Posts

Showing posts from July, 2014

மீள் நிரப்புதல்...

Image
எண்ணெய் குடுவைக்குள் நீரை நிரப்பிடல் உண்டா? நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படலமாக உன் நினைவுகள்.... சரமாகும் மல்லிகைக்கு பதில் தாமரையை கோர்த்திடலாமா...? நினைவுச்சரங்களின் ஒவ்வொரு சிக்கிலும் - நம் சந்திப்புக்கள்... விஷச்சாடிக்குள் பாலூற்றிப் பருகுவதும்.. உன் கனவுளை துடைத்தெறிந்து விட்டு இன்னொருவன் நினைவை நிரப்புவதும் சாத்தியமற்றதாகியே விடுகின்றது... கவிதைகள்... கனவுகள்... நினைவுகள்... அனைத்திலும் மீள்நிரப்பிட முடிந்திடா பொருளாகியே போகின்றாய்.... – நீ என்னை (மட்டும்) விட்டே... நாளை என் மண மேடையும் மரண மேடையும் - உன் நினைவுகளாலான மீள் நிரப்பலினால் அலங்கரிக்கப்பட கூடும்... அந்த நிரப்பல்களின் மெல்லிய விளிம்புகள் வரை என் இறுதி மூச்சுக்களே நிரம்பியிருக்கும்....

பயிரை மேயும் வேலிகள்.....

Image
சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொருளாதாரம். மூவரும் கதைப்பதற்கு என்றே விஹாரமாதேவி பூங்காவில் சந்தித்தோம். அவரவர் குடும்பங்கள் தற்போதைய பணிகள் என்று ஆரம்பித்த அந்த உரையாடலில் அவர்கள் இருவரும் கூறிய பல விடயங்கள் நான் வளர்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் வரம்புகளை தாண்டியதாகவே இருந்தது. அவர்கள் இருவரும் தம்முடைய பாலியல் உறவுகள், தமது ஆண் நண்பர்கள் பற்றிய விளக்கம் , விவாகரத்து என்று மிக சகஜமாக பேசும் போது தட்டுத்தடு...

சில கிறுக்கல்கள்

Image
"அம்மா" உயிர் கொடுத்து மெய் காக்கும் உயிர்மெய்யானவள் அ – உயிர் ம் - மெய் மா – உயிர் மெய் உன்னை நானும் என்னை நீயும் தூறலிலிருந்து காக்க குடையை விட்டொதுங்கிய நிமிடங்களில் யாரைக் காப்பது என்ற குழப்பத்தில் முற்றாக நனைகிறது அதுவும்... நம்மை போலவே.....