! பசிக்கு ஏதோ சாப்பிடுகின்றான் என்று என் மீது உங்களுக்கு பரிதாபம்! நாங்கள் சயனைட் நஞ்சைக் கூட அப்படித் தான் சுவைத்துத் தின்போம்! சாவுக்கு அஞ்சினால் தானே பகை கண்டு அச்சம் வரும்? என் விழிகளில் அவனுக்கு மிரட்சி தெரியவில்லை புரட்சி அனல் வீசியிருக்கின்றது என் முகத்தில் அவன் ஒரு அப்பாவியை பார்க்கவில்லை! என் அப்பாவை பார்த்திருக்கின்றான்! ஈழ மண்ணில் முளைக்கும் புல்லும் அவனுக்கு புலியாய் தெரியும் வன்னிக் காட்சியும் வன்னிக் காட்டில் மலரும் காந்தள் பூக்களும் அவனுக்கு புதர்களிலிருந்து நீளும் புலிகளின் நாக்குகளாய் தெரியும் புலிகளுக்கு பிறந்த குட்டிப்புலியை அவனால் எப்படி குழந்தையாய் பார்க்க முடியும்? பனிக்குடத்தில் புரளும் பிஞ்சுக்கும் அஞ்சி கர்ப்பி...

வார்த்தைகள் தேவையில்லை என்னவனே……

Image
என்னவன் அருகில் குழந்தையாய் ஆயிரம் கேள்வி கேட்டு பதிலிற்காக நச்சரிப்பேன்……. உனக்கு ஏன்? எதற்கு? எவ்வளவு என்னை பிடிக்கும் ?- என்று கேட்டு தினம் ஆழிச்சாட்டியம் பண்ணுவதில்...... அன்பை கைகளால் காட்டும் படி பிடிவாதம் பிடிப்பதில்…. – என்னில் அன்பில்லையா உனக்கு? - என்று அதட்டுவதில்– எனக்குள் எல்லையற்ற ஆனந்தம்…. அதிகம் பேசியறியாத – என்னவன் மழுப்புவான் அல்லது சிரித்தே நழுவிவிடுவான் - அதை இரசிப்பதை விடவும் இன்பம் வேறில்லை எனக்கு… என் இறுதி கணங்களில் மருந்திற்கு முகஞ்சுழிக்கும் போதான அவன் தடுமாற்றங்களும் மாபெரும் வைத்தியனவன் - எனக்கு ஊசியேற்றும் போதான விரல் நடுக்கங்களும் என் கண்கள் சொருகும் போது கலங்குகின்ற அவன் கண்களும் - என் வலிகளின் போதான அவன் திடுக்கிடல்களும் - நான் கண் விழிக்கும் போது தெரிகின்ற அவன் கன்னத்து தாடியும் என் பல வினாக்களுக்கு பதிலாகின்றன…. தடுமாற்றமாய்… நரம்பின் நடுக்கமாய் கண்ணீராய்… திடுக்கிடலாய்…. உடல் மொழியென சகலமுமாய் நானிருக்கும் போது – வார்த்தைகள் தேவையில்லை என்னவனே……

மீராவின் அன்புக் கண்ணனாக….

Image
முன் தினங்களின் ஆர்ப்பாட்டங்கள் - அப்பா வாரியிறைத்திருந்த பல ஆயிரங்கள் - அம்மாவின் ஆயத்தங்கள் கூடவே அறிவுரைகள் ஆயாவின் சமையல் வாசனை எதுவும் பிடிக்காமல் அறையில் அமர்ந்திருந்தேன் என்னவன் பற்றிய கற்பனைகளோடு… அதிகாலையின் தூக்கத்திலேயே அம்மாவின் முன்நெற்றி முத்தங்களுடன் செல்லமாக எழுப்பப்பட்டிருந்தேன். மஞ்சள் குளித்து நீர் சொட்ட வந்த போது பட்டுப்புடைவையும் பரம்பரை நகைகளும் இறைந்திருந்தன – என் கட்டிலில்…. மருதாணி இட்ட கைகளில் நிறைந்த வளையல்கள் சிவப்பு மூக்குத்தி கூர்த் திலகம் புடைவையின் பாரத்துடன் கூடவே வெட்கத்துடன் தலை குனிந்திருந்தேன் அண்ணாவின் செல்ல அதட்டல்களும் தம்பியின் சீண்டல்களும் நண்பிகளின் எள்ளல்களும்…. நண்பன்களின் நக்கல்களும்… இன்று தான் என்னுள் ஆன நாணங்களை நானே கண்டுகொண்டேன் அப்பா கூடத்திற்கழைத்த போது குனிந்த தலை நிமிராது துடுக்காய் சற்றே கடைக்கண்ணால் பார்த்தேன்.. என்னவனாய் அமர்ந்திருந்தான் - ஆறடி உயரத்தில் அருவா மீசையுடன் வெள்ளை வேட்டியில் - என் இனிய ஆருயிர் நண்பன்… இதுவரையான நட்பு பார்வை மாறி கண்ணிறைந்த காதலுடன்…. மீராவின் அன்பு...

மாடி வீட்டு நாயும் ஒரு தெரு நாயும்.....

Image
தெருவழியே ஒரு தெரு நாய் சென்று கொண்டிருந்ததாம். அந்த வழியிலே இருந்த மாடி வீட்டு நாயை கண்டதாம். அந்த வீட்டு நாய் அன்று தான் வீட்டுக்கதவை முதன் முதல் தாண்டி படலையடியில் உலா வந்து கொண்டிருந்ததாம். அந்த தெரு நாயும் படலையடியில் வந்து சிநேகமாய் சிரித்தது. சாறிங்க குரைத்தது. வீட்டு நாயும் பதிலுக்கு சிநேகமாய் குரைத்தது. தெரு நாய்க்கு ஏகப்பட்ட குஷி. லயிட்டா ஒட்டிக்கொள்ள நினைத்தது. தீடீரென எங்கிருந்தோ இதை கண்டுவிட்ட வீட்டு நாயின் சகோதர நாயும், நண்பன் நாயும் தங்கள் வீட்டு பெண் நாயுடன் நாய் மொழில் பேசிக்கொண்டன. “இந்த தெரு நாய் எங்கிருந்து வந்ததோ… பார் உடபெல்லாம் சொறியாக இருக்கிறது. பல தடவை இந்த நாயை பல தெருநாய்களுடன் கண்டிருக்கின்றோம்” என்று எச்சரிக்கை செய்தன. வீட்டு நாயும் அத்துடன் சிநேகமாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டது. விட்டதா இந்த தெரு நாய்….? கீழிருந்தே பல முறை குரைத்து பார்த்தது. நான் எந்த நாயையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை… மற்ற நாய்களை பார் அவை தான் அப்படி…. எனக்கு பின்னுக்கு எத்தனை பெண் நாய்கள் திரிகின்றன என்று பிதற்றியது. தன் ஜம்பங்களை சொல்லி (கவிதையாக) ஊளையிட்டு பார்த்த...

தேவதைகள் அதிகம் வாழ்வதில்லை

Image
இறைவா என் கவியால் ஓர் மடல் உனக்கு பொன் தந்தாய் பொருள் தந்தாய் - அன்பு குடும்பம் தந்தாய் நண்பர் ஆயிரம் தந்தாய் - நல் சுற்றமும் தந்தாய் நன்றி மூளையில் எண் வைத்தாய் எழுத்து பதித்தாய் இசை வைத்தாய் இரசனை வைத்தாய் கூடவே ஏன் புற்றும் வைத்தாய்…? எல்லாம் வைத்து விட்டேன் இதையும் வைக்கின்றேன் என்றா? இல்லை நிறம் மாறும் சில மனிதரிலிருந்து நிரந்தரமாய் பிரித்திடவா? அந்தஸ்து தந்த நீ – ஏன் அன்பு தரவில்லை…? என்று உன்னை கேட்க நினைத்தேன்… பதிலளிக்கவா என்னை பக்கம் அழைக்கின்றாய்…? இல்லை தேவதைகள் அதிகம் வாழ்வதில்லை என்பதால் – உன் குட்டி தேவதை என்னை கூப்பிடுகின்றாயா? எழுத்தாளன் மகள் வயிற்றில் உதிக்க வைத்தாய் எழுத்தால் என்னை தாலாட்டினாய் எழுத்தாளர்களையே குருவாக்கினாய் எழுத்தையே காதலாக்கினாய் எழுத்துக்காகவே என் காலத்தினை எடுத்தாய் என் எண்ணறிவால் கட்டிய கோட்டைகளை விடவும் காகித்தில் வடித்த கவிகளே அதிகம்.. என் பிணமேட்டில் கூட பூக்களை விடவும் பேனாக்களே அதிகம் வேண்டும்… கண்ணீர் துளிகளை விடவும் பேனா மை சிந்துவதே பெருமை எனக்கு…. உன்னிடம் இறுதியாய் யான் யாசிப்பதெல்லாம் ...

(காதலில்) சில முதிர்ச்சிகள்

Image
மருத்துவ ரீதியாக பார்க்கும் போது ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் வளர்ச்சிப்படியின் ஒவ்வொரு மட்டத்திலும் சில அடைவுகளை எட்டும் போது தான் அதன் வளர்ச்சி சரியானது என கொள்ளப்படுகிறது. அல்லது அந்த நபருக்கு உடல், உள ரீதியான பாதிப்பு இருப்பதாக கணிக்கப்படும். நான் இன்று பதிவிற்காக எடுத்துக்கொண்ட விடயம் உடல்,உள ரீதியில் ஆரோக்கியமாகவும் ஆயினும் சில முதிர்ச்சிகள் அற்றவர்களாக இருப்பவர்கள் பற்றியும் அலசுவதே… ஒருவனை சமூகம் அவனது பதவி,பணம்,படிப்பு என்பவற்றை வைத்து மதிப்பு கொடுத்தாலும்அ அவனது செயல், பழக்கங்கள், பேச்சு என்பவற்றினை வைத்துத்தான் மட்டுக்கட்டுகிறது.( நம்மைக் கண்டவுடன் எழுந்து நின்று வாழ்த்துபவர்கள் மனதிற்குள்ளும் மருகக்கூடும்). இந்த மட்டுக்கட்டல்கள் நம்மை மட்டுமன்றி நமது குடும்ப கௌரவம், நமது பதவிக்கான மதிப்புகளைக்கூட பாதிப்பது மட்டுமல்ல நாம் சமூகத்திற்கு சில செய்திகளை முன்வைக்கும் போது அவை எடுபடாமல் போவதற்றும் ஏதுவாகிறது. வேறெங்கும் போகத்தேவையில்லை முகநூலிற்கு போனாலே போதும் ஒருவனுடைய தராதரத்தினை அறிவதற்கு. ஒரு லைக் பண்ணுவதை வைத்துக்கூட ஓரளவு கணிக்கலாம் யாருக்கும் யாருக்கும் கள்ளத் தொ...

Anna Karenina by Leo Tolstoy

Image
அறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா"

காதலெனும் பெயரில் சில களியாட்டங்கள்....

Image
எம் முன்னோர்களது காதல் வாழ்க்கையினை எடுத்துக் கொண்டால் மிகமிக புனிதமானதொன்றாக விளங்கியது. அவர்கள் கண்டவுடன் காதலிக்கவில்லை. நின்று நிதானித்து காதலித்தார்கள். காலமெல்லாம் காத்திருந்து கைப்பிடித்தார்கள். ஒரு வேளை அவர்கள் காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் ஒருவித புனிதத்தன்மை காணப்பட்டது. இவ்வளவிற்கும் அன்று தொலைத்தொடர்பு வசதிகள் கூட இருக்கவில்லை. இன்று பாருங்கள் “கண்டதும் காதல் கொண்டது கோலம்” என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு பெண்ணை /ஆணை காதலிப்பார்கள் துரத்தி துரத்தி வீட்டவர்களுக்கும் சில நேரம் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஆனால் முகநூலிலோ. பொதுக்கூட்டங்களிலோ பழைய நண்பிகள் , நண்பன்களை கண்டுவிட்டால் ஒரடி தள்ளியே நிற்பார்கள். தாம் நேர்மையானவர்கள், நமது உறவுகளும் நேர்மையானது என்றால், அவர்கள் தான் நம் வாழ்க்கைத்துணை என்று தீர்மானித்திருந்தோமானால் ஏன் அதை மறைக்க வேண்டும்? ஒருவனுக்கு ஒருத்தியென்றால் அதை ஏன் ஒளிக்க வேண்டும். தொலைபேசியிலும் நேரிலும் வழிகின்ற நாம் ஏன் அடுத்தவர் முன் நம்மவர்களை “சகோதரம்” என்றழைக்க வேண்டும். நமது அக்கா,தங்கை, அண்ணா, தம்பியுடன் காதல் +  காமத்துடன் தான் பழகு...

மூச்சிலும் என் வாசம் மட்டுமே....

Image
என்னவனின் மறுபக்கத்தினை கேள்விப்பட்டு… கோபம்; பின் அழுகையாயிருந்தது அதுவும் மறைமுகமாக… அடுத்தவன் சொன்ன போது தான் மரமண்டையில் ஏறியது… கேட்டதிலிருந்தே வெம்பி வெடித்திருந்தது மனம்….. எந்தப் பெண்ணால் தான் முடிந்திடும்…? நமக்கு மட்டுமேயான எம்மவர்களை பகிர…? அதுபற்றி அறிந்ததிலிருந்து ஆத்திரம் ஆற்றாமையாகியிருந்தது…. இன்று சிக்கிவிட்டான் கள்ளத்தனமாய்…. எதிர்பார்க்கவில்லை எதிரே வந்து நிற்பேனென்று… அருகில் நெருங்கி – எனக்கு மட்டுமேயான என்னவனின் உதட்டில் - அவன் பற்றவைத்திருந்த சிக்ரேட் சனியனை பறிந்தெறிந்தேன்….. பற்றியெரிதலுடன்.. – என்னவனின் உள்ளம் உதட்டில் மட்டுமல்ல மூச்சிலும் என் வாசம் மட்டுமே வேண்டும்…..

திராட்சை தோட்டத்து நரியாக…

Image
என்னவனை முத்தமிட முயன்று தோற்பதே வுhடிக்கையாகிவிட்டிருந்தது… ஒவ்வொரு முறையும் முயல்கையில் - அவன் கேசம் என்னை ஸ்பரிசிப்பதும்… மூக்கு நுனிகள் மோதிக்கொள்வதும் என் உதட்டில் - அவன் வியர்வை கரிப்பதும் என்னவனின் கன்னத்து முடி உறுத்துவதும்….. அழகான கவிதை… சில நேரம் மனம் கூட தோற்பதை தான் விரும்புகிறது.. முயலும் போது அழகாக என்னவனில் முட்டிக்கொள்ளலாம் என்பதால்….. – அவன் கூட அதனால் தான் என்னவோ முயற்சிகளுக்கு கூட சொக்கலேட்டுகளை விலை பேசியிருந்தான்…. என் தோல்விகள் கூட என்னவனுக்கு இன்ப அவஸ்தையாம்… ஆனால் அவன் ஆறடி உயரத்திற்கு எம்பி – அவன் முன்நெற்றியில் - என் இதழ் பதிப்பதென்பது அன்று வரை முயற்கொம்பாகவேயிருந்தது… எட்டி சலித்த ஒரு நாள் திராட்சை தோட்டத்து நரியாக… எனக்கு பிடிக்கவில்லை என்று ஒதுங்கிய வேளை… அவன் சற்றே வளைந்து இட்ட கன்னத்து முத்தம்…. அதன் சத்தம்…. கனவின் திடுக்கிடல்களிலும் இனிக்கிறது…

இறந்திருந்தது என்னுள் ஒளிந்திருந்த குழந்தை…

Image
உன்னிடம் மட்டும் தான் அழ பிடிக்கிறது… உன்னுடன் நடக்கும் போது மஞ்சள் கோடுகள் கூட எனக்குத் தெரிவதில்லை – நீ என்னைப் பார்த்துக்கொள்வாய்… பேரூந்தில் கூட – நீ அருகிலிருந்தால் தூக்கம் எங்கிருந்தோ தழுவிக்கொள்கிறது – உன் தோளில் சாய்ந்துறங்கலாம் என்பதால்… சந்திக்கும் போதெல்லாம் சொக்லட்டுக்காய் உன்னிடம் மட்டும் தான் இரந்து நிற்கப் பிடிக்கிறது….. வீட்டாரின் கண்டிப்பை மீறியும் கடற்கரையில் பட்டம் விட உன்னிடம் தான் கெஞ்ச முடிகிறது.. உன்னுடன் மட்டும் ஊர் சுற்றுவது பிடிக்கிறது – நீ விடுதி வரை வருவாய் என்பதால்…. சண்டைகள் கூட தினம் உன்னிடம் போடாவிட்டால் சாப்பாடு சமிபாடடைவதுமில்லை நீ கன்னத்தில் தட்டிவிட்டால் மட்டும் கலங்கித் தொலைகிறது கண்கள் ஏதோ உன்னருகில் மட்டும் குழந்தையாகிவிடுகிறது என் மனம்…. ஆனாலும்;;;; என்று என்னை ஆபத்தானவள் - முன் தெரிந்திருந்தால் பழகியிருக்க மாட்டேன்…. நீ குழந்தையுமல்ல என்றாயோ… அந்த நொடியே இறந்திருந்தது – என்னுள் ஒளிந்திருந்த குழந்தை… திகதி – 20.04.2013 நேரம் - 12.55

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்