Wednesday, January 1, 2014

பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 8ஆவது ஆண்டு நினைவு தின நினைவுப் பேருரையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பகுதிநேர விரிவுரையாளர் அருட்தந்தை எழில் றஜன் (யே.ச) ஆற்றிய நினைவுப்பேருரையின் முழுவடிவம்.

இன அழிப்பு ஒடுக்கு முறைகளிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டுமாயின் எதிர்ப்பரசியலுக்கான அரசியல் வெளி உருவாக்கப்பட்டு, போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தமிழ்த் தேசியத்தை வாக்கு அரசியலுக்காக விற்று விடாமல் தமிழின விடுதலைக்காக வாழ்ந்து தான் நேசித்த மக்களின் வாழ்தலுக்காக 2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று பேராலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ் பாராளுமன்றத் தலைமைகள் நடத்தி வருகின்ற விட்டுக் கொடுப்பு அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாக்கு கேட்பதற்காக மட்டும் தமிழ்த் தேசியத்தை பாவிக்காது ஈழத் தமிழ் மக்களின் விடுவிற்கு தமிழ் தேசியமும் தாயகமுமே ஒரேயொரு தீர்வு என்பதனை மிகத் தெளிவாகவும், காட்டமாகவும் எடுத்துரைத்த குரல்களில் ஒன்றாக விளங்கியவர், பேரினவாத அடிவருடிகளினால் மௌனிக்கப்பட்டார் என்பது மிகக்கவலையான விடயம் மட்டுமல்ல தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாம் கொடுத்த விலைமதிப்பற்ற விலைகளில் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.
     
தராகி சிவராமால், இரு துருவ அரசியலுக்கு முழுக்குப் போடுவதற்காக கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் மிதவாத அரசியலையும், போராட்ட அரசியலையும் ஒருங்கிணைக்கத் தவறி பின்-முள்ளிவாய்க்கால் அரசியல் வெளியில் மீண்டும் சுயநலம் சார்ந்த மிதவாத அரசியலுக்குள் தமிழ்க் கூட்டமைப்பு பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது கவலையான விடயம் மாத்திரம் அல்ல தமிழ்த் தேசியத்தையும் அதற்காக ஆகுதியானவர்களையும் அவமதிக்கும் செயலாகவும் இருக்கின்றது.
      
ஒரு துண்டு கரட்டுக்காக தமிழ் தேசிய வண்டியை ஓட்ட முனையும் அரசியலை "அரசியல் சாணக்கியம்" என்று நியாயப்படுத்த முடியாது இவ்வாறானதொரு அரசியல் மீள்சுழற்சியில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக் கொண்டுள்ளதாக குருபரன் குறிப்பிடுகின்றார்.

பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தளத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டமைக்கப்பட்ட தமிழினப் படுகொலை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பேரினவாத இயங்கு சக்திகளால் இன்னொரு முள்ளிவாய்க்கால் சத்தமின்றி அரங்கேறிக் கொண்டிருகின்றது. இவை தருகின்ற கூட்டுவலி எமது கடந்த காலங்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை கேள்விக்குட்படுத்தி விடுமோ என்று அஞ்சத் தோன்றுகின்றது. மிக நுட்பமான முறையில் கிளர்ச்சி எதிர்ப்பரசியலை எம்மீது பேரினவாதம் தொடுத்திருக்கின்றது. மே 2009 இன் பின்னர் தொடுக்கப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பரசியல் தமிழ்த் தேசியம், தாயகம் சார்ந்த கருத்தியலை கட்டுடைக்கின்றது. இக் கட்டுடைப்பு தமிழர்களின் ஆயுதப் போராட்ட அரசியலின் ஏற்புடைத்தன்மையை சர்வதேசத்திலும் தாயகத்திலும் வலுக்குறைப்புச் செய்கின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசியல் வெற்றிடத்தை பிற சக்திகள் தத்தமது நிகழ்ச்சித் திட்டங்களிற்கு பயன்படுத்துகின்றனர்.
     அன்னிய அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள், அது மேற்குலகமாயிருக்கலாம், இல்லாவிடின் அயல் நாட்டுத் திட்டமாக இருக்காலாம். இவை மக்களை தமிழ்த் தேசிய மைய நீரோட்டத்திலிருந்து விளிம்பு நிலைக்கு கடத்திச் செல்வதாக அமைகின்றது.
     கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் கட்டுடைப்புக்கள் ஏற்படுத்துகின்ற அரசியல் இயங்கு தள வெறுமைகள் விடுதலைப் போராட்டத்தை திட்டமிட்டு மலினப்படுத்துவதாக அமைகின்றது. இவ் மிக நுட்பமான கிளர்ச்சி எதிர்ப்பு உத்திக் கட்டமைப்புக்கள் இன அழிப்பின் நீட்சியாகவே நோக்கப்படவேண்டும். இன அழிப்பு ஒடுக்கு முறைகளிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டுமாயின் எதிர்ப்பரசியலுக்கான அரசியல் வெளி உருவாக்கப்பட்டு, போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. மக்கள் அணிதிரள்தல், கீழ் இருந்து மேல் நோக்கி நகருகின்ற, உள்வயப்படுத்துகின்ற போராட்ட உத்தியானது, தமிழ் விடுதலையை அறமயப்படுத்துவதோடு ஏற்புடைமைத் தன்மையும் வழங்குகின்றது.
     இன்றைய இவ்வுரை இன அழிவின் பின் ஒரு சமூகம் சர்வதேச சட்ட பொறிமுறைகளைப் பயன்படுத்தி இன அழிவிற்கான நீதியை எவ்வாறு பெற முடியும் அல்லது எவ்வாறான பொறிமுறைகள் சர்வதேச தளத்தில் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது என்பதை ஆராய்கின்றது. இன அழிப்பின் வடுக்களையும், இழப்புக்களின் அகோரத்தையும் சந்தித்த மக்களிற்கு சர்வதேச தளத்தில் உள்ள நீதி சார்ந்த பொறிமுறைகளை விளக்குவதனூடு, விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய வழிமுறைகளாக இவை அமையக் கூடும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. மீண்டும் மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட நீதி சார்ந்த பொறிமுறையினூடு, ஈழ விடுதலைப் போராட்டத்தை அணுகுவதில் சிக்கல்கள் உள்ளதை கருத்தில் எடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. இறுதியாக நடந்தேறிய மக்கள் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா தமிழின அழிப்பில் பங்கேற்றதற்கான சான்றுகள் முன்கொணரப்பட்டு சட்ட நிபுணர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு மாற்றீடான நீதிப் பொறிமுறைகள் காணப்படாதவிடத்து சர்வதேச தளத்தில் ஏற்கனவே உள்ளவற்றை பயன்படுத்துவதற்கு வலிந்து தள்ளப்படுகின்ற நிலைமையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகின்றது.
     மே 2009 பின்னான இலங்கை அரசியல் தளத்தில் போலியாக உருவாக்கப்பட்ட நிலைமாறு காலம் ஏற்கனவே விடுதலைப்போர் முடிந்து ஏற்பட்ட நிலைமாறுகால மாற்றங்களோடு ஒப்பிட முடியாதென்பதோடு இலங்கையின் நிலைமாறுகாலம் உதிரியான ஒற்றை மாதிரியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
     இலங்கை அரச தரப்பு, தென்னாபிரிக்க உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மாதிரியை பின்பற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மாதிரி இலங்கைக்குப் பொருத்தமா? இல்லையா? என்பது பற்றிய ஆய்வுகளைமுடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தமிழ்ப் புத்திஜீவிகள் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
     இவ்வுரை "பின் நிலைமாறுகால நீதி" பற்றிய அறிமுகத்தை வழங்குவதுடன் ஏனைய நாடுகளின் நிலைமாறு கால, பின்-நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் பொருத்தப்பாட்டினையும் ஆராய்கின்றது.
     அரசியல் நிலைமாறுகாலத்தை எதிர்நோக்கும் அரசுகளும், அரசாங்கங்களும் சர்வதேச சட்டத்திற்கு அமைவான ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையினை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகின்றார்கள். இப் பொறிமுறை புவியியல், அரசியல், கலாச்சாரம் சார்ந்து மண்மயப்படுத்தப்பட்ட ஒன்றாக விரிவடைகின்றது. இப் பின்புலத்தில் வௌ;வேறு நிலைமாறுகால, பின்-நிலைமாறுகால மாதிரிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் தென்னாபிரிக்க மாதிரியும் ஒன்று. தென்னாபிரிக்க மாதிரியை விட வேறு மாதிரிகளும் உள என்பதை இங்கு உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இலங்கை அரசு தென்னாபிரிக்க மாதிரியை பின்பற்ற முனைவதற்கான அரசியல் பின்னணி வேறு என்பதையும் இங்கு பகிர விரும்புகின்றேன். போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் ஓர் உள்நோக்கில் இலங்கை அரசு மன்னிப்பை மையப்படுத்திய மீள்கட்டமைக்கும் நீதிப் பொறிமுறையை  வலிந்து சுமத்த எத்தனிக்கின்றது.
     இவ்வுரையில்  முன்வைக்க முயலுகின்ற பின் நிலைமாறுகால நீதி அமைப்பு முறை சிலி என்கிற லத்தீன் அமெரிக்க நாட்டில் பின்பற்றப்பட்டது, நான் ஏன் தென்னாபிரிக்க மாதிரிக்கு மாற்றீடாக இதை முன்வைக்க முயலுகின்றேன் என்பதையும் இவ்வுரையில் காணலாம்.
     கடந்த தசாப்தம், உலக வரலாற்றில் குறிப்பாக, அரசியல் நிலைமாறு காலத்தை எதிர்நோக்கிய, சர்வாதிகார ஆட்சியிலிருந்து சனநாயக நீரோட்டத்திற்கு வந்த நாடுகளில், நிலைமாறுகாலநீதி மிக முக்கிய தேவையாக, தேடலாக, மனித உரிமை மீறல்கள் மலிந்து போன கடந்த தசாப்தத்திலிருந்து நீதி சார்ந்த சுதந்திர, சமத்துவ, சமாதான அரசியல் நீரோட்டத்திற்கு வருவதற்கு ஏற்புடையதாக அமைந்திருந்தது. ஓர் இனப்படுகொலையை மனித உரிமை மீறல் சார்ந்து விவரிப்பது அதன் செறிவுத்தன்மையை மலினப்படுத்துவதாக இருக்கும் என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றேன்.
     இனப்படுகொலை, இன அழிவு சார் சூழலிருந்து பொதுவெளிசார் மைய அரசியலுக்கு வந்த நாடுகளின் நிலைமாறு நீதிப் பொறிமுறைகளையும் இந்நேரத்தில் விமர்சனத்திற்கு அல்லது மீளாய்வுக்கு உட்படுத்தி மீள் வாசித்து எமக்கான, நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை உருவாக்குவது அவசியமாகின்றது. நிலைமாறுகால நீதிக் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை சார்ந்தவர்களை மையப்படுத்தியும் விடுதலை, அடிமைத்தள உடைப்பு, சமத்துவம், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுத்தல் சார்ந்தும் அமைய வேண்டும் என்பதை சர்வதேச சட்டம் வலியுறுத்துகின்றது. இதையே ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமும் வலியுறுத்துகின்றார். நிலைமாறு நீதியில். என்னென்ன உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற சட்டம,; அது குறித்த வரையறைக்குள் இருப்பதை தவிர்த்து நாடுகள் தங்களுக்கேற்ற வடிவத்தில் நிலைமாறுகால நீதிக் கட்டமைப்புக்கள் வௌ;வேறு பரிமாணங்களில் உருவாவதை வரவேற்கின்றன.
     நிலைமாறுகால நீதிக்கான சர்வதேச நடுவம், தனது கொள்கை விளக்கவுரையில் நிலைமாறுகால நீதிக் கட்டமைப்புள் பின்வரும் கூறுகள் உள்ளக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

    முதலாவது – குற்றவியல் வழக்கு

மாந்த நேயத்திற்கு எதிராக, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அமைப்புக்கள், அரசுகள் ஐ.நா. படுகொலை சட்ட வரையறையின்படி ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டிருப்பின் அவர்கள் அனைவரும் சர்வதேச போர் குற்ற விதிகளுக்கு அமைவாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இரண்டாவதாக - இழப்புச் சரிசெய்யும் எதிரீடு

          இவ் இயக்க முறையினூடாக நிலைமாறுகால அரசியலை முன்னெடுக்கும் அரச தரப்புக்களோ அல்லது அரசாங்கங்களோ, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை சீர் செய்யும் பொது நுட்பத்தை உருவாக்க வேண்டும்.

    மூன்றாவதாக  - நிறுவனக் கட்டமைப்பு மாற்றம்

அரச இயந்திர பொறிமுறையினூடு வலிந்து திணிக்கப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட, மனித உரிமை மீறல்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பொறிமுறைநுட்பங்கள், அவற்றை இயக்கும் கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட வேண்டும். இவ்வாறு இன்னொரு முரண் நிலை உருவாகாதவாறும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரம் ஏற்படாதவாறுக்குமான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.

    நான்காவதாக - உண்மை நிலை கண்டறியும் ஆணைக்குழுக்கள்

கடந்த கால மனித உரிமை மீறல் தொடர்பிலும், இனப்படுகொலை, இன அழித்தல் சார்பாகவும் நடந்தேறியவைகளை கண்டடையும் ஆணையங்கள் அமைக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை நடந்ததற்கான மூல காரணங்கள் ஆராயப்பட்டு மீண்டும் நிகழாதிருக்க பரிந்துரைகள் முன்மொழியப்படுதல் அவசியம்.

இவற்றை விட வௌ;வேறு நாடுகள் தத்தம் அரசியல் பின்புலத்திற்கேற்றவாறு இன்னும் ஓரிரு பண்புகளை சேர்த்துள்ளன. ஆவற்றுள் பொதுவாக இனப்படுகொலை நினைவுத் திறத்தை தக்க வைக்கக் கூடிய செயற்பாடுகளையும் நல்லிணக்க முயற்சிகளையும் குறிப்பிட்டுக் கூற முடியும்.
ஆய்வாளர் துழn நுடளவநச நிலைமாறுகால நீதியின் வரலாற்றை மிகச் சுருக்கமாக குறிப்பிடுகின்றார். நிலைமாறுகால நீதியின் பூர்வீகம் சனநாயக அரசியல் கருத்தியலுடன் ஆரம்பிக்கின்றது. கிரேக்க வரலாற்றில் நிகழ்ந்த இரு சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்கின்ற போது தவறிழைத்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஆங்கில, பிரெஞ்சு மன்னராட்சி மீளக்கட்டமைக்கப்பட்ட போதும் நிலைமாறுகால கட்டமைப்பு பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடுகின்றார்.
     நவீனத்துவ அணுகுமுறை இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கின்றது. போரில் தோல்வியடைந்த நாசிப் படைகளின் போர்க்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். 1970 களில் தென் ஐரோப்பாவில் சர்வாதிகார வீழ்ச்சியின் பின் ஏற்பட்ட அரசியல் மாற்று வெளியை குறிப்பிடலாம். இவற்றுள் போர்த்துக்கல், ஸ்பெயின், கிரேக்கம் ஆகிய ஒரு சில நாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஸ்பானிய தேச மாதிரி ஒற்றையான ஆய்வுக்குள்ளாக்கப்படுவது அவசியம் ஏனெனில் அதன் அணுகுமுறை நிலைமாறுகால நீதியின் வரையறைக்குட்பட்டதாக அமையவில்லை.
     1980 களிலே லத்தீன் அமெரிக்க நாடுகளிலே இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெளிச் சென்ற இராணுவ அரசுகள் குற்றவாளிகளைப் பாதுகாத்துக் கொள்ள ஏதுவான பொறிமுறைகளை உருவாக்கி தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். ஆர்ஜென்டினா விதிவிலக்காக நடந்து கொண்டது. போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொண்டனர். பொலிவியாலும் நீண்ட கால இடைவெளிகுப் பின்னர் ஒரு சிலருக்கு போர்க்குற்ற தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேசிலில் போர்க் குற்றவாளிகள் தங்களுக்குத் தாங்களே மன்னிப்பை வழங்கிக் கொண்டார்கள். ஆனால் ளுயழ Pயரடழ மறைமாவட்ட பணியாளர்களின் விடா முயற்சியினால் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். சிலி என்கிற நாடு நிலைமாறுகால நீதியினை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றது.
     கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச ஆட்சியின் இரும்புக் கரங்களிலிருந்து பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி அரசியலில் இணைந்து கொண்டன. இரண்டாம் உலகப் போரின் பின் நிலைமாறுகால வரலாற்று ஆய்வாளர்கள் மிகக் குறைவான போர்க் குற்றவாளிகளே சர்வதேச சட்டத்திற்கு அமைய தண்டிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் பிரதேசத்திற்கு பிரதேசம் நிலைமாறுகால நீதியின் அணுகுமுறை மாறுபட்டதாக காணப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விவசாய நில மீளளிப்பு பற்றி நிலைமாறுகால நீதி கட்டமைப்பில் அதி கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
     ஆபிரிக்க நாடுகளிலும் நிலைமாறுகால நீதியின் பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு மிக முக்கிய நாடுகளாக தென்னாபிரிக்காவையும், றொடிசியாவையும் (சுhழனளையை) குறிப்பிடலாம். றொடிசியாவில் நீதி வழிமுறை செயலமைவுத் திட்டம் வெற்றி பெறவில்லை, காரணம் அப்போது ஆளுநராக இருந்த ஊhசளைவழிhந ளுழயஅநள போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் எவருமே தண்டிக்கப்படக் கூடாது என உடன்படிக்கைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கினார். தென்னாபிரிக்க அரசியல் நிலைமாறு மாதிரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை முற்று முழுதாக வழங்கியது எனக் கூற முடியாது.
     தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த போது, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. கறுப்பினத்தவர் சார்பாக ஆட்சி பீடமேறிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, அதனுடைய போர்க்குற்றம் செய்த தலைமையையும் உறுப்பினர்களைக் காத்துக் கொள்வதற்காக தேசிய கட்சியுடன் விட்டுக் கொடுப்புக்கு உடன்பட வேண்டியதாயிற்று. தேசிய கட்சி மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அக்கொள்கைக்கு உடன்படாது, போர்க்குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்தது. இச்சந்தர்ப்பத்தில் தேசிய கட்சி, ஆபிரிக்க தேசிய காங்கிரசை பொறிக்குள் சிக்க வைக்க சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகச் சாதுரியமாக தேசிய கட்சி பயன்படுத்தி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், உறுப்பினர்களையும் அவர்கள் செய்த போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தலைமையையும், உறுப்பினர்களையும் காத்துக் கொள்வதற்காக விட்டுக் கொடுப்பு அரசியலுக்கு இணங்கியது. இவ்வாறு உண்மை கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மக்கள் சார்பாக ஆட்சிக் கதிரையேறிய கறுப்பினத்தவர்களாலே முடக்கப்பட்டது. பாதிக்கப்பட்வர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டார்கள். சாதாரணமானவர்கள் இரட்டைச் சுரண்டல் அரசியல் பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டார்கள் பெரும்பாலான மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
     உண்மை கண்டறியும் ஆணையங்களின் பங்களிப்பு நிலைமாறுகால நீதிக் கருத்தியலுக்கும், செயன்முறைக்கும் மிக அவசியமானது. உண்மையைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளாகக் கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் அல்ல என நிரூபிக்கப்பட்டு சமூக நிரோட்டத்தில் சுமூக வாழ்வுக்கு திரும்ப முடியும். குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என அடையாளப்படுத்தப்படுதல் இன்றியமையாதது. அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான, நீதிக்கான போராட்டம் சர்வதேச ஏற்புடைமைத் தன்மையையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றது.  போர்க்குற்றம் செய்தவர்களை இனங்காணுதலும் உண்மை கண்டறியும் ஆணையங்களின் பொறுப்பிலேயே உள்ளன. இனங்காணப்பட்டவர்களை தண்டிக்கும் பொறுப்பு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நீதிக்குழுக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
     நுசஎin னுயடல உண்மை கண்டறியும் ஆணையங்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் உண்மையை கேள்விக்குட்படுத்துகிறார். ஆணையங்கள் போர் நடந்த நாடுகளில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்கிற காரணத்திற்காக கட்டமைக்கப்படும் உண்மையின் உண்மைத் தன்மையை மீள் வாசிப்புச் செய்தல் அவசியமாகின்றது என்கிறார். நேர்மையுடன் உண்மையை, ஏற்றுக் கொள்ள அரச இயந்திரங்கள் தயாராக இருக்கின்றதா என்றால் அது சந்தேகத்திற்குரியது இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தென்னாபிர்க்க மாதிரியை குறிப்பிடலாம். உண்மை கண்டறியும் ஆணையங்கள் எப்பேர்ப்பட்ட நிதியங்களினால் வழிநடத்திப்படுகின்றன. என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது. ஊயவா ஊழடடiளெ ன் கருத்துப்படி பெரும்பாலான ஆணையங்கள் போர்க்குற்றவாளிகளின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை. உண்மை கண்டறிவது நல்லிணக்கத்திற்கு இட்டுச்செல்லும் என்ற வாதம் கேள்விக்குட்படுத்தப்படலாம். காரணம் தேசத்தையும், மக்களையும், சமயத்தையும், சங்கத்தையும் காப்பதற்காக அரச நிறுவனங்களினால் அரச ஆதரவுடன் சண்டையிட்டவர்கள் ஒரே இரவில் உண்மையைக் கண்டறியும் ஆணையங்களினால் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றார்கள். மக்களைப் பாதுகாப்பதற்கு பதில் அவர்களை கொன்று குவித்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்படுகின்றார்கள்.
     இலங்கையில் நான்கு சந்தர்ப்பங்களில் உண்மையைக் கண்டறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2001ல் சனாதிபதியால் நியமிக்கப்பட்ட இன வன்முறை தொடர்பில் உண்மை கண்டறியும் ஆணையம் இது 1981 லிருந்து 1984 வரையிலான வன்முறைச் சம்பவங்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து மீள்நிலைப்படுத்தல் தொடர்பில் ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் நன்மையடைந்ததாக ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் 1983ல் நடைபெற்ற இனஅழிப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டது.
     1995 ல் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா அம்மையாரினால் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது 1988 லிருந்து நடந்த சம்வங்களை ஆவணப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இக்குழு 30,000 சம்பவங்களை ஆவணப்படுத்தியது இது தவிர இவ் ஆணைக்குழுவின் கொள்கைப் பரப்புக்குள் வராத 16,000 சம்பவங்களும் ஆவணப்படுத்தப்பட்டு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     இக் குழு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைந்தது அதற்கமைய கண் துடைப்பு நோக்கத்திற்காக ஓரிரு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பெரும்பாலானோர் தண்டனையிலிருந்து தப்பித்தனர். ஆனால் இக்குழுவின் பரிந்துரைகள் செயன்முறைப்படுத்தப்படவில்லை என இக் குழிவின் முன்னாள் செயலாளர் ஆ.ஊ. இக்பால் குறிப்பிடுகின்றார். அப்போதைய இராணுவத் தளபதியின் தலையீட்டினால் பரிந்துரைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. குற்றவாளிகள் அரச நிறுவனங்களினால் பாதுகாக்கப்பட்டு மீண்டும் அதே பணிக்காக அமர்த்தப்பட்டார்கள். ஆ.ஊ. இக்பாலின் கருத்துப்படி தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கடத்தலையும், காணாமல் போகச் செய்தலையும் நிறுவனமயப்படுத்தி ஏற்புடைமைத் தன்மை கொடுத்து அரசுக்கு எதிரான குரல்களை அடக்கப் பயன்படுத்திக் கொண்டது.
     2006ல் அரசு, சனாதிபதி விசாரணைக்கான ஆணையத்தை உருவாக்கியது இவ் ஆணையம் 15 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இவ் ஆணையத்தை மேற்பார்வை செய்வதற்கென சர்வதேச மூத்தோர் நிபுணர் குழு சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதன் அறிக்கை இதுவரைக்கும் வெளியிடப்படவில்லை. மூத்தோர் நிபுணர் குழு விசாரணை ஆணையம் தொடர்பாகவும், அதன் நேர்மைத் தன்மை, சாட்சிகள் பாதுகாக்கப்படுதல் தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்தது. ஆணையத்தின் வெளிப்படைத் தன்மை இன்மை, அரசியல் தலையீடுகள் காரணமாக தனது சேவைகளை நிபுணர் குழு இடையிலேயே நிறுத்தி பின்வாங்கிக் கொண்டது.
     வாசுகி நேசையாவின் கருத்துப்படி இலங்கை அரசாங்கங்களினால் உருவாக்கப்படும் இவ் ஆணையங்களின் வரலாறு, அந்தந்தக் காலங்களில் பதவியில் இருந்த அரசம் அரசாங்கங்களும், அதன் நிறுவனங்களும் இவ் ஆணையங்களை தங்களின் அரசியல் லாபம் கருதி கையாண்டுள்ளதுடன் அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் அடக்குவதற்கும் பயன்படுத்தியுள்ளது.
     மே 2010ல் இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இவ் ஆணைக்குழு இனப்பிரச்சனைக்கான, 2002 போர் நிறுத்தம் முறிவடைந்ததற்கான காரணங்களை அறிய சனாதிபதியினால் விதறிந்துரைக்கப்பட்டிருந்தது. இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முற்றிலும் பிழையானவை என பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தன. அவற்றுள், யுஅநௌவல ஐவெநசயெவழையெட, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ் அமைப்புக்கள் இலங்கை அரசின் அழைப்பையும் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. போர்க்குற்றம் தொடர்பில் குற்றவாளிகளை விசாரிக்க இவ் ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. மாறாக குற்றவாளிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக இதன் செயற்பாடுகள் அமைந்ததாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டனர்.
     சர்வதேச நெருக்கடிக் குழுமம், இலங்கை அரசு நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டுக்கு தயாரில்லை என பகிரங்கமாக அறிவித்தது. பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வெளியில் ராஜபக்ச அரசு அதிகாரத்தை குவிவுபடுத்தி மையத்தை நோக்கி நகர்த்தி ‘ஒன்றுபட்ட் இலங்கை’ என்ற பரப்புரைக்கூடாக சிங்கள பௌத்த தேசிய வாதத்தை முன்னிறுத்தியது. தமிழர்களின் விடுதலைக்கான பிரச்சினையை சிறுபான்மை பிரச்சினையாக மட்டுமே அணுக முயற்சித்தது. அதை ஒரு தமிழ்த் தேசியம் சார்ந்த பிரச்சினையாக நோக்கவில்லை. இலங்கை அரசு போரில் ஒருவரும் இறக்கவில்லை என்று மறுதலிப்பைஃமறுப்பை ஒரு பொறிமுறையாக பயன்படுத்தி வருகின்றது.
     மே 2009 ற்குப் பின்னர் அரசு மிக முனைப்பாக செயற்படுத்தி வரும் அரசியல் திட்டங்கள், தமிழ் மக்களின் நிலப்பறிப்பு, அரசியல் கைதிகளின் தொடர் தடுத்துவைப்பு, இன்றும் நடைபெற்று வரும் காணாமல் போதல்கள், வன்னிப்பெருநிலப்பரப்பில் கணவர் இன்றி வாழும் பெண்களின் அவல நிலை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிராகரிக்கப்படும் உளவியல் ஆற்றுப்படுத்தல், வடக்குக் கிழக்கில் இடம்பெற்று வரும் இராணுவக் குவிப்பு, சாதாரண வாழ்வில் இடம்பெறும் இராணுவத் தலையீடுகள், நிரந்தர உயர் பாதுகாப்பு வலயங்கள், தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் இவை எல்லாமே. இலங்கையில் நிலைமாறுகால நீதிக்கான வெளி மூடப்பட்டுள்ள நிலையை அடுத்துக் காட்டுகிறது. இவ் அரசயல் வெளியில் நான் பின்-நிலைமாறுகால நீதிக் கருத்தியலை முனைவைக்கின்றேன்.
நிலைமாறு கால கட்டமைப்பு ஓரிரு நாடுகளில் மட்டுமே மிகச் சொற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தது. நீதியைப் பெற்றுக் கொடுத்ததை விட குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கொடுத்தது எனலாம். நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் பெரும்பாலானவை முதிர்ச்சி பெறாமலேயே கிடப்பில் போடப்பட்டன, முடக்கப்பட்டன. அத்துடன் தொடர்ச்சியாம நீதி மீளப் பெறுமுறை நிலைமாறுகால நீதியில் மிகக் குறைவாக காணப்படுவதாக ஊயவா ஊழடடiளெ கூறுகின்றார். பாதிக்கபட்டவர்களுக்கான நீதி அடுத்து வரும் அரசாங்களிலேயே தங்கி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நீதி அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இவ் நிலை மாற வேண்டுமாயின் இன்னொரு நீதிப் பொறிமுறை அவசியமாகின்றது.
அவ் மாற்றீடான நீதிப் பொறிமுறைக் கருத்தியலாக பின்-நிலைமாறுகால நீதி உருவாகின்றது. இக் கருத்தியல், செயன்முறைக் கட்டமைப்பு இலங்கைக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.

     நிலைமாறுகால நீதி சனநாயக ஆட்சியை நிறுவுவதற்கு தேவையான அடிப்படை பண்புகளே அவசியம் என்று கருதுகின்ற நிலையில் பின் நிலைமாறுகால நீதி, இந் நீதி பொறிமுறை மூலம் பெறப்படுகின்ற சனநாயகத்தின் தகுதியைஃதரத்தை உற்று நோக்குகின்றது. அதேவேளையில் மன்னிப்பு பொறிமுறையை பயன்படுத்தி தப்பிக்கும் உத்தியை இல்லாமல் செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலிறுயுத்துகின்றது.
     பின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறை அரச இயந்திரங்களிலே தங்கியிராமல் தனி நபர்களால் உருவாக்க கூடியது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களால் இத்தனிநபர்கள் உதிரிகளாக இருக்கலாம். கூட்டாகஃகுழுமமாக இருக்கலாம். இவர்கள் ஒரு நாட்டின் இறையாண்மை வரையறையை கடந்தும் உட்பட்டும் இருக்க முடியும்.
     அரச, அரசாங்கம் சாராத பொறிமுறை பல பங்காளிகளைக் கொண்டது, அரடவi-உவைநனஇ அரடவi-யஉவழசஇ யனெ அரடவi சநகநசநவெயைட.
     பல பரிணமா முறைகளைக் கொண்ட ஒரு பொறிமுறையில் ஒரு நாட்டின் இறையாண்மைக்குள்ளிருந்து நீதியை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மை வரம்புகளைக் கடந்து அதன் பூகோள எல்லைகளைக் கடந்து இன்னொரு பொதுவெளியில் நீதி கோரக்கூடிய வழிமுறைகளை உருவாக்கின்றது. நாடு கடந்து சர்வதேச அரசியல் வெளியில் செயற்படுவதால் சர்வதேச ஏற்புடைமையை சர்வதேச விதிகளுக்கு அமைய உள்வாங்கிக் கொள்கிறது.
According to Cath Collins post-transitional justice has the following chractieritics:
Post-transitional justice activity, in the form of continued or renewed contestation over accountability of past HRVs, can observed in a number of present day post-transitional settings in Latin America. Six chractiristics of post-transitional justice distinguish it clearly from the transitional justice school of thought. Frist, where transtitional justice is centrally concerned with attaining and preserving the minimum institutional requirements of formal democracy, post-transitional justice focuses of subsequent questions of the quality, reach, and perfectability of that democracy. Second, post-transtitional jsutce accordingly questions the comprehensiveness and suffiency of intial transitional justice compromises, particulary the renuncialtion of prosecution over HRVs. Third, since most subsequent administrations have regarded official renunciations of prosecution as irrevocable, post-transitional justice has been largely non-state, driven by private actors operating both ‘above’ and ‘below’ the state. Fourth. When contrasted with state-driven transitional policy making, post-transitional justice is notably multi-sited, multi-actor, and multi-referential. A multiplicity of forms and sites can be used, depending of such actors as actor expertise, goals, resource access and perceptions of likely success. Fifth, this multiplication of potential forms, sites, and actors means that post-transitional justice initiatives come to be adopted in pursuit of a wide variety of possibly divergent aims. Sixth, post-transitional justice activity is empirically more likely than transitional justice policy making to have an ‘internationalized’ character, encompassing norms and sites of contestation beyond the domestic sphere”.

இலங்கையில் இனி ஆட்சியமைக்கப் போகின்ற அரசாங்கங்கள் எமக்கான நீதியை பெற்றுத் தரக்கூடும் என எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றது ஆகவே பாதிக்கப்பட்ட நாங்கள் எங்களுக்கான நீதிப் பொறிமுறையை இலங்கை அல்லாத இன்னுமொரு பொது அரசியல் வெளியில் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. இப் பொறிமுறைக்கு மிகச் சிறந்த உதாரணமாக லத்தீன் அமெரிக்க நாடான சிலி விளங்குகின்றது. சிலி நாட்டின் பின் நிலைமாறுகால நீதிக் கட்டமைப்பு தமிழர்களை பொருத்த வரையில் அதிக அனுகூலங்களை பெற்றுத் தருவதுடன் பக்கச் சார்பற்ற பொறிமுறையை உருவாக்க வழிகோலும். ஆகவே புத்திஜீவிகள் சிலி நாட்டின் மாதிரியை ஆய்ந்து விதந்துரைக்க வேண்டிய காலக் கட்டாயத்திற்குள் உள்ளீர்கள்.

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை