Posts

பதிவுகள்

மௌனராகம்!

Image
இன்று வரையான திரைப்படங்களில மௌனராகம் திரைப்படம் பல தலைமுறைகள் கடந்தும் நிற்கின்றதொரு படமொன்றென நான் நினைக்கின்றேன். 1986 இல் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்ததொரு திரைப்படம் இது. இதில் முக்கிய பாத்திரங்களாக மோகன், ரேவதி, கார்த்திக் நடித்திருப்பார்கள். மணிரத்தினம், மோகன், ரேவதி மூவருக்குமே இதுவொரு அடையாளம் என்று கூட சொல்லாம். ஆனால் மௌனராகம் என்றவுடன் முதலில் நினைவுக்கு பெரும்பாலும் வருவது மோகன் தான். இத்திரைப்படத்தின் இன்னுமொரு ஹலைட் என்றால் இளையராஜாவின் இசையமைப்பு. மன்றம் வந்த தென்றல்….. சின்ன சின்ன வண்ணக்குயில்….., நிலாவே வா…. என்று மூன்று பாடலுமே டிவைன்.    இத்திரைப்படம் அப்படியொன்றும் சிக்கலானதோ, அதிக பாத்திரங்களை உள்ளடக்கியதோ, என்னாகும் என்று இருப்புக்கொள்ளாமல் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க தூண்டும் கதையுமல்ல. ஒரு சாதாரண கதை. திவ்யா (ரேவதி) எனும் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு நகர்கின்றது கதை. திருமணத்திற்கு முன் சமூக போராளியான மனோவினை சண்டையொன்றில் சந்திக்கின்றாள். மனோ திருடன் என நினைத்து பொலிஸாரிடம் அடையாள அணிவகுப்பில் காட்டிக்கொடுத்து விட...

அடிவழிச்சப்பம்

Image
  உணவினை பலவிதமாக சாப்பிடலாம் என்பதற்கு அப்பம் நல்லதொரு உதாரணம். பால் விட்டு பாலப்பம், முட்டை போட்டு முட்டப்பம், சக்கரை வைத்து சக்கரையப்பம் எதுவுமே போடாமல் வெறும் அப்பம் என்று முன்னர் பல முறைகளில் அப்பம் சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது புதிதாகவும் பல வந்துவிட்டன. சொக்கலேட்டை உருக்கி போட்டு சொக்கலேட் அப்பம், இறைச்சி வகைகளை பிய்த்து வெங்காயத்துடன் கலந்து உறைப்பும் போட்டு பிரட்டிய அடப்பத்தினை அப்பம் மேல் போட்டு இறைச்சியப்பம் , மில்க்மெயிட் அப்பம் என்று அப்பமும் காலத்திற்கேற்ப மாறுபட்டும் நவீனமடைந்தும் கொண்டிருக்கின்றது. ஆனால் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் நான்கு அப்பங்களின் வகை தான் எனக்குத் தெரிந்திருந்தது.  இப்போது அப்பத்திற்கான மா கூட பக்கற்றுக்களில் வந்துவிட்டன. வாங்கி வந்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்தால் நொதித்துவிடும். எடுத்து வாயு அடுப்பில் வைத்து இறக்கினால் போதும். அப்பம் ரெடி ஆனால் சுவைதான் கொஞ்சமுண்டு மதி…. முன்னரெல்லாம் அப்பத்திற்கான பதம் எடுப்பதும் அதனை சுட்டு அடுக்குவதும் வீடுகளில் இடம்பெறுகின்ற பெரிய்ய்ய்யதொரு சம்பவம். இதனால் தான் பெரும்பாலும் வீடுகள...

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……08

Image
    Feb 07th -  Rose Day:   Expression on Admiration     Feb 08th - Propose Day:   Sharing feelings and Commitment  Feb 09th - Chocolate Day:   Symbol of Joy   Feb 10th -  Teddy Day:   Gesture of warmth and care Feb 11th -  Promise Day:    Focus on trust and Intention     Feb 12th - Hug Day:   Emotional closeness and Reassurance  Feb 13th -  Kiss Day: Expression of affection   Feb 14th - Valentine’s Day: Celebration of love and companionship  உலகத்தில் எவ்வளவோ நினைவுகூறல் நாட்களுண்டு. ஆனால் காதலர் தினம் போன்று பரந்தளவில் கொண்டாடப்படுகின்ற தினம் ஏதாவது இதுவரை உண்டா? இது ஒருவகையில் வர்த்தரீதியான நிகழ்ச்சி நிரலும் கூட. ஆனால் சில விடயங்களின் பின்னால் எந்த நிகழ்ச்சிசிரல் இருந்தாலும் அதில் உணர்வுரீதியானதொரு விடயம் இருக்குமென்றால் அது நல்லதே. ஆனால் பாருங்கள் “LOVE” என்பதை யார் நேரடி மொழிபெயர்ப்பாக “காதலர் தினம்” என்று மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை நம்மில் பலரும் இதனை நாம் ஆண்...

ஏன் இந்த அன்பில் இவ்வளவு முட்டாள்தனம்?

Image
பேசவதற்கென – என் நிமிடங்களுக்கு சிலர் விலைபேசுவதுண்டு…. பூங்கொத்துடன் காத்திருப்பவர்களுண்டு….. பேசியே என் விரல்களை பற்றிட பலருண்டு….. – நான்  இன்று விலை மதிக்க முடியாத நிமிடங்களை  வெறுமனே வீணடித்துக்கொண்டிருக்கின்றேன் உன் குரலை கேட்பதற்காக….  தினமும் என்னை  பார்ப்பதற்கென…. என் குரல் கேட்பதற்கென…. மனதில் பொருத்திற்கொள்வதற்கென….  எத்தனை மனிதர்கள்… எத்தனை அழைப்புக்கள்… எத்தனை வற்புறுத்தல்கள்…  - ஆனால் உன் முகம் பார்ப்பதற்கும் குரலை கேட்பதற்குத்தானே என் - இத்தனை எத்தனங்களும்…..  இன்று மட்டும் நிகழ்த்துகின்ற  நாடகமல்ல இது….  அன்றிலிருந்து…. தொடர்கின்ற தொடர் நாடகம்….  உன் குரல் கேட்பதென்பது…… வறண்டிருக்கும் மனத்தரையில் சட்டென்று விழுகின்ற கோடை மழை உன் குரல் கேட்பதென்பது…. பசித்திருப்பவர் முன் வைக்கப்படுகின்ற இலைச்சோறு….. உன் குரல் கேட்பதென்பது…. நெரிசலில் கிடைத்துவிடுகின்ற ஜன்னலோரத்து பேரூந்து இருக்கை….. ஏன் இந்த அன்பில் இவ்வளவு முட்டாள்தனம் ? ( 22.02.2026 : பி.ப 9.30)