நிறம் மாறும் மனிதர்கள்
சூழலுக்கேற்ப மாறும் பச்சோந்திகள்.. படித்ததுண்டு பாடசாலையில் - தன்னைப் பாதுகாக்க தான் மாறுகின்றன.. விஞ்ஞான ஆசிரியர் அளித்தார் விளக்கம் மேற்கோள் காட்டினார் டாவின்சி கோட்பாட்டை விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது ஐந்தறிவுகளின் மாறலை – என் அனுபவங்கள் கற்றத் தருகின்றது ஆறறிவுகளின் வேடமிடல்களை… பிறப்பு முதல் இந்நாள் வரை காதல் முதல் நட்பு வரை காலை முதல் மாலை வரை சலித்துவிட்டன (மா) மனிதர்களின் நிறம் மாறல்களைப் பார்த்து…. புகழ்ந்த வாய்கள் இகழ்கின்றன சிரித்த முகங்கள் முறைக்கின்றன அணைத்த கைகள் நேரம் பார்க்கின்றன அடிப்பதற்கு நட்புகள் கூட மறைகின்றன சூழலிலிருந்து தப்புவதற்கு ஐந்தறிவு மாறலுக்குக்குக் கூட இயற்கை சூழல் எதிரியிடமிருந்து பாதுகாப்பு உணவுச் சங்கிலி - என காரணங்கள் பலவுண்டு நிறம் மாறும் மனிதர்களுக்கு….? பணமா? கவர்ச்சிகளா? உயர்ந்ததை தேடுகின்ற இயல்பா? காமமா? காரிய சித்திகளா? - இல்லை காரணமில்லா கர்மங்களா? கேள்வி கேட்க வாழ்க்கைப் பாட ஆசிரியரில்லை கோட்பாடெழுத டாவின்சி இல்லை இப்போதெல்லாம் - கடவுள் கூட சிலையாகி – சில வேளை நிற்பதால் - என் கேள்விகளுக்குப...


Comments
Post a Comment