கடந்த 17ஆம் திகதி “பாலியல் கல்வி” http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html குறித்து பதிவொன்று இட்டிருந்தேன். இது குறித்து பலர் வெளிப்படையான கருத்துக்களை இட்டிருந்தார்கள். இன்னும் சிலர் தொலைபேசியில் இது குறித்து பல விமர்சனங்களை கொட்டியிருந்தார்கள். நேற்று முன்னணி தமிழ்ப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இன்பொக்ஸில் கீழ்க்கண்டவாறு பேசியிருந்தார். அவருக்கான ஒரு சிறு குறிப்பு ஒன்றினையும் அவர் இன்பொக்ஸில் துப்பியிருந்ததையும் பதிவிடுகின்றேன். என்ன நீர் பெண்ணியிம் பேசுறேன்..என்று பேஸ்புக்கில் கொண்டம் பற்றி எல்லாம் எழுதுகிறாய். ஏன் அதற்கு என்ன? நீர் சமூகத்தையும் தமிழ் பேசும் மக்களினதும் கலாசாரத்தை சீரழிக்கின்றாய். இதை தைரியமிருந்தால் என்ன பதிவின் கீழேயே இடலாமே.. ஏன் இன்பொக்ஸில்? எனக்கு தைரியம் இருக்கின்றது. எனினும், உமது துணிவுக்கு மரியாதைக் கொடுத்துதான் நான் இப்படி செய்கிறேன். உமது பணி வரவேற்கத்தக்கது. எனினும், நீர் பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள் ஓகோ... அங்கு இதே கேள்விய...