Posts

Showing posts from February, 2014

உள்ளங்கவர் கள்வன்

Image
மு தல் காதல் அழியாக்காதல் அவனோடு…. க ள்வனின் பெயர்? என் முதல் கவிதையின் தலைப்பு இ னம்? அவனிடம் கேட்டதில்லை மொ ழி? இதுவரை நேரில் கதைத்ததில்லை மௌனங்கள் பேசியதுண்டு காதலுக்கு மொழியேது.... மு தல் சந்திப்பு? தனிமையின் ஒரு கணத்தில் கண்ணுக்குள் விழுந்தவன் இன்று இதயத்துள் நிறைந்துள்ளவன் - என் கவியின் கதாநாயகன் ச ந்திக்காத நாட்கள்? திங்கள் ஒரு தடவை தொலைகின்றவன்…. கூடவே – என் நினைவுகளை தொலைக்க வைப்பவன் கா தல் பரிசு? அவனிடமிருந்தான இனிய இராப்பொழுதுகள்…. அவனுக்கு நான் கொடுத்த என்னாலான முதல் பரிசு கவிதை!! மு த்தம்? பல முத்தங்கள் பறக்கவிட்டதுண்டு தீண்டிடாத அசைவக்காதல் எம்முடையது!! சீ ண்டல்? சீ…சீ…. எம் - தூரம் போதும் விரதத்திற்கு…. அ வனை பிடிக்காதவர்கள்? என் அம்மா – அப்பா அவன் குறித்தான தனிமைகளை திட்டியதுண்டு ஓரிரவில் அவனுடன் பேசியதற்கு – என் அண்ணா கன்னத்தில் அறைந்ததுண்டு!! நி ச்சயார்த்தம்? குழந்தையே உண்டு!! கு ழந்தை? என் குழந்தைக்கு அவனைக்காட்டி தான் சோறூட்டுகின்றேன் அ வன்? சூரியனின் பகைவன் அல்லியின் காதலன் தினமும் என்னவனின் முக...

எது அது???

Image
அழகியதொரு விடயத்திற்கான நாளுக்காக எல்லோருமே காத்துக்கொண்டிருக்கின்றோம். அதாங்க பெப்ரவரி 14…  ஒரு கொண்டாட்ட நாள் என்றால் எமக்கு சிரிக்க தோன்றும். அதுவே மரண வீடென்றால் அழவைக்கும், இன்னும் சில நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைக்கும்…… ஆனால் நினைக்கும் போதே பலரை சிரிக்கவும், பலரை அழவைக்கவும், பலரை சிந்திக்க வைக்கவும் என பலவித குணவியல்புகளை உருவாக்க கூடிய சக்தி ஒரு தினத்திற்கு முடிகின்றதென்றால் அது இந்த நாள் தான். நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பலரை கடக்கின்றோம். சின்ன வயசில கூடப் படித்த குட்டீஸ் (நாமளும் அப்ப குட்டியா தான் இருந்திருப்பம்) , பாடசாலை போகும் போது பார்க்கின்ற பெடியன்கள், பெட்டையள் (அண்ணாவின் நண்பனையும், நண்பியின் அண்ணாவையும் இரகசியமாக லுக்கு விட வைக்கும்….. அவ்…அவ்), யுனிவசிட்டி விடலைகள் , எம்முடன் வேலை பார்ப்பவர்கள் என்று 1000 ஆண்களையும் பெண்களையும் கடந்திருப்பம்… ஆனா யாரோ ஒருத்தியிடமோ அல்லது ஒருவனிடமோ மட்டும் குழந்தையாக நம் மனம் தாவி ஓடுமே அது தாங்க காதல்…. பிறந்ததிலிருந்து நம்மை கண்ணும் கருத்துமாக பார்க்கின்ற அப்பாவை எதிர்த்து பேச வைக்கும்… மடியில் போட்டு தூங்க ...

கழுவப்படுகின்ற அடுத்தவர் சுயங்கள்......

Image
கிட்டடியில  எந்த சமூக ஊடகத்திலும் பதியப்படுகின்றதொரு விடயம் “இசையமைப்பாளர் யுவன் மதம் மாறிவிட்டார்” என்பது. இது பற்றி பலரும் பலவாறு விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலயும் சிலதுகள் “கள்ளக்காதலி”க்காக தான் அவரு மதம் மாறினாரு என்று வேறு பதியுதுகள். இந்த பதிவ வாசித்த பின் தான் இத பற்றி நாலு வார்த்த சொல்லனும் என்டு இத நான் பதியிறன்…. இந்த மதமாற்றம் என்ற விஷயம் என்னளவில் அவரவர் மனம் சார்ந்ததொன்று என்பது என் கருத்து. நாம் சிலவேளை யாராவது ஒரு வயதானவரையோ அல்லது ஒரு தாயைப்போல நம்மை கவனிப்பவரையோ “அம்மா” என்று அழைப்பதில்லையா? அல்லது அவருக்கு தாய் ஸ்தானத்தினை அளிப்பதில்லையா? அதற்கான நாம் கட்டாயம் அவர் வயிற்றில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது போல் தான் மதமும். எமக்கு பிடித்தால் அதை ஏற்பதில் தவறென்ன…? அதற்கு கட்டாயம் ஏதேனும் காரணம் தான் இருக்க வேண்டுமா……?   இதவிட முக்கியமானது ஓருவர் என்ன மதத்திலிருந்து மாறினாரோ அம் மதத்தவர் அவரை இகழ்வதும் அவர் மாறிய புதிய மதத்தவர் அவரை புகழ்வதும்…..  ஒருவனுக்கு “மதம்” என்பது அவன் பிறப்பினால் வருவதொன்று. இ...

புலம்பெயர்ந்தும் குணம்பெயரா தமிழர்கள்!

Image
நம்ம தமிழ் மக்கள் இனவழிப்பு இயக்கத்தொடர்பு என்று பல காரணங்களுக்கு பல அழுத்தங்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கு வேட்டியுடன் அல்லது அரைக்காற்சட்டையுடன் திரிந்தவர்கள் இன்று நல்லா டெனிம் உடுத்தி, குளிர் கண்ணாடி போட்டு தலைமுடியை ஏதோவெல்லாம் செய்து (சில அங்கிள்களுக்கு முடியில்லை என்பது வேறு விடயம்) சும்மா சொல்லக்கூடாது சினிமா நடிகர் போல் தானிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் என்ன இங்கு சுடிதார், சாறி என்று திரிந்தவை அங்கு நல்லா மொடன் ட்ரஸ் போட்டு அம்சமாகதானிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த எந்த தமிழ் பிள்ளையல்ட கேட்டாலும்….. இங்கு ஒன்று கவனிக்கனும் நாம கதைக்கிற தமிழ் விளங்கும் அதுகளுக்கு ஆனா பதில் இங்கிலீஸ் அல்லது தங்கிலீஸ் அதாங்க தமிழ் பிளஸ் இங்கிலீஸ் ல தான் வரும்…  அது ஒரு புறமிருக்க நான் சொல்ல விஷயம் என்னென்றால்…..??? இலங்கையின் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் விளம்பரப் பக்கங்களில் பார்த்தீர்கள் என்றால் மணமகள் தேவை மணமகன் தேவை என்ற பகுதியும் வருகுது. ஆத ஒருக்கா புடிட்டிப்பாத்தீங்க என்டா அப்பயே ஷாக் ஆகிடுவீங்க…… அழகான, சிவந்த, படித்த , மெல்லிய (இதில எ...