சந்தேகம் எனும் நோய்…..
இன்று உளவியல் தொடர்பானதொரு விடயத்தினை தொட்டுச்செல்ல நினைக்கின்றேன். வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ஒன்று. ஏன் நாம் பிறந்தது இந்தத் தாய்க்குத் தான் என்பது கூட நம்பிக்கையில் தான் தொடங்குகின்றது. அந்த நம்பிக்கை தான் இவர் என் தந்தை என்பது தொடங்கி அனைத்திலும் தொடர்கின்றது. அதற்காக “இவரை அவ்வளவு நம்பினன் ஏமாற்றிவிட்டார்” என்று யாராவது சொன்னால் அவர்களது மண்டையில் 100 தடவை குட்டவேண்டும். நம்பிக்கை என்பதும் மண்குதிரையை நம்பி மோசம் போறதும் வேறு விடயங்கள். ஓகே நம்மோட சப்டருக்கு போவம். பொதுவாக இந்த நம்பிக்கை என்ற விடயம் இன்று காதலர்கள், தம்பதியர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியே கூற விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறு விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்பதை நான் கூறுவதே என் வயதிற்கு பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உறவுகளிடையே நம்பிக்கையிழந்து சந்தேகம் தோன்றுவதற்கு சில விடங்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர். • உறவுகளிடையேயான தாழ்வுணர்ச்சி •...