Posts

Showing posts from 2016

அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு......

Image
அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு... இன்றுடன் என் வாழ்க்கையின் புதியதொரு வருடத்தில் காலடி வைக்கின்றேன். இதற்கு முதற்கண் அந்த இறைவனுக்கும் எனது உள பலமாயிருந்து வழிநடத்திக்கொண்டிருக்கின்ற உங்கள் இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். இத்தனை வருடங்கள் என் ஆயுளை கடந்துவிட்டேன் என்பது சற்றே வலி கலந்த மகிழ்ச்சியே. வலி - இன்னும் சில காலம் தான் உள்ளது என்பதற்கு மகிழ்ச்சி- இத்தனை வருடம் வாழ்ந்துவிட்டேன் என்பதால்….  கடிதங்கள் என்பது தூரங்களின் வடிவம்…. அதனால் தான் என்னை விட்டு தூரங்களில் இருக்கின்ற உங்களிருவருக்கும் விடுதியிலிருந்து கடிதம் எழுதுகின்றேன். என்னால் வார்த்தைகளை விடவும் வரிகளில் தான் உணர்வுகளை கொட்ட முடிகின்றது என்பது இன்னுமொரு காரணம். அப்பா, அம்மா உங்களிருவருக்கும் என் மீதான இரு தனித்தனி கனவுகள் உண்டு. அதில் அப்பா உங்களது என் கல்விசார் கனவினை மிகவும் அண்மித்துவிட்டேன். அம்மா உங்களின் என் வாழ்க்கைத்துணை குறித்த கனவிற்கு விரைவில் என் சம்மதங்களை அளிப்பேன். ஆனால் அதற்கு எனக்கு சில காலங்கள் தேவை சில காயங்களை ஆற்றுவதற்கு…..  நானும் தம்பியும் ஒவ்வொரு பிறந்த தினத்திலும் உங்களுக...

கடக்கின்றேன்......

Image
சமூக ஊடகங்கள் செய்திகளை சேர்ப்பதும் பெறுவதும் என்கின்ற நிலை மாறி இன்று பாலியல் தொந்தரவு கொடுக்கின்ற இடமாக அல்லது பெண்ணோ ஆணோ பாலியல் சேட்டைகளை புரிவதற்கான தளமாகிக்கொண்டிருக்கின்றது. இத்தகையானதொரு சம்பவத்தினை நானும் நேற்றிலிருந்து கடந்துகொண்டிருக்கின்றேன். பொதுதளமொன்றில் பணியாற்றும் போது எமது தொடர்புகள் சமூக ஊடகங்களின் ஊடாக தான் விரிவடைகின்றது.  இங்கு ஒருவரை நண்பராக அல்லது செய்திபெறுநராக அங்கீகரிக்கும் போது அந்நபருடைய சுயமுகங்கள் நமக்கு தெரிவதில்லை. தொடர்பில் இணைக்கின்ற போது யாரும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதை அறிந்துகொள்வதுமில்லை. இப்படியாக என்னுடைய முகநூலில் இணைந்த நபர் ஒருவர் நேற்றிரவு மரியாதையற்ற முறையில் தகாத வார்த்தைகளுடன் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய முகநூலினை போய் பார்த்த போது மனைவி பிள்ளைகளுடன் போட்டோக்களும் போடப்பட்டிருந்தன. “மரியாதையுடன் பேசுங்கள் அண்ணா அல்லது உங்கள் மனைவிக்கு செய்தியனுப்புவேன் என கூறியதற்கு என்னை கண்டுபிடிக்க முடியாது என்று பதிலளிப்பினார். இதற்காகவே நேற்றைய சமூக ஊடகங்களில் படங்களை போட்டு இவர்களை தெரியுமா? என பதிவிட்டிருந்தேன். பல...