வினா 06:
மீரா டார்லிங் உனக்குப் பிடித்த விடயங்கள் 10 ஐ எனக்காக பட்டியலிட முடியுமா? நான் என்ன செய்தால் என்னை திரும்பிப்பார்ப்பாய்? திரும்பத்திரும்ப பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்.?
பதில் : அதெற்கென்ன இதோ அந்த பட்டியல்……..
1. காட்டூன் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் பார்ப்பது
2. புத்தகங்கள் வாசிப்பது
3. குழந்தைகள் மற்றும் குட்டி நாய்கள்
4. மழையில் நனைவது, அதற்காக வீட்டில் திட்டு வாங்குவது
5. குடும்பத்தினருக்காக சமைப்பது, அவர்கள் சாப்பிடுவதற்கு பரிமாறுவது
6. கடற்கரையில் காலார நடப்பது
7. முழு நாளும் இசை கேட்பது
8. குளிக்கும் போது சத்தமாக பாடல் பாடுவது
9. ஓவியக் கண்காட்சிகளுக்குப் போய் மணிக்கணக்கில் ஓவியநுட்பங்களை இரசிப்பது
10. பேரூந்து ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிப்பது
10 மட்டும் தான் கேட்டிருப்பதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன். உண்மையில் 1000 பிடித்தவைகள் உண்டு.
நான் திரும்பிப்பர்க்கனும் என்றால் என்னை பின்னால் இருந்து கூப்பிட வேண்டும். :P நான் திரும்பத்திரும்ப உங்களை பார்க்க வேண்டும் என்றால் கறுப்பு அல்லது கருநீல நிறத்தில் டீசேட் அணிந்து ST Dupont Paris Saint Germain for Men or Amouage Opus V for Men இந்த இரண்டு Perfume இல் ஒன்றை பாவியுங்கள் போதும்……. But எனக்கு நீங்கள் ஒருமையில் அழைப்பது மட்டும் பிடிக்கவில்லை.
வினா 07: உங்களை எப்படி அன்பாக அழைப்பது பிடிக்கும்? உங்களவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: “கண்ணம்மா” என விளிப்பது மிகவும் பிடிக்கும். அம்மா என்னை பெரும்பாலும் “ராஜாத்தி” என்று அழைப்பார் அது மிகப்பிடிக்கும். மற்றும் படி என்னுடைய க்ரஸ்கள் லட்டு, ஹனி, டார்லிங், டியர், செல்லம் என்று அழைக்கின்றார்கள். இவைகளும் பிடிக்கும். என்னை மீரா என்றழைப்பது அனைத்தையும் விட மிக பிடிக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒருவர் என்னை “கேஷாயினி” என்று முழுபப்பெயர் சொல்லி அழைப்பதுண்டு. மின்னஞ்சலில் கூட ஆங்கிலத்தில் ஒரு எழுத்து கூட விடாமல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இது மிகமிக பிடித்திருந்தது கடந்த ஆவணி மாதம் வரை.
என்னவன் பற்றி சொல்வதென்றால்…………….? ம்ம்ம்ம்……. எனக்கு பெரிதாக ஒருவரின் உருவம் அல்லது அவரது இயக்கதிறன் சார் எதிர்பார்ப்பில்லை. மற்றப்பெண்களைப் போல் தலையில் முடியில்லை, கருப்பு அல்லது முகவெட்டில்லை என்றெல்லாம் ஒருவரை அவரது வெளித்தோற்றம் கொண்டு நேசிக்கவோ அல்லது நிராகரிக்கவோ நான் தயாரில்லை. ஆனால் ஒழுக்கம் , உணர்வுகள் சார் எதிர்பார்ப்புக்கள் நிறையவே உண்டு. முக்கியமாக மண் பற்று உள்ளவராக, உரிமைகளுக்கும் விளிம்புநிலையினருக்காகவும் குரல் கொடுப்பவராயிருக்க வேண்டும். பெண்களை மதிப்பவராகவும் பெண்கள் அவரை மதிப்பவராகவும் இருக்க வேண்டும்.
மெல்லுணர்வு என்று பார்க்கும் போது கடல், நிலவு, இசை, ஓவியங்களை இரசிப்பவன், பயணங்களை விரும்புபவன், முரட்டுத்தனங்களுடன் பாசமாயிருப்பவன், என் குடும்பத்திற்கு இன்னுமொரு மகனாயிருப்பவன்….. முக்கியமாக என்னுடைய கிறுக்கல்களை இரசிப்பவன். தவறுகளை சுட்டி காட்டுபவன். நிறைய குட்டி குட்டி சண்டைகள் போடுபவன். என்னைச் செதுக்குபவன்...... யாராவது பெண்கள் அவனது பதிவுகள் அல்லது புகைப்படத்திற்கு hearten போட்டு அதற்காக நான் சண்டை போட்டால் பொறுத்துக்கொள்பவன்.
பிற்குறிப்பு : தொடுக்கப்படுகின்ற பெரும்பாலான கேள்விகள் என்னுடைய சுயம் பற்றியதாக இருக்கின்றதை பார்க்கும் போது யாரோ ஒருவர் தான் பல்வேறு மின்னஞ்சல்களிலிருந்து கேள்விகளை கேட்கின்றீர்களோ என்றிருக்கின்றது
No comments:
Post a Comment