Posts

Showing posts from March, 2015

ஆயுத எழுத்து - என் பார்வையில்....

Image
விமர்சனங்கள் என்பது இப்போதெல்லாம் கட்டணங்கள் இல்லா விளம்பரங்கள்! ‘ஆயுத எழுத்து” குறித்த பல விமர்சனங்கள் தான் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தினை உருவாக்கியிருந்தது. பாடசாலைப் பருவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பதினேழு வருடங்கள் கள போராளியாக பணியாற்றிய முன்னாள் போராளியான சாத்திரி என்கின்ற புனைப்பெயர் கொண்ட கௌரிபால் சிறி எழுதி திலீபன் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த புத்தகம் கையில் கிடைத்தது முதல் இரவு பகலாக 391 + 1 பக்கத்தினை இரு நாட்களிலேயே வாசித்து முடித்து விட்டிருந்தாலும் ஏறத்தாழ இரு வாரங்களின் பின்னர் தான் இந்த விமர்சன பதிவினை எழுத ஆரம்பித்தேன். என்னுள் நிழலாக படிந்திருந்த ஏனையவர்களின்   விமர்சனங்களின் சாயல் மறைந்த பின்னர் தான் எழுத வேண்டும் என்கின்றதே இதற்கான முக்கிய காரணம். என் விமர்சனங்களை வரைய தொடங்குகின்றேன்…  இந்த நூலின் ஆசிரியர் “என்னுரை”யில் குறிப்பிட்டுள்ளதன் படி 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியினை தொடக்கமாக வைத்து தான் கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்ட முக்கிய விடயங்களை உள்ளடக...

கல்லடிப்பால கறுப்பன்....

Image
சில விடயங்களை நினைத்தவுடன் இசை நினைவிற்கு வரும் சிலநேரங்களின் அந்தந்த சம்பவங்களுக்கென வாசனைகள் உண்டு. சிலவற்றினை நினைக்கும் போது சில அடையாளங்கள் எம்மனக்கண்ணில் தோன்றும். அப்படி “மட்டக்களப்பு” என்றவுடன் எமக்குள் முதல் சிந்தையில் உதிப்பது “கல்லடிப்பாலம்”. கறுத்த கம்பீரமான அதன் தோற்றம் தான் பெரும்பாலும் “மட்டக்களப்பு’ என்பதன் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பிற்கு வராதவர்கள் இருப்பார்கள் ஆனால் கல்லடிப்பாலத்தினை படங்களில் சரி ஒரு தடவை பார்க்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். கடந்த சில வாரங்கள் நூலகத்தினுள் தொலைந்து கொண்டிருக்கும் எனக்கு இந்தக்கல்லடிப் பாலம் குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றினை தொகுத்தே இதை வரைகின்றேன். மட்டக்களப்பு நீர்வளம் நிறைந்த பிரதேசம் என்பது நாமனைவரும் அறிந்ததே. இது களப்பு அமைப்பிலும் அமைந்துள்ளதால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல வேண்டுமாயின் நீர் நிலைகளை கடந்தே செல்ல வேண்டும். ஆக போக்குவரத்து தேவையினை கருத்திற்கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் பாலம் அமைக்க தீர்மானித்தனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்லடிப்பாலம் கட்டுவதற்கான பணிகள் 1924 ஆம் ஆரம்...