Posts

Showing posts from 2017

தேசியத்திற்கு பின்……..

Image
அப்பாடா ஒருமாதிரியாக பன்னிரண்டு மணிநேர பிரயாணம் முடிவிற்கு வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தினை அடைந்தாயிற்று…  அப்பாவையும் அம்மாவையும் தூரத்தில் கண்டவுடனேயே இனம்புரியாத தைரியம் மனதிற்குள் வந்த குடியேறிவிட்டது போன்றதான உணர்வு. வர்மனை தட்டி சொல்லி கையை காட்டியதும் என்னவருடைய தோளில் சாய்ந்திருந்த ஆதியும் என் கைவிரல் பற்றி தத்தி தத்தி நடந்து வந்துகொண்டிருந்த ஹரியும் யாரென புரியாவிட்டாலும் அவர்களும் கையசைத்துக்கொண்டார்கள். அப்பா, அம்மாவிற்கு பின்னாலிருந்த ஆஜானுபவமான உருவம் முன்னோக்கி வருவதும் தெரிகின்றது….யாரது? ஓ…. தம்பி….. இவ்வளவு வளர்ந்து விட்டானா? சின்ன வயசில் ஓட்டைப்பல்லுடன் ஒற்றை விரலை சூப்பிக்கொண்டு என்னுடன் சண்டை போட்டவனா இன்று இப்படி வளர்ந்து பனை மரம் போல…… எவ்வளவு தான் ஸ்கைப்பில் பார்த்துக் கதைத்தாலும் இந்த மூன்று வருட மாற்றம் நேரில் தான் சரியாகத் தெரிகிறது… அருகில் வந்து அத்தான்.. அக்காச்சி என்று எம்மைத் தழுவிக்கொண்ட போது அவன் கண்களும் சற்று கலங்கித்தான் போனது…. பல வருட பிரிவுகள் கல்லூள்pமங்கன்களின் கண்களிலும் கசிவை கொடுத்துவிடுகின்றது போலும்…. அவன் கைகளில் ஆதியு...