Posts

Showing posts from March, 2012

வெற்றி – தோல்வி

வெற்றி தான் தோல்வியின் முதற்படி என்கிறார்கள் தோல்வியில் தான் பல பாடங்களும் உண்டு.... வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு தான் - ஆனால் எங்கே தோற்கின்றோம் எதில் வெற்றி பெறுகின்றோம் என்பது முக்கியம் சில விடயங்களில் தோற்பதில் கூட வெற்றி உண்டு சில விடயங்களில் வெல்வது கூட தோற்பதற்கு சமனாகின்றது... நோப்போலியனின் வெற்றிக்கு காரணம் அவன் தோல்விகள் ஹிட்லரின் தோல்விக்கு காரணம் அவனது வெற்றி

காயங்கள்

வாழ்வில் துன்பங்கள் வருவது சகஜம் அவை தரும் வலிகளும் புதிதல்ல அதனால் வரும் காயங்களை காலம் ஒரு நாள் மறங்கடிக்கும்  ஆனால் அவை தரும் பாடங்களை மட்டும் மறந்துவிடாதே....

உண்மைக்காதல்

காதலில் பலவகை இல்லை காதல் என்றாலே உண்மை தான்... நாம் தோற்பது உண்மைக்காதலில் அல்ல.. உண்மையானவர்களை தேர்ந்தெடுப்பதில் தான்...

கண்ணீர்

உன்னை காயப்படுத்துபவர்களுக்காக கண்ணீர் சிந்தாதே உண்மையாக நேசிப்பவர்கள் உன்னை காயப்படுத்தமாட்டார்கள்

வாழ்க்கை

வாழ்க்கை என்பது மலர்கள் போன்றது – அதை சூடுவதும் கசக்கி எறிவதும் நம் கையில் உள்ளது

மதம்

மனிதனை நெறிப்படுத்தவே மதங்கள் மனிதன் மதவெறி கொண்டலைவதற்கல்ல

காதல்

அழகை பார்த்து காதலித்து அன்பை தேடாதீர்கள்... அன்பை பார்து காதலித்து அழகை தேடுங்கள்!