Posts

Showing posts from August, 2014

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

Image
ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்ப கத்தின் (ETDRC) ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்தி ன் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தி னால் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம் ஸ்கொட்லாந்தில் இருந்து உலகெங்கும் சிறுவர்களின் வாழும் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசமாக புத்தகங்களை வழங்கும் புக்ஸ் எப்ரோட் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC)  ஏற்பாட்டில் ஈழத்தின் யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கும் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 83 பாடசாலைகளுக்கு சுமார் ஒருலட்சத்தி ஐம்பதினாயிரம் ஆங்கில நூல்களை கடந்தமாதம் நூல்களை வழங்கியுள்ளது. பல தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இந்த நூல்கள்  வடக்கு – கிழக்கு தமிழ்ப்பாடசாலைகளுக்கும், நூல் நிலையத்திற்கும்  சென்றடைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்னும் இந்நூல்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.  யாழ் நூலகத்திற்கு மாத்திரம் சிறுவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்காக 20,000 ஆங்கிலப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தக விந...