Posts

Showing posts from July, 2025

அன்பெனும் அறம் !

Image
நேற்று மாலையிலிருந்து ஒருவிதமான வெப்பம் என்னுள் பரவுவதை உணர்கின்றேன். என்னுடைய நெருங்கிய நண்பியொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையினாலும் குடும்பத்தினரின் அரவணைப்பிலும் காப்பாற்றப்பட்டுவிட்டார். கடந்த சில நாட்களாக நான் நாட்டில் இல்லை என்பதால் குறிப்பிட்ட நண்பி என்னை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியாதிருந்துள்ளது என்பது என்னுடைய வட்சப் அழைப்புக்களின் பதிவிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.  நானும் அவளும் பதின்ம வயதிலிருந்தே நல்ல தோழிகள். என்னுடைய குடும்ப உறுப்பினர்களை தாண்டியும் ஓர் ஆழமான உறவு உண்டெனில் அவளிடம் மட்டும் தான். நான் இந்த நிமிடம் எங்கிருக்கின்றேன் என்பது தொடங்கி என் மனதிலுள்ள இரகசியங்கள் வரை அறிந்த ஒருத்தி. இருவரும் பேசுவதென்றாலும் மணிக்கணக்கில் பேசுவோம் ஊர் சுற்றுவதென்றாலும் இருவரும் தான் சேர்ந்து சுற்றுவதுண்டு. ஆனால் இரு வீட்டாக்களும் எங்களை பகிடி பண்ணுவது போன்று இருவரும் குணவியல்பில் எதிர்மறையானவர்கள். இரு வீட்டாரும் எப்படித்தான் நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கின்றீர்களோ என்று வியக்குமளவு இரசனை, பண்பு, அனுகுமுறைகள், தொழில் என...