சில கவிஞர்களும் அவர்களின் வழிஞ்சல்களும்……
முன்னர் எல்லாம் என் ஊர் பக்கத்தில் பொம்பள பிள்ளையோ அல்லது மனுஷியோ பஸ்ல ஏறினா பேரூந்து ஆசனத்தில இருக்கிற ஆம்பிளைகள் எழும்பி இடம்கொடுப்பாங்க… அதாவது மத்தப் பொண்ணுகளையும் தாயாக, தங்கையாக மதித்த காலமது…. இப்ப என் ஊர் பக்கம் மட்டுமல்ல இங்க கொழும்புல பஸ்ல ஏறினா கூட யாருமே எழும்பி இடம் தருவதில்லை. கர்ப்பிணிகளுக்கும், பௌத்த பிக்குக்களுக்கும் (இங்கு கவனிக்குக… வேறு மத தலைவர்களுக்கல்ல) மட்டும் தான் இடம் கொடுப்பாங்க… இது பெண்கள் சம உரிமை கேட்டதன் விளைவா இல்லை இப்பத்தைய ஆம்பிளைகள் பொண்ணுகள விட பலவீனமாகிட்டாங்களா என்பது விடையில்லா புதிர். இது ஒரு பக்கமிருக்க இந்த சந்துல சிந்து பாடுறவங்க சிலரும் இருக்கிறாங்க…. அதாங்க நிரம்பி வழியில பஸ்ல பொண்ணுங்களோட உரசிரதக்கென்றே வாறவங்க… அடிக்கடி தெருவில இருக்கிற சொறி நாய்கள் இப்படித்தான் சுவத்திலயும் உரஞ்சுவத பார்த்திருக்கிறன்… இதுல இருக்கிற முக்கிய விஷயம் என்னண்டா இந்த பொம்பள பிள்ளைகயோட உரசிறது இளசுகள் என்டாலும் பரவாயில்ல… சில பழசுகள் தான் உரசுதுகள்….. இது தேவையா இதுகளுக்கு பாடையில் போற வயசுல…??? இதே போல தானுங்க இந்த சமூக ஊடகங்களிலும்….. குறிப்பா முகந...