Posts

Showing posts from September, 2012

புலிகளின் வதை முகாமில் பெண்கள்

தமிழர்களைப் பொறுத்தவரை வீரம் என்பது மார்பில் வீரத்தழும்பு வாங்குவது. இது ஒருவர் பற்றி கதைப்பதிலும் அவர்களை விமர்சிப்பதிலும் பின்பற்றுவது தான் தமிழனுக்கு அழகு. ஒருவர் பலமின்றி இருக்கும் போதோ அல்லது அவதானமின்றி இருக்கும் போதோ அல்லது அஞ்ஞான வாசம் செய்யும் போதோ முதுகில் குத்துவதல்ல. அதேபோன்று அன்று விடுதலைப்புலிகளுடன் சேர்ந்திருந்து நன்மைகள் பெற்று நம்பிக்கைக்குறியவர்களாக இருந்துவிட்டு இன்று அவர்கள் இல்லை என்றவுடன் தமது கிறுக்கல்கள் மூலம் முதுகில் குத்துகின்ற பலர் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். எனது முகநூலில் பகிரப்பட்ட அவ்வாறான ஒரு கருத்தே இது http://padippakam.com/document/UTHR/uthcr002.pdf

Commonwealth Parliamentarians on safeguarding Democracy, the Rule of Law and HR

http://www.youtube.com/watch?v=EbGw0NJYqvA

தேவதைகளின் தீட்டுத்துணி

தேவதைகளின் தீட்டுத்துணி

கிழக்கில் உதிக்காத சூரியன்

கிழக்கில் உதிக்காத சூரியன்

(என்னை) சாதிக்க வைத்தவனே (நீ) சாதித்ததென்ன?

Image
மரணித்துவிட்ட -நம் காதலின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று...... மதமெனும் மதம் கொண்டவர்கள் மத்தியில் முதுகெழும்பில்லாமல் புறமுதுகு காட்டி ஓடியவன் நீ பெண்ணாயினும் போராடி தோற்றவள் நான் உனக்கு தெரியுமா? - நம் காதலில் மன்னித்துவிடு – என் உண்மைக்காதலில் - நான் தோற்றாலும் பேடி நீ என்னை மாற்றியிருக்கின்றாய் பல வழிகளில்....... பூவைக் கூட பறிக்க யோசிக்கும் - நான் பலருடைய மனங்களை கூட – என் வார்த்தைகளினால் புதைக்கின்றேன் கடிக்கும் ஈயைக் கூட அடிக்காதவள் - என் செயல்களினால் பலரின் உணர்வுகளைக் கூட கொல்லத்தயங்குவதில்லை மழைத்துளிக்கு ஒதுங்கும் - நான் நனைகின்றேன் அடைமழையில் - என் விழி ஈரம் யாரும் பார்த்துவிட கூடாதென்று..... என் குடும்பமே உலகம் - என்று வாழ்ந்த நான் - இன்று வெளியுலகத்தில் எனக்கென்று – ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றேன். உன்னாலான இம்மாற்றங்கள் கூட என்னை..... தைரியசாலியாக தன்னம்பிக்கை கொண்டவளாக அடுத்தவர் நிமிர்ந்து பார்ப்பவளாக செதுக்கியிருக்கிறது. ஒருவேளை உன் கரம் பற்றியிருந்தால் - ஒரு கோழைக்கு மனைவியாக வாழ்ந்திருப்பேன் கடவுள் அருள் தப்பிவி...

ஏன் என்னைப் பார்த்தான்?

Image
அலுவலக தாமதத்தினை சரிசெய்ய சன நெருசலை கூட பொருட்படுத்தாமல் - பேருந்தில் ஏறினேன் ஊர்கின்ற பேரூந்து – என் எரிச்சலை கூட்ட – என்னை இரு கண்கள் துளைப்பதனை உணந்து என் பார்வையை திருப்பினேன்... கைகொள்ளா கருமையான வாரப்பட்ட சுருள் முடி அழுத்தமான சிவந்த உதடுகள் பெண்மை நிறைந்த மான் விழிகள் - என அழகனாய் தான் இருந்தான் - அவன் விழியின் பார்வை மட்டும் - என் நெஞ்சைப் பார்ப்பதாக உணர – என்னை அறியாமல் கையால் தடவி – பின் குனிந்து பார்த்தேன் - ஏதாவது என் இளமை தெரிகிறதா? என.... நெரிசல் ஒரு புறம் - அவன் குத்தும் பார்வை ஒருபுறம் - என அவஸ்தையாயிருந்தாலும் - அவன் அருகில் போக வேண்டும் என்ற – என் பெண்மைக்குரிய ஆவல் மட்டும் அடங்கவேயில்லை.. தரிப்பிடங்களை தாண்டி குறைந்துவிட்ட சனங்களிடையே அவனை நோக்கி மெல்ல நகர்ந்தேன் - எனது அலுவலக தரிப்பிடத்தினை சமீபிக்க – என் கால்களில் கூட – புரியாத ஒருவித வேகம் அப்பாடா நெருங்கி விட்டேன் - என் இன்றைய சங்கல்ப்பம் ஈடேறப்போகிறது – அவன் கன்னங்களில் - ஒரு கிள்ளு கைகளில் - ஒரு முத்தம் எப்படியோ சாதித்துவிட்ட திருப்தியில் - பேரூந்தை விட்டிறங்க...

படித்ததில் பிடித்தது (01) - ‘துன்பத்தின் பூக்கள்’ (Fleurs du mal) – Chrles Baudelaire

Image
சார்ல்ஸ் போதலயரின் “துன்பத்தின் பூக்கள்” கவிதைத் தொகுப்பில் நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த சில வரிகள்... “அந்நியன்” என்ற இந்த வசன கவிதையில்,   சொல் மர்ம மனிதனே நீ யாரை அதிகம் விரும்புகிறாய் ? தாயை ? தந்தையை ? சகோதரியை ? சகோதரனை ? - எனக்குத் தாயுமில்லை , தந்தையுமில்லை , சகொதரியுமில்லை , சகோதரனுமில்லை . - உனது நண்பர்கள் ? - இதுவரையும் நான் அர்த்தம் அறியாத ஒரு சொல்லை உபயோகித்தல்லவா நீங்கள் பேசுகிறீர்கள் . - உனது தேசம் ? - அது இவ்வுலகில் எங்கிருக்கிறதென அறியேன் . - அழகு ? - ஓ அதுவா ,தேவதையானதும் அழிவற்றதுமான அதில் வேண்டுமானால் நான் விருப்புறுவேன் .  - தங்கம் ? - நீங்கள் கடவுளை வெறுப்பதுபோல் , நான் அதை வெறுக்கிறேன் .  - அப்படியானால் , அசாதாரண அந்நியனே , நீ எதைத்தான் விரும்புகிறாய் ?  - நான் மேகங்களை விரும்புகிறேன் . அதோ அங்கே .. இங்கேயெல்லாம்… தாண்டிச் செல்லும் மேகங்களை , அற்புதமான அந்த மேகங்களை நான்விரும்புகிறேன் . —– “ எதிரி” என்ற தலைப்புடனான கவிதையில் – ஓ ! உளஉபாதையே, உளஉபாதையே, காலம் வாழ்வை உண்கிறதே. புலப்படாத எதிரியான எ...

பிரியும் போது புரியும் பிரியம்

Image
அப்பாவிடம் சலுகைகள் பெறும் போதோ அம்மாவின் சமையலை ருசிக்கும் போதோ அண்ணாவை வீணாக கோபப்படுத்தும் போதோ தம்பியிடம் செல்லமாக சண்டையிடும் போதோ – நான் நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று...... நண்பிகளுடனான அரட்டையின் போதோ உறவினர்களுடனான கிண்டல்களின் போதோ அயலவர்களுடனான பகிர்தல்களின் போதோ – நான் நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று...... அதிகாலை குட்டித் தூக்கம் அம்மாவின் சூடான கோப்பி என் கூண்டுக்கிளிகள் செல்ல நாய்க்குட்டி தினமும் நான் எண்ணுகின்ற தோட்டத்துப் பூக்கள் மொட்டைமாடி ஊஞ்சலாட்டம் ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவல்கள்; - என நீளும் எனது விருப்பப் பட்டியல்களை – நான் நினைத்ததில்லை இழப்பேனென்று... என் குடும்பத்தவர்களின் அன்புத் தொல்லைகளையும் செல்லக்கிண்டல்களையும் பாசக்கடிகளையும் - ஏன் என் சின்ன சின்ன ஆசைகளையும் கூட சுமையாக நினைத்த நாட்களுண்டு இன்று தனிமையான - என் விடுதி வாழ்க்கையில் - இந்த சுகமான சுமைகள் மீண்டும் வராதா? என ஏங்குகின்றேன் இப்போது தான் புரிகிறது... புரியாத பிரியம் பிரியும் போது புரியும் என்று மீராபாரதி

தெருத்தூசியோனைக்கு செதுக்கிய கவிதை....

Image
Road sweeper Clean the streets in the rain Brush, lift rubbish, walk Do it all over again Switch the brain off The brush seems shackled To my hands No time to stand and admire The moving bleak picture of the rain Of the wet urban concrete landscape The dirt at the edge of the kerbs Sweep them into little bundles Manageable dirty mounds That I shovel up in the rain The rain wash the roads-edges Behind me The barrow begins to fill Fill from my graft A working graft that uses muscles No trade- craft that I've got No paper of knowledge I don't need knowledge For what I've been taught Provide for my family The best that I can Never be bitter for what The world has offered me I'm just an ordinary working man That works through the bad And the good spells of life Can you tell that I take pride in my work? The side of the road is per...

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்(01) – தெருத்தூசியோன்

Image
எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார். 'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார். கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர், 'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்...

பாதுகாப்பு கருத்தரங்கு – 2012

Image
'போருக்கு பிந்திய ஐந்து காரணிகள்” என்ற கருப்பொருளில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாதுபாப்பு கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் 63 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 30 வருட போர் முடிவின் பின்னரான இலங்கையின் மீள் நிர்மாணம், மீள்குடியேற்றம், மீள்வாழ்வு, மீள்ஒருங்கிணைப்பு , மீளிணக்கம் என்ற ஐந்து விடயங்களை உள்ளடக்கியதாக “5சு” என்ற தலைப்பில் மேற் கூறப்பட்டவை பற்றி ஆராயப்பட தீர்மானிக்கப்பட்டது. நேற்றைய முதல் நாள் கருத்தரங்கில் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கடடுமானம் என்ற இரு காரணிகள் தொனிப்பொருளாக தேர்தெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடக்க நிகழ்வாக முன்னாள் ஜெனரல் ஜே.ஜயசூர்ய வரவேற்புரையுடன் கருத்தரங்கினை ஆரம்பித்த வைத்தார்.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மாநாட்டின் தலைமையுரையினை வழங்கினார். இரு கட்டங்களாக இடம்பெற்ற முதல் நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வில் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிறைவேற்றதிகாரி திரு.எஸ்.பி.தேவரட்னஈ மேஜ...

மிஸ் பண்ணப் போவதில்லை

Image
இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை.... விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அ...