Posts

Showing posts from June, 2014

A Separation

Image
தன்னுடைய கணவனின் தந்தையை வைத்து பராமரிக்க முடியாது என மனைவி: தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தன்னை வளர்க்கும் தன் தந்தை தன்னுடன் தானிருக்க வேண்டும் என் வாதிடும் கணவன் என ஆரம்ப காட்சியே குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் வாதிடம் காட்சியுடனேயே ஆரம்பிக்கின்றது அஸ்கர் பிராடி ( Asghar Farhadi )  இயக்கியுள்ள எ செப்ரேஷன் (A Separation) . 2011 இல் வெளிவந்த இந்த ஈரானிய திரைப்படம் குறித்த என்னுள்ளான தாக்கமே இப்பதிவு... நீதிமன்ற காட்சியை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் மனைவி தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுகின்றாள். அலுவலகம் செல்லும் தானும் பாடசாலை செல்லும் தனது 11 வயது மகளும் வெளியேறிய பின் தன் தந்தையை பராமரிக்க ஒரு வேலைக்கார பெண்ணினை நியமிக்கின்றான் கணவன். பாலர் பாடசாலை செல்லும் தன் மகளுடன் அந்த வயோதிபரை பராமரிக்க வருகின்ற அந்த வேலைக்கார பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. தன்னையே பராமரித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள அந்த வயோதிப தந்தையினை கடும் சிரத்தைக்கு மத்தியிலும் பராமரிக்கின்றாள் அந்த பெண். மூன்றாம் நாள் திடீரென வேலை விட்டு வரும் மகன் வீட்டில் யாரும் இல்லாதிருப்பதை கண்டு அதிர்ச்ச...