Posts

Showing posts from April, 2013

சில சில உறவுகள் பிரிவதேன்?

Image
பொதுவாக உறவுகள் பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. புரிந்துணர்வு இன்மை, வீண் வரட்டு கௌரவங்கள், சந்தேகங்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நம்மைத் துரத்தி துரத்தி வந்தவர்கள் திடீரென விலகுவதற்கு ஒரு சில காரணங்களே இருக்க கூடும். •    நம்மை விட ஏதோவொரு வகையில் சிறந்தவர்கள் கிடைத்திருக்க கூடும். இது உடல் தேவைகள், பணம், பதவி என நீளும். ஆனால் நிச்சயம் மனதாக இருக்க முடியாது நாம் ஒருவருடைய மனதை மட்டுமே நேசித்தவர்கள் எனின் நிச்சயம் அவர்களை விட்டு விலகிட முடியாது. •    தாழ்வு மனப்பான்மை கூட சில வேளை ஒருவர் எம்மை விட்டுப் பிரிந்துசெல்ல ஏதுவாகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த மனப்பாங்கு உண்டு தாம் எவ்வளவு தான் ஒரு பெண்ணை நேசித்தாலும் அவள் தன்னை விட ஏதோவொரு வகையில் உயர்வாயிருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பிறர் அவளைப் பற்றி பேசும் போதோ அல்லது புகழும் போதோ ஏற்படும் இந்த மனோபாவம் அந்தப் பெண்ணிடம் சிறு சிறு விடயங்களுக்கு கூட எரிந்து விழுவதில் தொடங்கி இன்னொருவருடன் இணைத்து பேசுவது வரை வக்கிரமாக தொடரும். ஒரு சிலரால் மட்டுமே தங்களவர்களை தட்டிக்கொடுத்து...

நான்கு கட்டங்கள்

Image
அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் பங்குபற்றிய வேளை அறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களில் மிகமுக்கியமானவற்றினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன் பல உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்க்கையினை வேறுபடுத்திக்காட்டுவது “பகுத்தறிவு” என்பதே. “பகுத்தறிவு"; என்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டும் கூட சிலவேளைகளில் நமது வாழ்க்கையின் தெரிவுகளை சரியாக தெரிவு செய்வதற்கு தவறிவிடுகின்றோம். இதன் விளைவால் பாதை மாறியும் சென்றுவிடுகின்றோம். நமது வாழ்க்கையில் இவ்வாறு நாம் தெரிவுசெய்து கொள்ள வேண்டியவை மற்றுமு; அவற்றினை தெரிவுசெய்து கொள்ளவேண்டிய தருணங்கள் பல. ஆயினும் மிக மிக முக்கியமாக தெரிவுசெய்ய வேண்டியவை 4 என சாதித்தவர்களின் வாழ்க்கை எமக்குத் தெரிவிக்கின்றது •    நல்ல நண்பர்கள் •    தொழில் •    நல்ல வாழ்க்கைத்துணை •    பெற்றோர் அல்லது பிள்ளைகள் நல்ல நண்பர்கள் குழந்தைப் பருவத்தினை கடந்து அடுத்து நாம் காலடி வைக்கும் பருவம்; மாணவப்பருவம். எமது ...

குழந்தையும் குருவாகின்றான்

Image
என்னவனுடன் சண்டையிட்டு வார்த்தைகள் சிதறி பின் மௌனமாக அழுதுகொண்டிருந்தேன்…. மூடிய முகத்தில் மெல்லிய மூச்சு ஸ்பரிசிக்க நிமிர்ந்து பார்த்தேன் - என் சின்னவன்… கையில் ஓவியத்துடன் நின்றிருந்தான் கண்ணிரூடே அணைத்து உச்சிமோர்ந்து என்னடா கண்ணா..? என்றேன் சற்றே கேவலுடன் அவன் தன் சிறு கிறுக்கலை என் முன் காட்டினான் அதில் குச்சியுருவமாய் சற்றே உயரமாக என்னவனாம் குடும்பி வைத்த உருவமாய் நானாம்.. இருவர் நடுவிலும் குட்டியுருவமாய் தானாம்… - அவன் மழலையில் சொல்ல ஓவியத்தை உற்றுப் பார்த்தேன் மூவரின் கைகளும் பின்னியிருந்தது – அந்த கிறுக்கலில் ஏதோவொன்று உறுத்த என்னவனை அழைபேசியில் அழைத்தேன் மன்னிப்பு கேட்க…..

விதி போலும்….

Image
தொடர்ந்தவன் தொலை தூரம் சென்ற போது தான் மனதையே தொட்டது ஏதோவொன்று ….. துரத்தியவன் தூர விலகிய போது தான் - என் காதலே எனக்கு வலித்தது… புரியாத பிரியம் பிரியும் போது தான் புரிந்தது…. மீராவின் காதல் கவிதையிலேயே கருவாகி கருகிட வேண்டுமென்பது விதி போலும்….

ஆணழகனடா நீ

Image
இதுவரை உன்னை – நான் நிமிர்ந்து பார்த்ததில்லை – என் பெண்மைக்கான நாணமும் விட்டதில்லை…. வீதியில் உன்னை இன்னொருத்தி பார்த்த போது தான் நானும் பார்த்தேன் கடைக்கண்ணால்…. ஆறடி உயரம் அகன்ற தோள் அடர்ந்த கேசம் கூர் நாசி குழிவிழும் கன்னங்கள் – அதை மூடிய தாடி…. ஆணழகனடா  நீ…. இப்போது தான் புரிகிறது வீதியே ஏன் எம்மை பார்க்கின்றதென்று….. நிச்சயம் எரிந்திருக்கும் பல வயிறுகள் - நம் பொருத்தம் பார்த்து… சற்றே நெருங்கி கைகோர்த்து சரணாகின்றேன் என்னவனிடம்…

“குலமும் குணமும்”

Image
எனக்கொரு உற்ற நண்பனிருக்கின்றான். எனது குடும்ப நண்பனும் கூட. சமூகத்தில் பொறுப்பானதொரு பதவியிலிருப்பவர். நல்லதொரு ஓவியன். நாமிருவரும் அநேகமாக பல விடயங்கள் பற்றி பேசி விவாதித்துக் கொள்வோம். அரசியல் அறிவில் எனக்கு குருவும் கூட. அரசியல், கலை , இசை பற்றி இருவருக்கும் பல ஒன்றுபட்ட எண்ணங்கள் உண்டென்றாலும் எனக்கு பிடிக்காத ஒரு விடயம் அவரது “சதி வெறி” இது தொடர்பில் நாமிருவரும் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த சித்திரை புத்தாண்டன்று நடந்த ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள் வேண்டும். எனக்கு கவிஞர் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்த கவிஞருக்கும் ஓவியருக்கும் என்ன பிரச்சினை எனக்குத் தெரியாது (தனிப்பட்ட முறையில் ஏதுமுண்டோ???) அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் பேசி ஒரே மோதிக்கொள்வதுண்டு. நேரடியாகவல்ல இவர்களிருவரினதும் வீரமும்  என்னிடம் தான். (இருதலைக் கொள்ளி எறும்பு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது தான் புரிகிறது அந்த எறும்பின் அவதி எப்படியிருக்குமென்று). ஆரம்பத்திலிருந்தே என் ஓவிய நண்பனுக்கு அவர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. “எல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னொன்றை கண்டவுடன் எல்லாம் போய்விடு...

கூண்டுக்கிளி.....

Image
பஞ்சவர்ண கிளி எனக்கு பட்டு மெத்தை பால் பழம் பகட்டான வாழ்க்கை - கூடவே தங்கத்திலான கூண்டு சுதந்திரம் வேண்டி சிறகடித்து ஆர்ப்பரித்தால் என் கால் விரல் நுனிகள் கட்டப்பட்டு - கூண்டுக் கதவுகள் திறக்கப்படுகின்றன – ஆனால் எல்லைகள் அவர்களாலேயே தீர்மானிக்கப்டுகின்றன…. இந்தக் கூண்டுக்கிளியையும் - ஓர் கிளி சுற்றி வட்டமிட்டு நேசித்தது – என் மழலைக்காகவல்ல – என் தங்கக்கூண்டிற்காக…. தங்கள் வீட்டு செல்லக்கிளியை மதம்,ஜாதி,குலம் அறியாமல் கொடுத்து விடுவார்களா? பஞ்சவர்ண கிளியும் தங்க கூண்டும் தான் கிடைக்கவி;ல்லை பச்சைக்கிளியும் வெள்ளிக்கூண்டும் போதும் என நினைத்து – ஆண்கிளி பார்த்திருக்கும் போதே பறந்து போனது வலிக்க வலிக்க – என் சிறகுகள் வெட்டப்பட்டன… முன்னைய வாழ்க்கையே இனிப்பாக தோன்றியது “காலம் கடந்த ஞானம்” – ஒரு வகையில் பறப்பதை விடவும் சிறையில் இருப்பது பிடிக்கிறது…. பாசமில்லாவிட்டாலும் பாதுகாப்பு கிடைக்கிறதே…. இப்போதெல்லாம் என்னை இடம்மாற்றுவது பற்றி கலந்தாலோசிக்கின்றார்கள் சற்று விசாலமான வைரக்கூண்டாம்… பேரம் பேசப்பட்டுவிட்டது வாங்கப் போகிறவனின் பதவி பட்டற...

ஏன் விலகுகிறாய்?

Image
விலகி விலகி ஓடும் போது துரத்திய நீ – ஏன் இன்று விலகுகின்றாய் என்பது – என் மரமண்டைக்கு புரியவில்லை… நான் செய்தது பிழையென்றால் என் பதவியை விட்டும் உனக்காக உன் நண்பன் காலில் விழ கூட நான் தயார்…. ஒரு வேளை உன்னிடம் பேசியது தான் பிழையென்றால் உன்னிடம் ஒரு கேள்வி…..? என்னைப் பேச உனக்கு முழு உரிமையுண்டு – என் நண்பன் என்றாலும் அவன் அடுத்தவள் கணவன் அவனை பற்றி பேச உனக்கு என்ன உரிமையுண்டு? உன் நண்பனின் கோபங்களை ஏற்கின்றாய் - ஏன் என்னிடம் மட்டும் அழுகின்றாய் என்று கேட்டாய்… இன்னொருத்திக்கான தோள் மேல் நான் எப்படி சாய முடியும்? – உன் தோளில் தான் என் சுமைகள் சுகமாகின்றன…… உன் தமையன்கள் உனக்கு நல்ல நண்பர்கள் என்றாய் - அதுவே முகநூலில் “அம்மு” என்றால் பிழையாக புரிவார்கள் என்கிறாய்…. கேள்வி கேட்டால் கோபப்படுகிறாய் ஏன் உன்னை விடவும் -நான் உன் குடும்பத்தினை நேசிப்பது உனக்குப் புரியவில்லை……? உன் ஆயிரம் நண்பிகள் பற்றி பேசுகின்றாயே – ஏன் என் ஒரே நண்பனை பற்றி பேசிவிட்டால் மூஞ்சை சுருக்கிக் கொள்கின்றாய்? மனம் என்பதும் உணர்வுகள் என்பதும் இருவருக்கும் பொதுவல்லவா….. ...

ஆண் - பெண் நட்பு

Image
எனது முன் பதிவானது “ புரிதலும் பிரிதலும் ” என்ற பதிவில் என் நண்பனின் நட்பை நியாயப்படுத்தியிருந்தேன். இது தொடர்பில் என் முகநூல் நண்பி ஒருவர் “உங்கள் காதலருக்கோ/கணவனுக்கோ பெண் ஒருவருடன் நட்பு இருந்தால் உங்கள் கருத்து என்ன?” என்று வினவி அதை அடுத்த பதிவாக எழுதும் படியும் கேட்டிருந்தார். நல்லதொரு வினா: நான் இந்த வினாவிற்கான பதிலை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய வயதில் தான் இருக்கின்றேன். (இதற்காக எனக்கு திருமணமாகிவிட்டது / காதல் உண்டு என்று நினைத்து கடலை போடுவதை நிறுத்தி விடாதீர்கள்) உளவியல் ரீதியாக ஒரு ஆணோ, பெண்ணோ பாலர் பருவத்தில் எதிர்பாலாரின் கவனத்தினை தம்மிடம் திருப்ப முயற்சிப்பது முதல் பருவவயதில் பெண்ணாயின் தந்தையிடமும், ஆணாயின் அம்மாவிடமும் மற்றும் பாடசாலைப் பருவத்தில் எதிர்பாலானவரிடமான ஈர்ப்பு வரை எதிர்பால் கவர்ச்சி இருப்பது தான் சாதாரண மனித இயல்பென்றும் இல்லாதுவிடின் அது அதாதாரண நிலை ( Disorder ) என்றும்  சொல்லப்படுகின்றது. அத்துடன் என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊடகவியல் மற்றும் பொறியியல் துறையில் இருக்கின்றேன். நிச்சயம் ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களையும், அது போல் ஓர் ஆண் இரு...

புரிதலும் பிரிதலும்

Image
எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன். உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை.  எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூக...

சுஜாதாவின் “பிரிவோம்… சந்திப்போம்” பற்றிய அலசல்....

Image
இந்தியாவில் திருநெல்வேலியில் வேலையற்ற பொறியியல் பட்டதாரியான இளைஞன் ரகுபதியின் கனவுகளை அடுக்குவதுடன் ஆரம்பமாகின்றது “பிரிவோம்… சந்திப்போம்….”. ஓர் கிராமத்து இளைஞன் அவனது எல்லையற்ற சிறு சிறு கனவுகள்… தான் வேலையற்று இருப்பதால் தனது அப்பாவின் செலவில் புகைப்பிடிப்பதை கூட 100 பரிசீலித்து கடையில் வாங்குவது என பக்குவமான ,கம்பீரமான ரகுபதி முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றான். அடுத்தடுத்து மனைவியை இழந்து ஒரே மகனுடன் தனித்துவிடப்பட்ட நிலையில் தன்னைப் போலவே தன் மகனையும் பொறியியலாளருக்கு படிக்க வைத்து, அவனையும் வேலையிலமர்த்திப் பார்க்கும் இலட்சியத்துடன் ரகுபதியின் அப்பா கோவிந்தராஜன். பத்தொன்பது வயதிலும் குழந்தைத்தனம் மாறாது தம்பியுடன் செல்லச் சண்டைகள் போட்டுக்கொண்டு செல்வச் செழிப்புடன் வலம் வருகின்ற மதுமிதா என்கின்ற அழகுப் பெண். கணவன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வயிற்றைக் கழுவி, தன் குழந்தையின் கொஞ்சல்களில் கூட தன் கணவனைக் காண்பதாக சொல்வது முதல் மாறி மாறி கஷ்டங்களை கூறி பொருட்களை யாசிப்பது வரை சராசரி கீழ்மட்ட குடும்பப் பெண் ஜெயந்தி என முக்...