என் ஒரு தலைக்காதல்
காவியங்களாகின்றன -சில காதல்கள் வரலாறாகின்றன - சில காதல்கள் அழியா படைப்புகளாகின்றன – சில காதல்கள் பந்த பாசங்களை பகைக்கின்றது சாதி மதங்களை இணைக்கிறது பத்தினிகளை படிதாண்ட வைக்கிறது – ஏன் தற்கொலைகளில் கூட முடிகிறது - இந்த காதல் ஒருவனை ஞானியாக்குகிறது ஒருவனை கவிஞனாக்குகிறது குடிகாரனாக்குகிறது... கொலைகாரனாக்குகின்றது.... ஆனால்.... முகம் பார்க்காத பதவி கேட்காத பணம் தேடாத – இதுரை சொல்வதற்கு கூட தைரியம் தராத மனதில் பூட்டி வைத்த - என் ஒரு தலைக்காதல் மட்டும் - என்னை தலையசைக்க வைத்துள்ளது திருமணத்திற்கு.... - என்னவன் இன்னொருத்திக்கு சொந்தமானவன் - என அறிந்த போது..