எத்தனை நடிகர்கர்கள் வந்தாலும் இந்த சூர்யா இருக்காரே அவரோட அழகுக்கு யாருமே வரமுடியாதுங்க…. அழகெண்டா அப்படியொரு அழகு… பெண்களே பொறாமைப்படுகின்றளவுக்கு அழகு….கைகொள்ளா முடி.. சிவந்த உதடுகள், கொஞ்சமாக இருக்கின்ற தாடி, சிக்ஸ் பக்ஸ்.. ஐயோ……….அந்தக் கண்கள் இருக்கே அப்படியொரு காந்தக்கண்கள் ம்ம்ம்ம்……….பார்த்ததுமே பத்திக்கொள்ளும் கண்கள்….வாவ் என்னா அழகு
பொதுவாகவே எனக்கு சூர்யா என்றால் ரொ..ம்….ம்ம்ம…ப பிடிக்குமுங்க. (வீட்டில சூர்யா படம் ஒட்டி வச்சதும் அத பார்த்து அம்மம்மா யாரோ பொடியன்ட படம் என்டு கிழிச்சு எறிந்ததும் தனிக் கத) அதிலயும் கௌதம் மேனனின் “காக்க காக்க “ பார்த்தில இருந்து சூர்யா என்றோலே ஒரு பைத்தியம்.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்குது இந்த காக்க காக்க “அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்” கரெக்டர் இருக்குதே அப்படியே எனக்கு வரப்போகிறவர் பற்றி எனக்குள்ள கற்பனையை கௌதம்மேனன் கண்டுகொண்டு உருவாக்கியது போல் தான் அமைந்திருந்தது.
அமைதியான அதேவேளை ரிஸ்க்கான ஐ.பி.ஸ் ஆக என்கவுண்டர் செய்துகொண்டு அந்த த்ரிலிங்கான பாத்திரமேற்றுக்கொண்டு அன்பை காட்டத் தெரியாமல் ஆனால் கண்களால் ( வாவ் கண்களா அது) பேசிக்கொண்டு கூடவே மாயா (ஜோதிகா) விடம் “ ப்ரண்டெண்;டா? ” என்று பொறாமைக் கேள்விகள் கேட்டுக்கொண்டு வேறு பெண்களை நிமிர்ந்து கூட பார்க்காமல்.. சூப்பருங்க…அந்த பொலிஸ் உடையும் கம்பீர நடையும்…. அடடடடா… ஜோதிகா ரொம்ப குடுத்து வச்சவ தான்.. எனக்கு “ஜோ” வோட கொஞ்சம் “ஜே“ இருக்குது… நமக்கும் அப்ளிக்கேஷன் போடுதுகள் பாருங்க கொஞ்சமாவது சூர்யா மாதிரி இருக்க வேணாம்.. அட்லீட்ஸ் மாதவன்…எல்லாமே வடிவேல் மாதிரியே இருக்குதுகள்… (ஸ்கூல்ல நான் கொஞ்சம் (????) குண்டாயிருக்கன் என்று “ஜோ” என்று தான் கூப்பிடுவார்கள். இப்ப கொஞ்சம் இளைச்சிட்டதால் யூனிவ சிட்டியில் ஹன்சிக்காவாம்…அதவிடுங்க ….என்ன கொஞ்சம் வயசு இடிச்சிட்டு இல்லாட்டி சூர்யாக்கு அப்ளிகேசன் போட்டிருக்கலாம்….Now i am just in 24)
அட இந்தப் பதிவுக்கான கரணம் சொல்ல மறந்துட்டனே.. வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்று நண்பனிடம் கூறிய போது கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “அவர் ஸ்மார்ட்டா இருப்பாரா?” என்டு அதற்கு தாங்க இந்த பதில்… இரசிப்பதெல்லாம் வாழ்கையாகிட முடியாது. திருமணம் என்பது வாழ்வதற்காக சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சடங்கு. ஆயிரங்காலத்துப் பயிர் இதுக்கு அழகு எதற்கு? ஸ்மார்ட் எதுக்கு? ஒரு பொண்ணுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டியவை மூன்று விடயங்கள் தான்.
• அன்பு
• பாதுகாப்பு
• புரிந்துகொள்ளல்
இதை பெண்கள் உணர்ந்து கொள்வது மிக முக்கியம். அதே போல் ஆண்களும் தன் மனைவியிடமிருந்து
• அரவணைப்பு
• பண்பு
• அணுசரனை
என்பவற்றை மட்டும் கொண்டவளாக தெரிவுசெய்யும் போது வாழ்க்கை நிச்சயம் சிறக்கும்.
அழகு. ஸ்மாட் எல்லாம் பார்த்து என்ன படமா எடுக்க போகின்றோம். இது வாழ்க்கைங்க… பெற்றோரை இறைவன் தீர்மானிக்கின்றார். நமது துணைகளையும் நண்பர்களையும் நாம் தீர்மானிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மிஸ் பண்ணிடாதீர்கள்
keshani edmund. unga manasula ulla visiyangala appadiye sollti endla wera kadayonna solrigala? waalkaikku alagu mukkiyam oru ourwarukku alagu owworuvitham. so alagum mukkiyam. adanaalataane niga thalai mudi wetturinga alagusaadanagal payanpaduththurinag. ippa mokka poduringala?? hih hi. unga siz ku suriya wenma?? hih
ReplyDeleteithathana suththi valaichchu mukka thodura enrathu...
ReplyDeleteஹாஹாஹா...
ReplyDeleteAnnbe Sivam... Ellam Avaan Seyal.. Anbey Eruthi Vaarai
ReplyDelete