Posts

Showing posts from 2012

உன் முதல் குழந்தை

Image
என்னைப் பார்த்த அன்றே கூறினாய் - என் முகம் போன்றே மனமும் குழந்தையென்று.. தினமும் அழ வைத்தே வேடிக்கை பார்ப்பாய் - என் குழந்தை சிணுங்கல்களை… அதிகாலை அழைப்புக்களில் - இரசித்திருக்கின்றாய் என் உறக்கத்தின் மழலை உளறல்களை… என் பிடிவாதங்களில் கூட குழந்தைதனமிருப்பதாக சாடியிருக்கின்றார் - உன் முதல் குழந்தையும் நானென சத்தியம் செய்திருக்கின்றாய் நீ என்னை குழந்தையாகவே நடத்துவதால் பல தடவைகள் ஊடல் கொண்டிருக்கின்றேன் உன்னிடம்… இன்று அதை காலம் கடந்த பின் ஒப்புக்கொள்கின்றேன் - தாயின் காலைச் சுற்றும் குழந்தையாய் - நீ இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்ட பின்பும் உன்னையே – என் நினைவுகள் சுற்றி – உன் ஞாபகங்களுடனேயே வாழ – என் மழலை மனம் அடம்பிடிப்பதால்….

எங்கே வைத்துவிட்டேன்..

Image
அதிகாலையில் கண் திறவாமல் தலையணையின் கீழ் - நான் தேடும் அது….- என் கனவுலகின் ஆதாரம் - என் சோகங்களின் வடிகால் - அதை எங்கே வைத்து விட்டேன்? என் பருவகாலத்து பொக்கிஷம் என் மனதின் முதற் சித்திரம் -என் இராக் கனவின் மூலதனம் - அதை எங்கே வைத்துவிட்டேன்? புத்தக அடுக்குகளை புரட்டியாகிவிட்டது தலையணைகளை தட்டியாகிவிட்டது உடைகளை உதறிப்பார்த்தாகிவிட்டது குப்பைக் கூடையைக் கூட கொட்டிப்பார்த்தாகிவிட்டது எங்கேயது…..? – என்னளவிலான மனித தேடல் முடிவுபெற இறை நேர்த்தியும் வைத்தாகிவிட்டது தேடுகிறேன்… தேடுகிறேன்…. உள்ளுணர்வு ஏதோ சொல்ல – என் நாட்குறிப்பைத் திருப்புகின்றேன் - இதோ கிடைத்துவிட்டது என்னவனின் புகைப்படம்….

“சீனியோரிட்டி” (seniority) என்றால் என்னங்க?

Image
நாம் வேலை செய்யும் இடங்களில் வயதில் மூத்தவர்கள் அல்லது அதிக ஆண்டுகள் பணிபுரிபவர்கள் சில இளசுகளை மட்டந்தட்டுவதைப் பற்றி எனது இந்த வலைப்பூவில் பதியவுள்ளேன். பொதுவாக ஒரு குடும்பத்தினை எடுத்தக்கொண்டால் வயதில் மூத்தவர்கள் பிழை செய்யும் சிறியவர்களை தண்டிப்பதும் அன்பால் திருத்துவதும் உண்டு. அவை ஒவ்வொன்றும் “தொற்றுநோய்களுக்கு முன்னரான அம்மாவின் கைமருந்து” போன்று மூத்தவர்களிடமிருந்து இளையவர்களுக்கு கிடைப்பதான அனுபவ பகிர்வுகள். ஏன் வாழ்க்கையிலும் அத்தகையவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.; இளையவள் நான் அந்த நிமிடம் கோபப்பட்டாலும் முரண்டு பிடித்தாலும் காலம் கடந்து இன்றும் யோசிக்கும் போது அம் மூத்தவர்கள் எடுத்துக்கொண்ட உரிமைகள் அவர்களது கண்டிப்புக்கள் தங்களை எந்தளவு என்னை செதுக்கியுள்ளதென்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இன்று அலுவலகத்தில் பணிபுரியும் போது எனக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் என்னை செதுக்கும் உளிகளல்ல பாதத்தினை பதம் பார்க்கும் விஷ முட்கள் என உணர்கின்றேன். அலுவலகம் என்று வரும் போது ஏன் இளையவர்களை மட்டந்தட்டுகின்றோம்? எவ்வளவுதான் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் யாருமே எல்ல...

தொலைத்து விட்டேன்...

Image
எத்தனை கைக்குட்டைகளை தொலைத்திருப்பேன் எத்தனை சவரன் நகைகளை தொலைத்திருப்பேன் - ஏன் எத்தனை எத்தனையோ ஆயிரம் ரூபா தாள்களைக் கூட தொலைத்திருக்கின்றேன் - அப்போதெல்லாம் அம்மாவின் கடுஞ்சொற்களை விட எதுவும் வலித்ததில்லை இன்று உன் கரம்பட்ட பத்து ரூபா தாளை தொலைத்துவிட்டேன் வழிகளிலெல்லாம் அலைகின்றன – என் விழிகள் வலியுடன் மீண்டும் கிடைக்கவில்லை – அது உன்னைப்போல் என் வாழ்வில் எவ்வளவோ முயற்சித்தும்.... இப்போதெல்லாம் - உன் நினைவுகளைப் போலவே என்னிலிருந்து தொலைகின்றன – நம் (காதல்) சின்னங்களும்

ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

Image
அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது. ரகசியத்தை சொல் கிளியே இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார். இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு...

கடவுள் ஏன் சிலையானான்.....?

Image
இன்றைய நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது. கடற்கரை, கடைகள், பூங்காக்கள் என சுற்றி வருகின்ற இளந்தலைமுறையினர் வழிபாட்டுத்தலங்களை நினைத்துப்பார்ப்பது சமயவிழா நாட்களில் மட்டுமே. அதுவும் தமது புதிய உடைகளை காட்டுவதற்காகவோ அல்லது வீட்டிலிருக்கும் முதியோர்களின் நச்சரிப்புகளை தாங்கமுடியாமையினாலோ மட்டுமே. எவ்வாறாயினும் இன்று இறைவழிபாடென்பது அரிதாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் அதிகாலை எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை இறைவனுக்கும் இறைவழிபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ இருந்திருக்கின்றது. அதிலும் முன்னைய காலங்களில் சிலை வழிபாடென்பது முக்கியமானதொன்றாக காணப்பட்டது. சிலைகள் செய்வதற்கான கல்லினை தேர்ந்தெடுப்பது முதல் அவற்றினை சிற்பங்களாக வடிப்பது வரை சாஸ்திரங்களை பின்பற்றியதுடன் அவற்றிற்கான வழிபாட்டு முறைகளுக்கும் கூட பலவித அபிஷேக முறைகளையும் ஐதீகங்களையும் வகுத்திருந்தனர். இவற்றை உருவாக்குவதை பிரதானப்படுத்தி இனங்கள் .தொழில்கள் என்பனவும் பாகுபடுத்தப்பட்டன. இதனைய...

புலிகளின் வதை முகாமில் பெண்கள்

தமிழர்களைப் பொறுத்தவரை வீரம் என்பது மார்பில் வீரத்தழும்பு வாங்குவது. இது ஒருவர் பற்றி கதைப்பதிலும் அவர்களை விமர்சிப்பதிலும் பின்பற்றுவது தான் தமிழனுக்கு அழகு. ஒருவர் பலமின்றி இருக்கும் போதோ அல்லது அவதானமின்றி இருக்கும் போதோ அல்லது அஞ்ஞான வாசம் செய்யும் போதோ முதுகில் குத்துவதல்ல. அதேபோன்று அன்று விடுதலைப்புலிகளுடன் சேர்ந்திருந்து நன்மைகள் பெற்று நம்பிக்கைக்குறியவர்களாக இருந்துவிட்டு இன்று அவர்கள் இல்லை என்றவுடன் தமது கிறுக்கல்கள் மூலம் முதுகில் குத்துகின்ற பலர் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். எனது முகநூலில் பகிரப்பட்ட அவ்வாறான ஒரு கருத்தே இது http://padippakam.com/document/UTHR/uthcr002.pdf

Commonwealth Parliamentarians on safeguarding Democracy, the Rule of Law and HR

http://www.youtube.com/watch?v=EbGw0NJYqvA

தேவதைகளின் தீட்டுத்துணி

தேவதைகளின் தீட்டுத்துணி

கிழக்கில் உதிக்காத சூரியன்

கிழக்கில் உதிக்காத சூரியன்

(என்னை) சாதிக்க வைத்தவனே (நீ) சாதித்ததென்ன?

Image
மரணித்துவிட்ட -நம் காதலின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று...... மதமெனும் மதம் கொண்டவர்கள் மத்தியில் முதுகெழும்பில்லாமல் புறமுதுகு காட்டி ஓடியவன் நீ பெண்ணாயினும் போராடி தோற்றவள் நான் உனக்கு தெரியுமா? - நம் காதலில் மன்னித்துவிடு – என் உண்மைக்காதலில் - நான் தோற்றாலும் பேடி நீ என்னை மாற்றியிருக்கின்றாய் பல வழிகளில்....... பூவைக் கூட பறிக்க யோசிக்கும் - நான் பலருடைய மனங்களை கூட – என் வார்த்தைகளினால் புதைக்கின்றேன் கடிக்கும் ஈயைக் கூட அடிக்காதவள் - என் செயல்களினால் பலரின் உணர்வுகளைக் கூட கொல்லத்தயங்குவதில்லை மழைத்துளிக்கு ஒதுங்கும் - நான் நனைகின்றேன் அடைமழையில் - என் விழி ஈரம் யாரும் பார்த்துவிட கூடாதென்று..... என் குடும்பமே உலகம் - என்று வாழ்ந்த நான் - இன்று வெளியுலகத்தில் எனக்கென்று – ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றேன். உன்னாலான இம்மாற்றங்கள் கூட என்னை..... தைரியசாலியாக தன்னம்பிக்கை கொண்டவளாக அடுத்தவர் நிமிர்ந்து பார்ப்பவளாக செதுக்கியிருக்கிறது. ஒருவேளை உன் கரம் பற்றியிருந்தால் - ஒரு கோழைக்கு மனைவியாக வாழ்ந்திருப்பேன் கடவுள் அருள் தப்பிவி...

ஏன் என்னைப் பார்த்தான்?

Image
அலுவலக தாமதத்தினை சரிசெய்ய சன நெருசலை கூட பொருட்படுத்தாமல் - பேருந்தில் ஏறினேன் ஊர்கின்ற பேரூந்து – என் எரிச்சலை கூட்ட – என்னை இரு கண்கள் துளைப்பதனை உணந்து என் பார்வையை திருப்பினேன்... கைகொள்ளா கருமையான வாரப்பட்ட சுருள் முடி அழுத்தமான சிவந்த உதடுகள் பெண்மை நிறைந்த மான் விழிகள் - என அழகனாய் தான் இருந்தான் - அவன் விழியின் பார்வை மட்டும் - என் நெஞ்சைப் பார்ப்பதாக உணர – என்னை அறியாமல் கையால் தடவி – பின் குனிந்து பார்த்தேன் - ஏதாவது என் இளமை தெரிகிறதா? என.... நெரிசல் ஒரு புறம் - அவன் குத்தும் பார்வை ஒருபுறம் - என அவஸ்தையாயிருந்தாலும் - அவன் அருகில் போக வேண்டும் என்ற – என் பெண்மைக்குரிய ஆவல் மட்டும் அடங்கவேயில்லை.. தரிப்பிடங்களை தாண்டி குறைந்துவிட்ட சனங்களிடையே அவனை நோக்கி மெல்ல நகர்ந்தேன் - எனது அலுவலக தரிப்பிடத்தினை சமீபிக்க – என் கால்களில் கூட – புரியாத ஒருவித வேகம் அப்பாடா நெருங்கி விட்டேன் - என் இன்றைய சங்கல்ப்பம் ஈடேறப்போகிறது – அவன் கன்னங்களில் - ஒரு கிள்ளு கைகளில் - ஒரு முத்தம் எப்படியோ சாதித்துவிட்ட திருப்தியில் - பேரூந்தை விட்டிறங்க...

படித்ததில் பிடித்தது (01) - ‘துன்பத்தின் பூக்கள்’ (Fleurs du mal) – Chrles Baudelaire

Image
சார்ல்ஸ் போதலயரின் “துன்பத்தின் பூக்கள்” கவிதைத் தொகுப்பில் நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த சில வரிகள்... “அந்நியன்” என்ற இந்த வசன கவிதையில்,   சொல் மர்ம மனிதனே நீ யாரை அதிகம் விரும்புகிறாய் ? தாயை ? தந்தையை ? சகோதரியை ? சகோதரனை ? - எனக்குத் தாயுமில்லை , தந்தையுமில்லை , சகொதரியுமில்லை , சகோதரனுமில்லை . - உனது நண்பர்கள் ? - இதுவரையும் நான் அர்த்தம் அறியாத ஒரு சொல்லை உபயோகித்தல்லவா நீங்கள் பேசுகிறீர்கள் . - உனது தேசம் ? - அது இவ்வுலகில் எங்கிருக்கிறதென அறியேன் . - அழகு ? - ஓ அதுவா ,தேவதையானதும் அழிவற்றதுமான அதில் வேண்டுமானால் நான் விருப்புறுவேன் .  - தங்கம் ? - நீங்கள் கடவுளை வெறுப்பதுபோல் , நான் அதை வெறுக்கிறேன் .  - அப்படியானால் , அசாதாரண அந்நியனே , நீ எதைத்தான் விரும்புகிறாய் ?  - நான் மேகங்களை விரும்புகிறேன் . அதோ அங்கே .. இங்கேயெல்லாம்… தாண்டிச் செல்லும் மேகங்களை , அற்புதமான அந்த மேகங்களை நான்விரும்புகிறேன் . —– “ எதிரி” என்ற தலைப்புடனான கவிதையில் – ஓ ! உளஉபாதையே, உளஉபாதையே, காலம் வாழ்வை உண்கிறதே. புலப்படாத எதிரியான எ...

பிரியும் போது புரியும் பிரியம்

Image
அப்பாவிடம் சலுகைகள் பெறும் போதோ அம்மாவின் சமையலை ருசிக்கும் போதோ அண்ணாவை வீணாக கோபப்படுத்தும் போதோ தம்பியிடம் செல்லமாக சண்டையிடும் போதோ – நான் நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று...... நண்பிகளுடனான அரட்டையின் போதோ உறவினர்களுடனான கிண்டல்களின் போதோ அயலவர்களுடனான பகிர்தல்களின் போதோ – நான் நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று...... அதிகாலை குட்டித் தூக்கம் அம்மாவின் சூடான கோப்பி என் கூண்டுக்கிளிகள் செல்ல நாய்க்குட்டி தினமும் நான் எண்ணுகின்ற தோட்டத்துப் பூக்கள் மொட்டைமாடி ஊஞ்சலாட்டம் ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவல்கள்; - என நீளும் எனது விருப்பப் பட்டியல்களை – நான் நினைத்ததில்லை இழப்பேனென்று... என் குடும்பத்தவர்களின் அன்புத் தொல்லைகளையும் செல்லக்கிண்டல்களையும் பாசக்கடிகளையும் - ஏன் என் சின்ன சின்ன ஆசைகளையும் கூட சுமையாக நினைத்த நாட்களுண்டு இன்று தனிமையான - என் விடுதி வாழ்க்கையில் - இந்த சுகமான சுமைகள் மீண்டும் வராதா? என ஏங்குகின்றேன் இப்போது தான் புரிகிறது... புரியாத பிரியம் பிரியும் போது புரியும் என்று மீராபாரதி

தெருத்தூசியோனைக்கு செதுக்கிய கவிதை....

Image
Road sweeper Clean the streets in the rain Brush, lift rubbish, walk Do it all over again Switch the brain off The brush seems shackled To my hands No time to stand and admire The moving bleak picture of the rain Of the wet urban concrete landscape The dirt at the edge of the kerbs Sweep them into little bundles Manageable dirty mounds That I shovel up in the rain The rain wash the roads-edges Behind me The barrow begins to fill Fill from my graft A working graft that uses muscles No trade- craft that I've got No paper of knowledge I don't need knowledge For what I've been taught Provide for my family The best that I can Never be bitter for what The world has offered me I'm just an ordinary working man That works through the bad And the good spells of life Can you tell that I take pride in my work? The side of the road is per...

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்(01) – தெருத்தூசியோன்

Image
எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார். 'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார். கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர், 'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்...