மௌனராகம்!
இன்று வரையான திரைப்படங்களில மௌனராகம் திரைப்படம் பல தலைமுறைகள் கடந்தும் நிற்கின்றதொரு படமொன்றென நான் நினைக்கின்றேன். 1986 இல் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்ததொரு திரைப்படம் இது. இதில் முக்கிய பாத்திரங்களாக மோகன், ரேவதி, கார்த்திக் நடித்திருப்பார்கள். மணிரத்தினம், மோகன், ரேவதி மூவருக்குமே இதுவொரு அடையாளம் என்று கூட சொல்லாம். ஆனால் மௌனராகம் என்றவுடன் முதலில் நினைவுக்கு பெரும்பாலும் வருவது மோகன் தான். இத்திரைப்படத்தின் இன்னுமொரு ஹலைட் என்றால் இளையராஜாவின் இசையமைப்பு. மன்றம் வந்த தென்றல்….. சின்ன சின்ன வண்ணக்குயில்….., நிலாவே வா…. என்று மூன்று பாடலுமே டிவைன். இத்திரைப்படம் அப்படியொன்றும் சிக்கலானதோ, அதிக பாத்திரங்களை உள்ளடக்கியதோ, என்னாகும் என்று இருப்புக்கொள்ளாமல் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க தூண்டும் கதையுமல்ல. ஒரு சாதாரண கதை. திவ்யா (ரேவதி) எனும் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு நகர்கின்றது கதை. திருமணத்திற்கு முன் சமூக போராளியான மனோவினை சண்டையொன்றில் சந்திக்கின்றாள். மனோ திருடன் என நினைத்து பொலிஸாரிடம் அடையாள அணிவகுப்பில் காட்டிக்கொடுத்து விட...