கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒரு விடயம் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 1978 இன் 4 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழச் சட்டத்தமின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இச்சட்டம் 1948 செப்டெம்பர் 8 ஆம் திகதி முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1950, 1953,1955,1981 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. மேற்படி ஆணைக்குழு பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதியவர்கள் நியமித்த விடயங்கள் வருமாறு2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைவதற்கான காரணங்கள் மற்றும் 2009 மே 19 வரை இடம்பெற்ற சம்பங்களுக்கான காரணங்கள் யாராவது தனிநபர் , குழுவினர் அல்லது நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இது தொடர்பான பொறுப்புக்களை ஏற்கின்றார்களா? இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாத வகையில் அதனை...