Posts

Showing posts from April, 2014

ஊடகப்பெண்களும் ஊரார் பார்வையும்....

Image
சுயம் - 01 அன்று காலையில் எனது தொலைபேசிக்கு வந்த அழைப்பு நான் எதிபாராத ஒன்று மட்டுமல்ல. ஊடகபெண்கள் எவ்வாறெல்லாம் ஊரார் பார்வைக்கு தீனியாகின்றார்கள் என்று எனக்கு சொல்லிய முதல் அழைப்பும் கூட நான் ஹலோ சொன்னதுமே மறுமுனையிலிருந்த பெண்குரல் கேட்ட கேள்வி நீ நேற்று இரவு ….. என்பவருடன் தங்கினாயா? என்பதே. இந்தக்கேள்வியை இன்று கேட்டிருந்தால் என் பதில் வேறாயிருந்திருக்கும். ஆனால் இது கேட்கப்பட்டது இரு வருடங்களுக்கு முன்னர். அதாவது நான் ஊடகதுறையில் காலடிவைத்த நேரமது. வாயில் வார்த்தைகள் வரும் முன் கண்களுள் கண்ணீர் தான் முதலாக வந்தது அந்த நிமிடத்தில். மறக்க மட்டுமல்ல மனதிலிருந்து மறக்க முடியாத நிமிடங்கள் அவை. என்னுள் ஏற்பட்ட பதற்றத்தில் தொலைபேசியை நிறுத்தி விட்டு என்னுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட நபருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அதன் பின்பு அந்தப்பெண்ணுடன் பேசினேன். இப்படி பல அழைப்புக்கள் ஏற்படுத்தியதன் விளைவாக இறுதியில் “ அவர் தனது காதலர் என்றும், பல வருட காதலில் தானும் அவரும் பல தடவை உடலுறவு வைத்து கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது அவர் சாதியைக்காட்டி தன்னை உதறிவிட்டு வீட்டில் பார்க...

என்னை ஏமாற்றியவள் பற்றி உங்களுக்கு சொல்லி நியாயம் கேக்கலாம்.....

Image
கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து பல இணையத்தளங்களிலும் வெளிவந்து கொண்டு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்த ஒரு விடயம் இளைஞன் ஒருவனின் தற்கொலையும் அவன் முகநூலில் இறக்கும் முன் இட்டிருந்த பதிவும்…. இங்கு அவன் தற்கொலை பற்றிய விமர்சிப்போ அல்லது அந்தப்பெண் பற்றிய நியாயப்படுத்தல்களோ பற்றியதில்லை இப்பதிவு. அந்த இளைஞர் பதிவிட்டிருந்த விடயத்தில் காணப்படுகின்ற சில நெருடல்கள் பற்றி பேசுவதே இதன் நோக்கம். இவள் பத்தாம் வகுப்பு(2006) படிக்கும் போது இவளுடைய உறவினர் ஒருவரை காதலித்தால் அவனுக்கு அச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது இவள் அதற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளிநாடு செல்லும் படியும் சொன்னதை கேட்டு அவனும் இவளது விருப்பப்படியே வெளிநாடு சென்றுள்ளான்  இந்த பந்தியினை எடுத்துக்கொள்ளுங்கள் அந்தப்பெண் பத்தாம் ஆண்டு படிக்கும் பொது கூறியதை கேட்டு ஒரு இளைஞன் முடிவெடுத்திருக்கின்றான் இது தான் இப்பந்தியின் சாராம்சம். புத்தாம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கு வயது நிச்சயம் 15 இனை தாண்டியிருக்காது. புதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒருவரைத்தான் “வயது வந்தவர்” என்ற வரப்பிற்குள் சேர்க்கின்றோம். அதற்...

அந்த மூன்று நாட்கள்…..

Image
(என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை) அப்போது நான் பாடசாலையில் தரம் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கான சுகாதார புத்தகத்தில் “பூப்படைதல்” பற்றிய பாடம் இருந்தது. ஆனால் எங்கள் சுகாதார ஆசிரியர் அதைப்பற்றி படிப்பித்தில்லை. அந்தப்பாடத்தி;ல் இருந்த படங்களை யாருமில்லா நேரத்தில் புரட்டிப்பார்த்துக்கொள்வதுண்டு. வகுப்பு நண்பிகள் யாரும் கண்டால் என்னை பகிடிபண்ணுவார்கள் என்பதே இந்த இரசிய புரட்டல்களுக்கான காரணம். என்னுடைய சக தோழிகள் அனேகர் தரம் ஒன்பதற்கு வரும் முன்னரே பெரியபிள்ளைகளாகிவிட்டனர். வகுப்பாசிரியர் இடாப்பு மார்க் பண்ணும் போது எமது பெயர்களை சத்தமாக தான் வாசிப்பார். ஆந்த நேரங்களில் பெரியபிள்ளையாகியதால் பாடசாலை வராமல் இருக்கும் பிள்ளைகளின் பெயர் வரும் போது “அவ ஏஜிடன்ட் பண்ணிட்டா” என்று சொல்லிக்கொள்வார். அப்படியான நாட்களில் வீட்டுக்கு வந்ததும் என் அம்மம்மாவிடம் அதைப்பற்றி கேட்பதுண்டு. “நீங்க இன்னம் வளரனும்” என்று மழுப்பிவிடுவார். பின்னேரம் அம்மா வேலைவிட்டு வந்ததும் அவவிடமும் கேட்பன். “பிறகு சொல்றன் மகள்” என்டு சொல்லுவா… ஆனால் ஒரே பார்த்திருக்கின்றேன் இதை சொல...