Posts

Showing posts from November, 2025

மன்னிப்பு எனும் மாண்பு...

Image
  நவம்பர் 3 ஆந்திகதி சர்வதேச தம்பதிகள் தினம். உண்மையில் இப்படியொரு தினம் இங்கு கடைபிடிக்கப்படுவதை இப்போது தான் அறிகின்றேன். வியப்பாகவும் பார்க்கின்றேன். இதனை முன்னிட்டு என்னுடைய விரிவுரையாளர்கள் (தம்பதி) சில மாணவர்களை தங்களது வீட்டில் ஒழுங்குசெய்திருந்த இராவுணவிற்கு அழைத்திருந்தார்கள்.  பல்கலைக்கழகத்திலும் இவர்கள் இருவரது அன்னியோன்னியத்தினை நாம் பார்த்திருக்கின்றோம். சில நேரங்களில் எங்களுக்குள் பகிடியும் செய்துகொள்வோம். இங்கு விருந்தின் போதும் அதன் நீட்சியை , இன்னுமொரு பரிணாமத்தினை எம்மால் அறியமுடிந்தது.  உண்மையில் இருவேறு சமூகத்தினை, குடும்பத்தினை, விருப்பு வெறுப்பு கொண்ட இரு வேறு தனிநபர்கள்  எப்படி சேர்ந்து வாழ்கின்றார்கள் என்கின்ற கேள்வி அடிக்கடி என்னுள் எழுவதுண்டு. இதே கேள்வியை உணவின் பின்னராக உரையாடலின் போது கேட்டேன். அநேகமாக உங்களுக்குள்ளும் இந்த வினா இருக்கும். மெல்லிய புன்னகையுடன் “ மன்னித்தல்’ தான் காரணம் என்றார்கள். என்னளவில் மன்னிப்பு என்பது மிகவும் கடினமானதொரு விடயம். அம்மா அடிக்கடி சொல்வது போல் நான் பயங்கர பிடிவாதக்காரி என்பதாலேயோ என்னவோ இலகுவி...