Posts

Showing posts from January, 2013

அன்பானவர்களுக்காக சில நிமிடங்கள்

Image
இன்று உலகம் ரொம்ப சுருங்கி விட்டது என்கின்றோம். ஆனால் அதனுடன் கூடவே அன்பும் சுருங்கிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. முன்னர் எல்லாம் தொடர்பாடல் வசதிகள் ஈரக்கவில்லை ஆனாலும் அன்பு பறிமாற்றல்கள் நிறைந்திருந்தன. எனது குடும்பத்தில் அநேகமானவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் தங்களவர்களுக்கு செய்த அன்பின் பரிமாற்றங்களை இன்றும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கின்றேன். ( அம்மா கூட அப்பா தன்னை கிறிக்கட் விளையாடும் சாட்டில் சைட் அடித்ததாக கூறியிருக்கிறார்) எனினும் இன்று பலவித தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அன்புப்பறிமாற்றல்கள் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. அன்புக்கு “நீர்த்தன்மை” இருக்குதுங்க. மரத்திற்கு ஒரு வேளை நீர் ஊற்றாவிட்டால் இறந்து விடாதாயினும் வாடல் நிச்சயம் ஏற்படும் அதேபோன்று எந்த உறவுமுறையிலும் அவர்களுக்கான நேர ஒதுக்கல்கள் குறையும் போது புரிந்துணர்வுகள் குறைந்து அன்பில் விரிசல்கள் ஏற்பட தொடங்குகின்றன. நாம் எவ்வளவோ பெரிய மேலதிகாரியாக கூட இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கும் , நமது நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் அது அப்பாற்பட்...

மாலைநேரம் கடற்கரையில்….

Image
நினைவு தெளிந்த நாளிலிருந்து – ஓர் ஆசை….. கடற்கரையில் மாலைநேரமொன்றை செலவிட வேண்டுமென்று பலமுறை குடும்பத்தினருடன் சென்று விட்டேன் - ஆனால் அந்த தனிமை அந்த கவிதைப் பொழுது இதுவரை கிடைத்ததில்லை அப்பாவிடம் கேட்டுவிட்டேன் அவருக்கு அலுவலக வேலையாம் அம்மாவிடம் கேட்டேன் அவருக்கு வீட்டுவேலை அதிகமாம் அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை தம்பிக்கு தன் நண்பர்களுடன் செல்வது தான் பிடித்திருக்கின்றதாம் நண்பிகளை கேட்டால் - தம் ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம் நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக… என் நண்பனிடம் கேட்னே; எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார் தனியே போவதற்கும் தைரியமில்லை சில நேரங்களில் சில வினாக்களுக்கு விடை கிடைப்பதில்லை…. இங்கும் எனக்கு மட்டும் ஏன்? யாருடன் தான் நான் போவது? பல வினாக்கள் …- ஆனால் இனிமேல் யாரிடமும் கேட்கப்போவதில்லை.. என்றோ ஒரு நாள் பௌர்ணமி தினத்தில் கடற்கரை மணலில் இனியதொரு மாலைப்பொழுதில் என்னவனின் விரல்களை பிடித்தபடி வெண்ணலைகள் எம் கால்களை செல்லமாக மோத – அவன் தோளில் முகம் புதைத்து – அவன் வியர்வை மணம்...

இனக்கவர்ச்சி, காதல், நட்பு

Image
பொதுவாகவே பருவ வயதில் அனைவருக்குமே தோன்றும் இயல்பான உணர்வுகளே இவை. எதிர்பாலாரிடம் எமக்கு இவ்வாறான உணர்வுகள் தோன்றுகின்றன. இவற்றினை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில் தான் இவற்றின் வெற்றி தங்கியிருக்கின்றது இவற்றிற்கான ஆயுளும் தங்கியிருக்கின்றது. அதிலும் இன்றைய சினிமா மற்றும் பொழுது போக்கு ஊடகங்களும் இவற்றிற்கான அடிப்படைகளை அமைத்து கொடுக்கின்றன. ஒரு பெண்ணைப்பார்க்கின்றோம் அவளுடைய ஏதோவொன்று எம்மைக் கவர்கின்றது அவளுடனான தொடர்பை ஏற்படுத்துவோ அல்லது அதனை வலுப்படுத்தவோ அடிக்கடி கதைக்கின்றோhம் அல்லது நம் பக்கம் அவள் கவனத்தினை திருப்ப முயற்சிக்கின்றோம் அதேவேளை இன்னொரு பெண்ணைக்காணும் போது முன்னவளுடனான உறவைக் குறைக்கவோ அல்லது அவளில் குறை கண்டுபிடித்து உறவை கழற்றிவிடவோ முயற்சிக்கின்றோம். அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம் அவ்வாறான கவாச்சிகளும் இதன் விளைவுகளையும் பழகத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உணரலாம் அல்லது உண்மைச் ச...

என் வாழ்வின் பொன்நாள்…..

Image
சில விடயங்கள் எதிர்பாராமல் இடம்பெறுவது தாங்க வாழ்க்கை… அது சிலவேளைகளில் விதியின் வலிதான கரங்கள் நமது கழுத்தினை பிடிப்பதாக இருக்கலாம் அல்லது திகட்ட திகட்ட அமுதம் தருவதாகவும் இருக்கலாங்க.. அதற்கான பிரதிபலிப்புக்கள் வேறுபடுகின்ற போதும் விதியின் விளையாட்டு வித்தியாசமானது. ஆனாலும் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான். எதிர்காலம் தான் தெரிந்துவிட்டால் தோல்விகளும் இல்லாமல் வெற்றிகளையும் தெரிந்து கொண்டதான வாழ்க்கை சப்பென்றாகிவிடும். சிறுவயதில் இருந்தே “சஸ்பென்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்த விடயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எனது கவிதைகளிலும் சரி இந்த “சஸ்பென்ஸ்” வைப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்ததொன்று. ராஜேஸ்குமாரின் திரில் மற்றும் இந்திராசௌந்தர்ராஜனின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் நேற்று ஒரு சஸ்பென்ஸ் எனக்கு கிடைத்தது பாருங்க அது ரொம்ப ரொம்ப சுவீட்டானதுங்க.. வாழ்க்கையில் நான் நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பிய விரும்புகின்ற நபர்கள் சில பேர் தான். அதிலொருவர் நான் மிகச்சிறிய வயதில் எழுதிய ( அப்போது 13 வயது தான்) என்னுடைய கிற...