எதை புரிதல் என்கிறாய்......?
எடுத்ததற்கெல்லாம் - என்னை புரியாதவள் நீ என்கிறாய் உன்னளவில் புரிதல் என்றால் என்ன? என்னை விட நீ முகநூலிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை முணுமுணுக்காமலிருப்பதா? உன் அருகில் நிற்கும் கணங்களில் கூட – நீ அடுத்தவளை விமர்சிப்பதை இரசிக்காமலிருப்பதா…? நீ என் அழைப்புக்களை அலட்சியப்படுத்துவதை பற்றி அலட்டாமல் இருப்பதா..? - இல்லை அடுத்தவனை என்னுடன் நீ இணைத்துப் பேசுவதை கூட பொறுக்காமல் துடிப்பதையா? எதை புரிதல் என்கின்றாய்? எனக்கு மட்டுமான உன்னை உன் அன்பை அடுத்தவர்களுடன் பகிர்வது தான் - புரிதல் என்றால்… உன்னளவில் உன்னை புரியாது – என்னளவில் உன்னை பகிராத மௌனங்களே போதும் இறுதிவரை - நம் இருவருக்கிடையான புரிதல்களுக்கு…(பகிர்தல்களுக்கு)