அன்பின் அம்மாவிற்கு.......
அன்பின் அம்மாவிற்கு நான் இங்கு விடுதியில் நலம். நீங்க > அம்மம்மா> தம்பி எல்லோரும் எப்படியிருக்கிறீங்க? அப்பா இரண்டு நாளைக்கு முதல்ல என்னோட ஸ்கைப்பில கதைச்சவர். இந்த ஏப்பிரல்ல எப்படியும் லீவுக்கு ஒரு தடவை வந்து போக நினைக்கிறாராம். வீட்டுக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை கோல் பண்ணி கதைப்பாராம். அண்ணாவும் இரண்டு தரம் போனில் பேசினவர். எனக்கு எப்போது யுனிவர்சிற்றி லீவு விடும் என்றிருக்கின்றது. உங்கள் கையால் சாப்பிட்டு எத்தனை நாளாகின்றது அம்மா. லீவு விட்ட உடனேயே பஸ் ஏறிடுவேன். அம்மா இப்போதெல்லாம் காலையில் எழும்பும் போதே ஏதோவொரு பாரம் நெஞ்ச அழுத்துகின்ற மாதிரி உணர்கின்றேன். நீங்கள் சொன்ன விடயத்தை திரும்ப திரும்ப யோசித்து பார்த்த நான் அம்மா. எனக்கு கல்யாணம் கட்டின பிறகு வெளிநாடு போக விரும்பம் இல்லாமல் இருக்கு. இதத்தான் அன்டைக்கும் அப்பாட்ட சொன்ன நேரம் எனக்கு ஏசினவர். திரும்பவும் அப்பாட்ட சொல்ல எனக்கு பயமாக இருக்கு. அம்மா முதல் ஒரு தடவை மாமாவுடன் அம்மமாக்கு மனத்தாங்கல் வந்த நேரம் “அம்மா என்னோட வந்து இருங்கோவன். நீங்க பொம்பிள பிள்ளையோட தானே இருக்கனும் என்னோட வந்து இருங்கம்மா” என்...