Posts

Showing posts from 2014

மையமும் எல்லையும்

Image
என் பிடிவாதங்கள்..... கவலைகள்..... பொறுமையின்....  எல்லைக்கோட்டின் புள்ளியில் நீ உன் வெறுப்புக்கள்.... சந்தேகங்கள்.... விரண்டாவதங்களின்...... மையப்புள்ளியாகி போகும் நான்… மையத்திற்கும் எல்லைக்குமான தூரத்தினை நகர்த்திடாமல் உன் இறுக்கங்களும்….. என் மௌனமும்......

விமர்சனம்... - என் எதிர்வினை

கடந்த 17ஆம் திகதி “பாலியல் கல்வி” http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html குறித்து பதிவொன்று இட்டிருந்தேன். இது குறித்து பலர் வெளிப்படையான கருத்துக்களை இட்டிருந்தார்கள். இன்னும் சிலர் தொலைபேசியில் இது குறித்து பல விமர்சனங்களை கொட்டியிருந்தார்கள். நேற்று முன்னணி தமிழ்ப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இன்பொக்ஸில் கீழ்க்கண்டவாறு பேசியிருந்தார். அவருக்கான ஒரு சிறு குறிப்பு ஒன்றினையும் அவர் இன்பொக்ஸில் துப்பியிருந்ததையும் பதிவிடுகின்றேன். என்ன நீர் பெண்ணியிம் பேசுறேன்..என்று பேஸ்புக்கில் கொண்டம் பற்றி எல்லாம் எழுதுகிறாய். ஏன் அதற்கு என்ன? நீர் சமூகத்தையும் தமிழ் பேசும் மக்களினதும் கலாசாரத்தை சீரழிக்கின்றாய். இதை தைரியமிருந்தால் என்ன பதிவின் கீழேயே இடலாமே.. ஏன் இன்பொக்ஸில்?     எனக்கு தைரியம் இருக்கின்றது. எனினும், உமது துணிவுக்கு மரியாதைக் கொடுத்துதான் நான் இப்படி செய்கிறேன்.   உமது பணி வரவேற்கத்தக்கது. எனினும், நீர் பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள்   ஓகோ... அங்கு இதே கேள்விய...

அது என்னவாயிருக்கும் ?

Image
  (என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை) எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கின்றது சில விடயங்கள் குறித்து பத்திரிகைளில் வரும் போது அவற்றினை ஒளிந்திருந்து வாசித்திருக்கின்றேன். என்னுடைய இரகசிய வாசிப்புகளுக்கு நான் பயன்படுத்திய இடம் என் அறையின் கதவு மூலை என்பதும் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றது. சில நேரங்களும் இவை குறித்த எண்ணிலா கேள்விகள் என்னுள் எழுவதுண்டு. அம்மாவும் அப்பாவும் பெரும்பாலும் என்னுள் வினாக்கள் எழும் நேரங்களில் அலுவலகத்தில் இருப்பார்கள். வீட்டில் எங்களை வளர்த்த அக்காவிற்கு பதிலளிக்கும் அளவுக்கு அறிவு இருக்கவில்லை அல்லது என் அளவிற்கு இறங்கி பதில் சொல்வதற்கு அவவுக்கு தெரிந்திருக்கவில்லை அல்லது அவ சொன்னது எனக்கு புரிந்திருக்கவில்லையோ என்பது என் பருவ வயது நினைவு மீட்டல்களில் எனக்குள் நானே எடுத்துக்கொண்ட தீர்மானங்கள்….  ஆனால் அந்த இரகசிய விடயங்களான செக்ஸ், ஆண் - பெண் பாலின உறுப்புக்கள், கொண்டம் (ஆணுறை) போன்ற விடயங்கள் குறித்த கேள்விகள் மட்டும் பல ஆண்டுகள் என்னுடன் பயணித்துக்கொண்டுதானிருந்தன. எல்லாரும் ஒன்றாயிருந்து படம் பார்க்கும் போது கிஸ் ...

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

Image
ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்ப கத்தின் (ETDRC) ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்தி ன் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தி னால் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம் ஸ்கொட்லாந்தில் இருந்து உலகெங்கும் சிறுவர்களின் வாழும் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசமாக புத்தகங்களை வழங்கும் புக்ஸ் எப்ரோட் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC)  ஏற்பாட்டில் ஈழத்தின் யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கும் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 83 பாடசாலைகளுக்கு சுமார் ஒருலட்சத்தி ஐம்பதினாயிரம் ஆங்கில நூல்களை கடந்தமாதம் நூல்களை வழங்கியுள்ளது. பல தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இந்த நூல்கள்  வடக்கு – கிழக்கு தமிழ்ப்பாடசாலைகளுக்கும், நூல் நிலையத்திற்கும்  சென்றடைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்னும் இந்நூல்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.  யாழ் நூலகத்திற்கு மாத்திரம் சிறுவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்காக 20,000 ஆங்கிலப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தக விந...

மீள் நிரப்புதல்...

Image
எண்ணெய் குடுவைக்குள் நீரை நிரப்பிடல் உண்டா? நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படலமாக உன் நினைவுகள்.... சரமாகும் மல்லிகைக்கு பதில் தாமரையை கோர்த்திடலாமா...? நினைவுச்சரங்களின் ஒவ்வொரு சிக்கிலும் - நம் சந்திப்புக்கள்... விஷச்சாடிக்குள் பாலூற்றிப் பருகுவதும்.. உன் கனவுளை துடைத்தெறிந்து விட்டு இன்னொருவன் நினைவை நிரப்புவதும் சாத்தியமற்றதாகியே விடுகின்றது... கவிதைகள்... கனவுகள்... நினைவுகள்... அனைத்திலும் மீள்நிரப்பிட முடிந்திடா பொருளாகியே போகின்றாய்.... – நீ என்னை (மட்டும்) விட்டே... நாளை என் மண மேடையும் மரண மேடையும் - உன் நினைவுகளாலான மீள் நிரப்பலினால் அலங்கரிக்கப்பட கூடும்... அந்த நிரப்பல்களின் மெல்லிய விளிம்புகள் வரை என் இறுதி மூச்சுக்களே நிரம்பியிருக்கும்....

பயிரை மேயும் வேலிகள்.....

Image
சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொருளாதாரம். மூவரும் கதைப்பதற்கு என்றே விஹாரமாதேவி பூங்காவில் சந்தித்தோம். அவரவர் குடும்பங்கள் தற்போதைய பணிகள் என்று ஆரம்பித்த அந்த உரையாடலில் அவர்கள் இருவரும் கூறிய பல விடயங்கள் நான் வளர்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் வரம்புகளை தாண்டியதாகவே இருந்தது. அவர்கள் இருவரும் தம்முடைய பாலியல் உறவுகள், தமது ஆண் நண்பர்கள் பற்றிய விளக்கம் , விவாகரத்து என்று மிக சகஜமாக பேசும் போது தட்டுத்தடு...

சில கிறுக்கல்கள்

Image
"அம்மா" உயிர் கொடுத்து மெய் காக்கும் உயிர்மெய்யானவள் அ – உயிர் ம் - மெய் மா – உயிர் மெய் உன்னை நானும் என்னை நீயும் தூறலிலிருந்து காக்க குடையை விட்டொதுங்கிய நிமிடங்களில் யாரைக் காப்பது என்ற குழப்பத்தில் முற்றாக நனைகிறது அதுவும்... நம்மை போலவே.....

A Separation

Image
தன்னுடைய கணவனின் தந்தையை வைத்து பராமரிக்க முடியாது என மனைவி: தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தன்னை வளர்க்கும் தன் தந்தை தன்னுடன் தானிருக்க வேண்டும் என் வாதிடும் கணவன் என ஆரம்ப காட்சியே குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் வாதிடம் காட்சியுடனேயே ஆரம்பிக்கின்றது அஸ்கர் பிராடி ( Asghar Farhadi )  இயக்கியுள்ள எ செப்ரேஷன் (A Separation) . 2011 இல் வெளிவந்த இந்த ஈரானிய திரைப்படம் குறித்த என்னுள்ளான தாக்கமே இப்பதிவு... நீதிமன்ற காட்சியை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் மனைவி தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுகின்றாள். அலுவலகம் செல்லும் தானும் பாடசாலை செல்லும் தனது 11 வயது மகளும் வெளியேறிய பின் தன் தந்தையை பராமரிக்க ஒரு வேலைக்கார பெண்ணினை நியமிக்கின்றான் கணவன். பாலர் பாடசாலை செல்லும் தன் மகளுடன் அந்த வயோதிபரை பராமரிக்க வருகின்ற அந்த வேலைக்கார பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. தன்னையே பராமரித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள அந்த வயோதிப தந்தையினை கடும் சிரத்தைக்கு மத்தியிலும் பராமரிக்கின்றாள் அந்த பெண். மூன்றாம் நாள் திடீரென வேலை விட்டு வரும் மகன் வீட்டில் யாரும் இல்லாதிருப்பதை கண்டு அதிர்ச்ச...