கா.மு – கா.பி
தலைப்பினை பார்த்ததும் ஏதோ வேற்று மொழி பேச தொடங்கிவிட்டேன் என்று விகல்பமாக யோசிக்காதீர்கள். கா.மு – என்பது காதலுக்கு முன் கா.பி என்பது காதலுக்குப் பின் என்பவற்றின் சுருக்கமே. இந்தப்பதிவினை இன்றைய காலகட்டத்துடன் சம்மந்தப்படுத்தியும் உளவியல் ரீதியாகவும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம். இப்பதிவினை என் கண்ணோட்டத்திலும் என் சார்ந்தவர்களை மையப்படுத்தியுமே எழுதுகின்றேன். யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பெண்ணியம் பேசுவதோ இதன் நோக்கமல்ல. “காதல்” என்பது இன்று பலவித பரிணாமங்களை கடந்துவிட்டது. முன்னர் நம்முடைய தாத்தா – பாட்டி காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்களுக்கு இடையில் தொடர்பாடல் சாதனங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களது காதல் மிகவும் தூய்மையானதொன்றாக இருந்தது. அவர்கள் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காலம் முழுவதும் ஒருவர் மற்றவருடைய நினைவுகளுடனேயே காலம் கழித்தார்கள். அக்காலத்தில் எல்லாம் ஒரே காதல் என்ற கருத்து தான் நிலவியது. காதலிக்கும் போது எவ்வாறானதொரு புரிந்துணர்வுடன் காதலித்தார்களோ அதே காதல் கைபிடித்த பின்னும் குறைந்திருக்கவில்லை. இ...